Thursday, 1 March 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 28th FEBRUARY 2018



அக்., - டிச., காலாண்டில் ஜி.டி.பி., 7.2 சதவீதம் வளர்ச்சி
  • நடப்பு 2017- – 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான மூன்­றா­வது காலாண்­டில், ஜி.டி.பி., வளர்ச்சி, 7.2 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், ஜி.டி.பி., மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 5.7 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது.இது, ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், 6.3 சத­வீ­த­மாக உயர்ந்­தது.
  • மூன்­றாம் காலாண்­டில், ‘ஜி.வி.ஏ.,’ எனப்­படும், மொத்த மதிப்பு கூட்­டல் வளர்ச்சி, 6.7 சத­வீ­த­மாக உள்ளது. இது, இரண்­டாம் காலாண்­டில், 6.1 சத­வீ­த­மாக இருந்­தது.
"பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம்" மேலும் மூன்று வருடங்கள் நீடிப்பு
  • பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
  • தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட சேவைகள், தகவல் சேவை உள்ளிட 12 துறைகளை (சேம்பியன் சேவை துறைகள்) தேர்ந்தெடுத்து அவற்றின் மீது கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்துவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துதது.
  • இதற்கு உதவுவதற்காக ரூ.5 ஆயிரம் கோடியில் ஒரு நிதியம் உருவாக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
  • மத்திய குறு சிறு மற்றும் மத்தியதர நிறுவனங்கள் துறை அமைச்சகம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தை 2008-09 ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.
  • இந்த திட்டத்தை 2017-18, 2018-19, 2019-20 என மூன்று நிதி ஆண்டுகளுக்கு நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • இந்த திட்டம் காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது மானியத்துடனான கடன் திட்டம் ஆகும்.
  • 3 வருட காலம் இந்த திட்டத்தை நீட்டிப்பதற்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் 3 ஆண்டுகளில் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்வதற்கு 'நபெட்' அமைப்புக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 500 கோடி கேரண்டி (உத்தரவாதம்) அளித்து வந்தது.
  • இந்த உத்தரவாதத்தை ரூ.19 ஆயிரம் கோடி என்ற அளவில் (இரு மடங்கு) உயர்த்துவதற்கும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு தனது ஒப்புதலை அளித்துள்ளது.


தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்: மாநில அளவிலான குழு அமைப்பு
  • தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசுப் பணியில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றவராவார்.
  • குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.வாசுகி செயல்படுவார். வேலூர் காந்திநகரைச் சேர்ந்த ப்ரியா செல்வி (எஸ்.சி., வகுப்பைச் சேர்ந்தவர்), திருச்சி துறையூரைச் சேர்ந்த எம்.கணேசன் (எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்), சென்னை முகப்பேரைச் சேர்ந்த டாக்டர் கே.பாலாஜி சிங், நாகை மாவட்டம் கயத்தூரைச் சேர்ந்த எஸ்.ஆசைமணி, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த ஜி.ராஜமோகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
  • 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.5,500 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மனிதக்கழிவை அகற்ற ரோபாவை அறிமுகம் செய்த கேரளா
  • மனிதக் கழிவுகளை அகற்ற நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் ரோபோவை அறிமுகம் செய்திருப்பதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். 
ஏப்ரல் 15ந்தேதி முதல் ஏர்செல் நிரந்தர மூடல்: டிராய் அறிவிப்பு
  • இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் அடுத்த மாதம் (மார்ச்) 15ந்தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment