Tuesday, 20 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 17th & 18th FEBRUARY 2018

இந்தியாவில் முதன்முறையாக 'ஹைபர் லூப்' போக்குவரத்து: பிரதமர்  அடிக்கல் நாட்டுகிறார்
  • இந்தியாவில் அதிவேக பயணம் மேற்கொள்ளும் ஹைபர் லூப் போக்குவரத்து முதன்முதலாக மும்பை - புனே இடையே தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் மோடி நாட்டுகிறார்.
  • இந்தியாவில் ஹைபர்லூப் போக்குவரத்து சேவையை செயல்படுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த விர்ஜின் குரூப் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்குகிறதுழ.
  • ஏற்கனவே துபாய் - அபுதாபி இடையே இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலும் ஹைபர் லூப் போக்குவரத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.
  • "ஒரு குழாயினுள் உள்ள காந்தப்புலத்தினுள் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் மிதந்துசெல்லும் ஒரு வாகனப் பயணமே ஹைப்பர் லூப்' எனப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவிலும் வர உள்ளது.
  • ஹைப்பர் லூப் சேவை தொடங்கினால் இரு நகரங்களுக்கிடையிலான 3 மணி நேர பயண தூரம் 20 நிமிடங்களாக குறையும் என்று கூறப்படுகிறது.
  • இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்கட்டமாக நவிமும்பை விமான நிலையம் முதல் மத்திய புனே வரை இணைக்கும் வகையிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் இன்று அடிக்கல் நாட்டுகிறார். ஆனால், இந்த பணிக்காண செலவு விவரம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

டில்லியில் நடக்கிறது வேளாண் கருத்தரங்கு
  • விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அறிவிக்கும் திட்டம் குறித்தான கருத்தரங்கு இன்று டில்லியில் துவங்குகிறது.
  • நாடு முழுவதும், 2022க்குள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை, இரு மடங்கு அதிகரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு, கையில் எடுத்துள்ளது.
  • இதை மனதில் வைத்து பட்ஜெட்டில், பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கிறது.
  • இதற்காக நாடு முழுவதும் உள்ள வேளாண்துறை அதிகாரிகள், வல்லுனர்கள், விவசாயிகள் பங்கேற்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று, டில்லியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், துவங்குகிறது.
  • இதில் பிரதமர் மோடி நாளை பங்கேற்று விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்து கேட்க உள்ளார். இதில், தமிழக வேளாண் துறை அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் விவசாயிகளும் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

சேலத்தில் பொலிவுறு நகர திட்டத்தில் ரூ.1,908 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: முதல்வர்
  • சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) திட்டத்தில் ரூ.1,908.60 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
  • சேலம் பள்ளப்பட்டியில் மாநகராட்சிக்கு உள்பட்ட 362 சாலைகளை ரூ.94.39 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

மோடி கேர் சுகாதார திட்டத்தில் இணைய மேற்கு வங்கம், கர்னாடகா மறுப்பு
  • மோடி கேர் என அழைக்கப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய மேற்கு வங்க அரசும், கர்னாடக அரசும் மறுப்பு தெரிவித்துள்ளன.
  • இந்த மாதம் 1ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு மிகப் பெரிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டது. 
  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என அழைக்கப்பட்ட இத்திட்டத்துக்கு மோடி கேர் என பெயர் சூட்டப்பட்டது. வரும் சுதந்திர தினத்தன்று இத்திட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப் படும் என அரசு அறிவித்துள்ளது.
  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டத்தில் சேரப் போவதில்லை என ஏற்கனவே கூறி இருந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே இது போல மருத்துவக் காப்பிடு திட்டம் உள்ளதால் தமது மாநிலம் இந்த திட்டத்தில் சேராது என அறிவித்திருந்தார். 
  • தற்போது கர்னாடகா அரசும் இந்த மோடிகேர் திட்டத்தில் இணைய மறுத்துள்ளது. கர்னாடகாவில் ஏற்கனவே இது போல திட்டம் செயல்படுவதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

36 வயதில் `நம்பர் ஒன்': வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்
  • டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் அரங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
  • ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். வயது 36. இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். 
  • டென்னிஸ் அரங்கில் அசாத்திய வீரராகத் திகழ்ந்த ஃபெடரருக்கு இடைப்பட்ட காலத்தில் சறுக்கல் ஏற்பட்டது. தொடர் தோல்விகள் வந்து சேர்ந்தன. தரவரிசையிலும் கீழே சரிந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் கிடைத்த வெற்றி ஃபெடரர்மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இதன் மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனை ஃபெடரர் வசமாகியிருக்கிறது. இதற்கு முன்பு ஆந்த்ரே அகாஸி தன் 33 வயதில் நம்பர் ஒன் வீரராக இருந்ததே சாதனையாக இருந்தது.

இந்தியா, ஈரான் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தார். பின்னர் ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
  • இதனையடுத்து நேற்று கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களை பார்வையிட்ட அவர், சார்மினார் அருகேயுள்ள பிரபல மெக்கா மசூதியில் நடைபெற்ற ‘ஜும்மா’ தொழுகையில் பங்கேற்றார்.
  • இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி வந்தடைந்த அவரை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
  • இச்சந்திப்பின்போது வர்த்தகம், பாதுகாப்பு, நாட்டின் ஆற்றல் ஆகிய முக்கிய பகுதிகளை முன்னேற்றும் பொருட்டு, இரட்டை வரி விலக்கு உட்பட 9 ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment