Tuesday, 13 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 12th MARCH 2018

சோழர் காலத்து கொற்றவை சிலை கண்டெடுப்பு
  • பெரணமல்லூரை அடுத்த எறும்பூர் கிராமத்தில் சோழர் காலத்து கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது.
  • பெரணமல்லூரை அடுத்த எறும்பூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் வடக்கு மதில் அருகே வெட்டவெளியில் கொற்றவை சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
  • இந்தக் கொற்றவை சிலையை காளி அல்லது துர்கை என்று அழைக்கின்றனர். இந்தச் சிலை கி.பி 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் சோழர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம்.
  • இதே கால கட்டத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பட்டீஸ்வரன் கோயில் குறித்த தொல்லியல் களப்பணி ஆய்வின் போது துர்கை அம்மன் கோயில் இருந்ததாகவும், அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளதாகவும், ராஜேந்திர சோழன் காலத்து வகையைச் சேர்ந்தது எனவும் கருதப்படுகிறது. 
  • இந்தப் பகுதியில் மக்கள் பழைமை வாய்ந்த இந்தக் கொற்றவை சிலையை துர்கை அம்மனாக வழிபட்டு வந்துள்ளனர்.
  • சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்தின் கடவுளாக கொற்றவை தெய்வம் இருந்துள்ளதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் காலத்திலும் கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. அந்த வகையில் சோழர், பல்லவர் காலத்தில் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள் இந்தச் சிலையை வழிபட்டு வந்திருக்க வேண்டும். தமிழில் கொற்றவையே முதன்மையான தெய்வம் என்றார் அவர்.
மகாநதி தீர்ப்பாயத்திற்கு தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் நியமனம்
  • மகாநதி தீர்ப்பாயத்திற்கு தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கரை மத்திய அரசு நியமித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தீர்ப்பாயம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
`உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய சூரியமின் சக்தி பூங்கா!' - பிரான்ஸ் அதிபருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கிவைப்பு
  • உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை, ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் வருடத்திற்கு 15.6 கோடி மெகாவாட் மின்சாரமும், மாதத்திற்கு 1.30 கோடி மெகாவாட் மின்சாரமும் உற்பத்திசெய்யப்பட்டு, மக்களின் தேவைக்காக வழங்கப்பட உள்ளது. 
  • இந்த மின்சக்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆகியோர் இன்று கூட்டாகத் திறந்துவைத்தனர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இளம் வீரர் தங்கம் வென்று அசத்தல்
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய இளம் வீரர் அகில் ஷியோரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 
  • இதையடுத்து, முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தங்கம் வென்ற 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றுள்ளார்.
  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நிறைவடைந்த இந்தப் போட்டியில் 4 தங்கம், ஒரு வெற்றி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 
  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுச் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது இது முதல் முறையாகும்.
  • இந்தப் போட்டியில் ஷாஸார் ரிஸ்வி, அகில் ஷியோரன், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகிய வீரர்களும், மானு பேக்கர் என்ற வீராங்கனையும் தங்கம் வென்றனர். 
  • வெள்ளியை அஞ்சும் முட்கில் என்ற வீராங்கனை கைப்பற்ற, ஜிது ராய், ரவி குமார் உள்ளிட்ட 3 பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ஊதிய உயர்வு தேவை இல்லை என மருத்துவர்கள் கூறும் நாடு எது தெரியுமா?
  • கனடா நாட்டில் உள்ளது யுபெக் மாநிலம். இங்குள்ள மருத்துவ மனைகளில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களின் ஊதியத்தை சமீபத்தில் கனடாவின் மருத்துவ அமைப்பு உயர்த்தியது. ஊதிய உயர்வு போதாது என உலகெங்கும் உள்ள ஊழியர்கள் கூறும் வேளையில் கனடா நாட்டு மருத்துவர்கள் இந்த ஊதிய உயர்வை தேவை இல்லை என மறுத்துள்ளனர்.
  • யுபெக் மாநில மருத்துவர்கள் சங்கம், "மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவமனைகளுக்கு தரவேண்டிய நிதியை குறைத்துள்ளது. இதனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கடும் சிரமம் ஏற்பாட்டுள்ளது. அந்த வசதிகளை ஏற்படுத்தாமல் எங்களுக்கு ஊதிய உயர்வை அரசு அளித்துள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும்.
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்வு
  • நாட்­டின், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, ஜன­வ­ரி­யில், 7.5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, 2017 டிசம்­ப­ரில், 7.1 சத­வீ­த­மா­க­வும், நவம்­ப­ரில், 25 மாதங்­களில் இல்­லாத அள­வில், 8.4 சத­வீ­த­மா­க­வும் அதி­க­ரித்­தி­ருந்­தது.தொழில் துறை உற்­பத்தி குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், தயா­ரிப்­புத் துறை, நான்­கில் மூன்று பங்கை கொண்­டுள்­ளது.
  • இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, 8.7 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, 2017 டிசம்­ப­ரில், 8.5 சத­வீ­த­மாக இருந்­தது.அதே சம­யம், இதே காலத்­தில், பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, 16.4 சத­வீ­தத்­தில் இருந்து, 14.6 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.மதிப்­பீட்டு மாதத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி, 10.5 சத­வீ­த­மாக உள்­ளது.நடப்பு, 2017- – 18ம் நிதி­ஆண்­டில், ஏப்., – ஜன., வரை­யி­லான, 10 மாதங்­களில், நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 4.1 சத­வீ­த­மாக உள்­ளது என, மத்­திய புள்­ளி­யி­யல் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment