Thursday, 8 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 6th & 7th FEBRUARY 2018

மத்திய அரசின் அடுத்த அதிரடி: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க முடிவு
  • வாகன ஓட்டுநர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைக்க தற்போது மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் போலி ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடக்கம்
  • சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு சார்பில் தொல்லியலாளர்கள், கல்லூரி ஆய்வு மாணவர்கள் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சங்க காலத் தமிழர்களின் நாகரிகம், வாழிடம் போன்றவை குறித்து மூன்று கட்டங்களாக அகழாய்வில் ஈடுபட்டனர். இதற்காக 150க்கும் மேற்பட்ட அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. 
  • இதைத் தொடர்ந்து 4ஆம் கட்ட ஆய்வுகளுக்காக தமிழக அரசு ரூ.55 லட்சத்தை தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வோருக்கான ஊதியம், போக்குவரத்து செலவு, தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட செலவுகள் அடங்கும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான்காம் கட்ட ஆய்வுகள் சில நாள்களில் தொடங்கப்படும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர். 
கிராமப்புற பெண்களுக்கு இலவச, 'இன்டர்நெட்' பயிற்சி அசத்தல்! தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது, 'கூகுள்'
  • தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில், கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு, இலவசமாக,'இன்டர்நெட்' பயிற்சி அளிக்க, 'கூகுள்' நிறுவனம் முன் வந்துள்ளது.
  • கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, 'இன்டர்நெட்' பயிற்சி அளிப்பது உட்பட, பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஏற்கனவே, 'இன்டர்நெட் சாத்தி' திட்டத்தில், இந்தியாவில், 1.40 லட்சம் கிராமங்களில், 1.35 கோடி பெண்களுக்கு, இலவசமாக இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் கிராமப்புற பெண்களுக்கு, இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • புதிய மருத்துவக் கல்லூரிகள் 18,058 மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
வருகிறது டிஜிட்டல் கல்வி சான்றிதழ்... ஐஐடிகளில் முதல்கட்டமாக அமல்படுத்தப்படுத்த முடிவு
  • முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
  • கல்வித்துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2019ம் கல்வியாண்டு முதல் சோதனை முயற்சியாக இத்தகைய சான்றிதழை வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஐஐடிகளில் இந்த முயற்சி அமல்படுத்தப்படும் என்றும், அடுத்தப்படியாக டில்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இந்த கல்வி சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி
  • தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பதுவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி புது உலகசாதனை படைத்து அசத்தினார்.
  • இப்போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றிய இந்திய பெண்கள் அணியின் சீனியர் வீராங்கனைகளில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி, ஒருநாள் அரங்கில் தனது 200வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார். 
  • இதே போல் ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்வி 2 ஏவுகணை சோதனை சக்ஸஸ் இந்திய ராணுவம் அறிவிப்பு
  • அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிஸா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி அடைந்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
  • பிரித்வி 2 ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏவுகணையை ஒடிஸா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்திய ராணுவத்தின் ஸ்திர படைகள் காமான்டர்கள் சோதனை செய்தனர். அப்போது கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.
  • இதே இடத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அக்னி- 5 ஏவுகணையும், பிப்ரவரி 6-ஆம் தேதி அக்னி 1 ஏவுகணையும், பிப்ரவரி 7-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்த ஏவுகணை 80 டிகிரி ஆங்கிளில் செல்கிறது. மேலும் 500 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டது. திரவ எரிப்பொருளால் இயங்கும் தன்மை கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை டிஆர்டிஓ உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
  • 9 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் வல்லமை கொண்டது. கடற்படையினரின் பிரித்வி 2 ஏவுகணை தனுஷ் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு
  • வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி 6%-ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
  • ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியில் மாற்றம் இல்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 
விண்ணில் பாய்ந்தது உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட்
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
  • விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் 27 எஞ்சின்களைக் கொண்ட ராக்கெட்டை தயாரித்தது. ஃபிளாரிடா மாகாணம் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ 2,548 கோடி நிதி ஒதுக்கீடு
  • மத்திய நிதிநிலை அறிக்கையில், 2018 - 2019 ஆம் ஆண்டுக்கு தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
  • 2018 - 2019-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை பிப்.1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒட்டுமொத்தமாக இந்திய ரயில்வே துறைக்கு ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
  • 27 ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு: இந்நிதியில், மிக முக்கியமாக ரூ 376 கோடி செலவில், பெங்களூரில் உள்ள பையப்பனஹள்ளியில் இருந்து ஓசூருக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.20 ஆயிரத்து 64 கோடி மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் 3 ஆயிரத்து 198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
பங்குச்சந்தையில் தொடர் வீழ்ச்சி : முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு
  • தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும் பங்குச்சந்தை குறியீட்டெண் சரிந்ததது. இதனால் நேற்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இம்மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று வரை சென்செக்ஸ் குறியீட்டெண் 1,710 புள்ளிகளை இழந்துள்ளது. 
தாளவாடியில் மூன்றாம் நூற்றாண்டு கல் செக்கு கண்டுபிடிப்பு
  • தாளவாடி மலைக்கிராமத்தில் மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததை வெளிப்படுத்தும், கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய கல் செக்கு கண்டறியப்பட்டுள்ளது.
  • ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மரூர் கிராமம் அருகே தொல்லியல் மேடு ஒன்றைக் கண்ட வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறனர். 
  • அந்த ஆய்வில் மரூர் கிராமத்தில், சுமார் 4 அடி உயரமுள்ள கல் செக்கு ஒன்றின் கீழ்ப்பகுதியில் தமிழ் பிராமி போன்ற குறியீடுகள் காணப்பட்டன. 
  • கண்ணாடிபிம்பத் தோற்றத்தில் 'கோனு' என்று படித்தறிந்தனர். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் இவை என்றும், ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் கிடைத்த நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இசைக் கல்வெட்டே பழமையானதாகக் கருதப்பட்டு வந்தது. 
  • ஆனால் இக் கல்வெட்டு அதற்கும் முந்தையது, கிட்டத்தட்ட 1,700ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்பைப் பெறுகிறது.
எஸ்.சி சிறப்பு உதவி திட்டத்துக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • எஸ்.சி சிறப்பு நிதியுதவி திட்டத்துக்கு 2017-18ம் நிதியாண்டில் மொத்தம் 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி இறுதி வரையிலான செலவுகளுக்கு 65 ஆயிரத்து மூன்று கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது. 
  • எஸ்.சி மாணவர்கள் கல்வித் உதவித் தொகை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment