Monday, 5 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 5th FEBRUARY 2018

ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்
  • ஜி.எஸ்.டி. மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.9.8 லட்சம் கோடி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. 
  • தமிழகத்தில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.19 ஆயிரத்து 355.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
  • ஆனால் வசூல் ஆன தொகையோ ரூ. 19 ஆயிரத்து 592.58 கோடி. கூடுதலாக ரூ.237 கோடி வசூலாகி இருக்கிறது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் அதிக வருவாயை ஏற்படுத்திய மாநிலங்களில் முதல் இடத்தில் மராட்டியமும் (16 சதவீதம்), இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் (10 சதவீதம்), மூன்றாவது இடத்தில் கர்நாடகமும் (9 சதவீதம்) இடம் பெற்றிருக்கிறது.
சிறந்த நெசவாளர் தேசிய விருது காஞ்சி பெண்ணுக்கு கிடைத்தது
  • 2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதில், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு, நாடு முழுவதும், 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த, கே.மகேஸ்வரி, சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
  • சிறந்த கைத்தறி நெசவாளர் தேசிய விருது பெறும் பெண்ணுக்கு, விருதுடன், 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.சிறந்த வடிவமைப்புக்கான தேசிய தரச்சான்றிதழ் பெறுவோருக்கு, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்- அதிபர் யாமின் அதிரடி உத்தரவு -  உச்சநீதிமன்றத்தை கைப்பற்றியது ராணுவம்
  • மாலத்தீவில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை இரவோடு இரவாக ராணுவம் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
  • அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 12 எம்.பி.க்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்தும் மாலத்தீவு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர் யாமின் ஏற்க மறுத்துவிட்டார்.
  • இதையடுத்து நாட்டில் அவசர நிலையை அதியர் யாமின் பிரகடனம் செய்துள்ளார். அடுத்த 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என அதிபர் யாமின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர விரிவாக்கம்: அரசாணை வெளியீடு
  • சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அர்கோகணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
  • இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். 
  • மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment