Friday, 2 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 2ndMARCH 2018



நிர்பயா நிதி: பெண்களின் பாதுகாப்புக்காக ரூ.2,900 கோடி 
  • நிர்பயா நிதியம் மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை செயலாளர் தலைமையிலான நிர்வாக குழு நேற்று அனுமதி வழங்கியது. இதன்மூலம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்கள் பயன் அடையும்.
  • டெல்லியில் ரூ.664 கோடியில் வீடியோ கண்காணிப்பு, குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
  • மும்பையில் ரூ.252 கோடியில் வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதேபோல கொல்கத்தாவில் ரூ.181.32 கோடியில் மகளிர் போலீஸ் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  • பெங்களூருவில் ரூ.667 கோடியில் மகளிர் போலீஸ் புறநகர் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
  • இதேபோல சென்னை, ஹைதராபாத், லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கப்பதக்கம்
  • ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கப்பதக்கம் வென்றார். 
  • இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை மியாவை 9-1 என்ற புள்ளி கணக்கில் நவ்ஜோத் வீழ்த்தினார்.

உலகிலேயே அதிக பெண்கள் கூடும் கேரளா பொங்கல் திருவிழா
  • கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழாவில் 30 லட்சம் பெண்கள் கலந்தகொண்டனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.
  • உலகிலேயே பெண்கள் அதிகளவில் கூடும் திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்த விழா கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
ஆடிட்டர்களை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பட்டய கணக்கர்களை (ஆடிட்டர்ஸ்) ஒழுங்கு படுத்தும் வகையில் தனி அமைப்பை மத்திய அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கும் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நேஷனல் ஃபைனான்சியல் ரிப்போர்ட்டிங் அத்தாரிட்டி (என்ஃஎப்ஆர்ஏ) என்று அந்த அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்காக வெள்ளி வென்ற ஒரே வீராங்கனை வினேஷ் போகட்
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்று ஆட்டத்தில் பிரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 2-3 என்ற கணக்கில் சீனாவின் சன் லீயிடம் வீழ்ந்தார்.
  • இந்த முறை இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவின் சார்பில் வெள்ளி வென்ற ஒரே வீராங்கனை இவரே.
  • இதையடுத்து, இறுதிச்சுற்றில் சீனாவின் சன் லீயை எதிர்கொண்டார். காலிறுதியில் 5-15 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நபிரா எசன்பாவாவிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் சங்கீதா, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தென் கொரியாவின் ஜீயனை எதிர்கொண்டார். பிரீ ஸ்டைலில் 59 கிலோ எடைப் பிரிவில் மோதிய அவர், ஜீயனை 9-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
  • மல்யுத்தத்தில் கிரேக்க-ரோமன் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. 82 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ஹர்பிரீத் சிங்கும், 55 கிலோ எடைப் பிரிவில் ராஜேந்திர குமாரும் வெண்லகம் வென்ற வீரர்கள் ஆவர். ஆக மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மீனவர்கள்: மண்டல் கமிஷன் பரிந்துரையை பரிசீலிக்க உத்தரவு
  • மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மீனவர்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவப் படிப்புக்கும் நிகழாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம்
  • சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கும் நிகழ் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே 2018-19-ஆம் கல்வியாண்டில் இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி 15 வகையான சான்றிதழ்கள் ஈஸியா வாங்கிக்கலாம்
  • இ-சேவை மையம் வழியாக பொதுமக்கள் விவசாய வருமானம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 
  • இனி விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகை சான்றிதழ்களை இணையதள மின் சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment