Sunday, 4 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS MARCH 2018 TAMIL PDF - 4th MARCH 2018

"நவ கர்னாடகா விஷன் 2025" திட்டத்தை முதல்வர் சித்தராமையா வெளியிட்டார்
  • கர்னாடகாவில் இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசு கொண்டு வர உள்ள முன்னேற்ற திட்டங்களை குறித்து நவ கர்னாடகா விஷன் 2025 என்னும் வரைவு ஒன்றினை அமைத்துள்ளது. 
  • "கர்னாடகா அனைத்து துறைகளிலும் முதலிடம் வகித்து வருகிறது. இதற்காக நமது அரசு பெருமைப் படுகிறது. இந்த நவகர்னாடகா விஷன் 2025 மூலம் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களின் குறைகளும் விரைவில் தீர்க்கப்பட உள்ளது.
  • கடந்த தேர்தலின் போது இந்த அரசு 165 வாக்குறுதிகளை அளித்தோம் அவற்றில் 155 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. சுதந்திரம் அடைந்து 70 வருடம் ஆகி உள்ள நிலையில் இது போல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
  • இந்த நவகர்னாடகா விஷன் 2025 திட்டம் விவசாயம் மற்றும் உள்ள அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் மூலம் மின்சாரம், அரசமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, தகவல் துறை தொழில்நுட்பம், தொழில்துறை முன்னேற்றம். சுற்றுலாத்துறை, வேலைவாய்ப்புத் துறை, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் துறை, கல்வி, நீதித்துறை, சமூக நீதித்துறை உட்பட அனைத்திலும் கர்னாடகா தன்னிறைவு பெற்று முழு வளர்ச்சி அடையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைனில் பி.எப்., பணம் கோரும் வழி
  • பி.எப்., நிதியை நிர்­வ­கிக்கும், இ.பி.எப்.ஓ., அமைப்பு, உறுப்­பி­னர்கள், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான தொகையை விலக்கிக் கொள்ள விண்­ணப்­பிக்கும் போது, ‘ஆன்லைன்’ மூலம் கோரிக்­கையை தாக்கல் செய்­வது கட்­டாயம் என, அறி­வித்­துள்­ளது. 
  • பி.எப்., சேவை­களை காகி­தமில்­லாத பரி­வர்த்­தனை முறையில் அளிக்கும் நோக்­கத்­திற்கு ஏற்ப இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.பி.எப்., கணக்கில் உள்ள தொகையை விலக்கிக் கொள்ள தகுதி உடை­ய­வர்கள், இ.பி.எப்., இணை­ய­தளம் மூலம் இதற்­காக விண்­ணப்­பிக்­கலாம். 


மேகாலயா ஆட்சியை பிடித்தது பாஜக
  • மேகாலயாவில் ஆட்சி அமைக்கு பாஜக-வின் வடகிழக்கு கூட்டணி அனுமதி கோரிய நிலையில் பாஜக ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி வரும் 6-ம் தேதி ஆட்சி அமைக்கிறது!
  • 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில், காங்கிரஸ் 21 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றின. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றன. 
55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் காணாத நாகாலாந்து சட்டப்பேரவை
  • நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாகாலாந்தில் மொத்தமாக 60 தொகுதிகள் உள்ளன. 
  • இந்நிலையில் 55 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நாகாலாந்து சட்டப்பேரவைக்கு இந்த முறையும் கூட, பெண் ஒருவர் எம்எல்ஏவாக செல்ல முடியாத நிலை உள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment