Sunday, 4 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 3rd MARCH 2018

இந்தியா-வியட்நாம் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • வியாட்நாம் பிரதமர் ட்ரான் டாய் குவாங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் முப்படை அணிவகுப்புடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராணுவம், எரிவாயு, விவசாயம், ஜவுளி உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.

இயற்கை பேரிடர்களை அறியும் செயற்கைகோள்: விண்ணில் செலுத்தியது நாசா

  • வானிலை நிலவரங்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறியும் வகையில், மேம்படுத்தப்பட்ட கோயஸ்-எஸ் என்ற செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.
  • கோயஸ்-எஸ் (GOES-S) செயற்கைகோள் அட்லஸ் 5 (ATLAS 5) ராக்கெட் மூலம் கேப் கேனவரலில் உள்ள தளத்தில் இருந்து ஏவப்பட்டது. வானிலை நிலவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கோயஸ்-எஸ் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய மதிப்பில் சுமார் 70,000 கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் ஏற்படும் புயல், காட்டுத் தீ, வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கு இந்த செயற்கை கோள் உதவும். 
ஆசியப் பெண்கள் மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை
  • ஆசியப் பெண்கள் மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவ்ஜோத் கவுர் க்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது.
  • கடந்த 2013 ஆம் வருடம் ஆசிய பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2014 ஆம் வருடம் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • சமீபத்தில் நடந்த ஆசிய பெண்கள் மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்துக் கொண்ட நவ்ஜோத் கவுர் ஜப்பான் வீராங்கனையை இறுதிச் சுற்றில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக, மேகாலயாவில் தொடரும் இழுபறி
  • கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தேர்தல் திரிபுரா மாநிலத்திலும், 27-ம் தேதி மேகாலயா மாநிலத்திலும், நாகாலாந்து மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்தன. திரிபுரா மாநிலத்தில் 74 சதவீத வாக்குகளும், மேகாலயா மாநிலத்தில் 67 சதவீத வாக்குகளும், நாகாலாந்து மாநிலத்தில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகின.
  • 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில், பாஜக மற்றும் மக்கள் முன்னணி கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக வெற்றி பெற்றது. அதாவது பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.
  • மேகாலயா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 21 இடங்களும், தேசிய மக்கள் கட்சி கூட்டணி 19 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 2 இடங்களும், பிற சிறிய கட்சிகளுக்கு 14 இடங்களும் மற்றும் சுயேச்சைகளுக்கு 3 இடங்களும் கிடைத்தன. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேகாலயா மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.\
  • நாகாலாந்து மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.
  • நாகாலாந்து மாநிலத்தில் பாஜக மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த கூட்டணி மொத்தம் 29 இடங்களை பெற்றுள்ளது. அதேவேளையில், நாகா மக்கள் முன்னணி கட்சி 27 இடங்களை பெற்றுள்ளது. மற்ற சிறிய கட்சிகள் 6 இடங்களை வென்றுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment