Thursday, 1 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 31th JANUARY 2018

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம்
 • தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப்டவுன். இந்த நகரத்தில்தான் தண்ணீர் தீர்ந்து போகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் நகராகமாக கேப்டவுன் நகரம் உள்ளது. இதனால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
 • கேப்டவுன் நகரில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. இதனால், நீர் மக்களின் தேவைக்கேற்ப அளந்தே திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
 • தற்போது 80 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் (பிப்ரவரி) 50 லிட்டராக குறைக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், கேப்டவுன் மக்கள் பல வழிகளில் நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர். 
 • வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்து போகும் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பும், பருவநிலை மாற்றம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிப்பு
 • தமிழகத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ கல்வி முறைகேடு: நீதிபதி சுக்லாவை நீக்குமாறு குடியரசு தலைவருக்கு நீதிபதி மிஸ்ரா கடிதம்
 • நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள, அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி விவகாரத்தில், அவரை பதவியை விட்டு நீக்குமாறு, உச்சநீதி மன்ற தலைம நீதிபதி மிஸ்ரா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
 • தற்போதைய சென்னை ஐகோர்ட்டின் தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்த குழுவின் விசாரணையை தொடர்ந்து, அவர்மீதான குற்றச் சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவரை பதவி விலகுமாறு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார்.
உலக பணக்கார நாடுகள் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்த இந்தியா
 • உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளது. 
 • உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் மதிப்பு 64,854 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 
ஐ.என்.எஸ். 'கரன்ஜ்' நீர்முழ்கி கப்பல் மும்பையில் சோதனை
 • நீர்பரப்பிலும், நிலத்திலும் இருந்துகொண்டே போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். 'கரன்ஜ்' நீர்முழ்கி கப்பலின் சோதனை மும்பையில் நடைபெற்றது.
ஏலகிரி மலையில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு
 • ஏலகிரி மலையிலுள்ள அத்தனாவூரில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர் காலத்து நடுகல் ஒன்றைத் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர், க.மோகன்காந்தியும், மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் நீலமேகமும் கண்டறிந்துள்ளனர்.
 • ஏலகிரி மலையிலுள்ள அத்தனாவூரில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்று உள்ளது. இந்நடுகல் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பலகைக் கல்லில் நேர்த்தியுடன் செதுக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். 
கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக்
 • கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் மற்றும் அதுசார்ந்த சேவைகளுக்கான விளம்பரங்கள் இனி தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
 • சமீபத்தில் பிட்காயின் மதிப்பு அதீதமாக உயர்ந்ததையடுத்து புதிய மெய்நிகர் நாணயங்கள் அதிகளவில் புழங்க ஆரம்பித்தன. ஃபேஸ்புக்கில் கிரிப்டோ கரன்சிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களை பார்க்கும் பயன்பாட்டாளர்கள் அது குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கும்படி பயனர்களை ஃபேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment