Sunday, 4 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 4th FEBRUARY 2018

அசாம் மாநிலத்தில் ரூ.1,950 கோடி செலவில் இரட்ரை வர்த்தக மைய கோபுரம்
  • அசாம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் பூட்டான் பிரதமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முடிவில் கவுகாத்தி நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தென் கிழக்கு நாடுகளுக்கான புதிய வர்த்தக மற்றும் வணிக நுழைவு வாயில் என்ற திட்டத்துடன் பொருளாதார இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது.
  • இதற்காக மாநில அரசு 10.6 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. ரூ.1,950 கோடி செலவில் 65மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இம் மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள், மாநகர மையம், ஷாப்பிங் மால்கள் அடுக்கு மாடி குடியிருப்பு, 4 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.
பசுக்களுக்கும் ரூ.50 கோடி செலவில் அடையாள அட்டை
  • இந்தியாவில் உள்ள 4 கோடி பசுக்களுக்கு முதல்கட்டமாக 50 கோடி செலவில் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியன் ஓப்பன் பேட்மின்டன்: சிந்துவுக்கு வெள்ளி
  • இந்தியன் ஓப்பன் சீரீஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், அமெரிக்க வீராங்கனை பெய்வன் சாங்கிடம் 21-18,11-21,21-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு மும்பை ஏர்போர்ட் சாதனை
  • உலகளவில் ஒரு ஓடுபாதையை கொண்டு மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் மும்பை விமானநிலையமும் ஒன்று. இந்தியாவில் இது 2வது பெரிய விமான நிலையமாகும். கடந்த மாதம் 20ம் தேதியன்று மும்பை விமானநிலையம் புதிய சாதனை படைத்துள்ளது.
  • அன்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டுள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் 6ம் தேதி ஒரே நாளில் 974 விமானங்களை கையாண்டதே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது இந்த விமான நிலையம்.
விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்
  • விண்வெளியில் ரஷியாவை 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.
  • 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் அங்கு தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் தற்போது விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
  • நேற்று அவர்கள் 2 பேரும் ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்து முந்தைய சாதனையை முறியடித்தனர். இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் அவர்கள் படைத்த சாதனை மிகப்பெரியது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment