Tuesday, 20 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 20th FEBRUARY 2018

தேவையற்ற அரசு பணியிடங்கள் கண்டறிய குழு அமைத்தது அரசு
  • தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறிய, தமிழக அரசு தனி குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு, ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அதை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவதற்கான அறிக்கை அளிக்க, 2017ல், தமிழக அரசு சார்பில், குழு அமைக்கப்பட்டிருந்தது.
  • அந்தக் குழுவின் அறிக்கைப்படி, ஊதிய உயர்வு அமலானது. மேலும், 'அரசு துறைகளில் தேவையற்ற பதவிகளை கண்டறிந்து, ஆட்குறைப்பு செய்து, செலவை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, தனி குழுவை அமைக்க வேண்டும்' என்றும், பரிந்துரைசெய்திருந்தது.
  • இதன்படி, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆதிசேஷய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் செயலராக, நிதி செலவினத்துறை செயலர், சித்திக் செயல்படுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு, அரசு துறைகளில், தேவையற்ற பதவிகளை கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
  • அத்துடன், எந்த பதவிகளுக்கு எல்லாம், ஒப்பந்த அடிப்படையிலும், அயல் பணி முறையிலும், ஆட்களை நியமனம் செய்து, செலவை குறைக்கலாம் என்றும், அரசுக்கு பரிந்துரைக்கும். இக்குழு, ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
  • ஊதிய முரண்பாடு களைய குழுஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
  • 'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, நிதித்துறை செயலர், சண்முகம் உத்தரவிட்டுள்ளார்
கோஹ்லி '900' * தரவரிசையில் புதிய சாதனை
  • ஐ.சி.சி., டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், 900 புள்ளியை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் கேப்டன் விராத் கோஹ்லி.
  • ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசைப்பட்டியலை ('ரேங்கிங்') சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 558 ரன் குவித்த இவர், 33 புள்ளிகள் கூடுதலாக பெற்று 909 புள்ளியை எட்டினார். 
  • ஏற்கனவே, இவர் டெஸ்ட் 'ரேங்கிங்கில்' 912 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதன் மூலம், ஒரு நாள், டெஸ்ட் என இரண்டு விதமான போட்டியிலும் 900 புள்ளியை தாண்டிய முதலாவது இந்திய வீரரானார். சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார். ஏற்கனவே, தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் இந்த இலக்கை எட்டி இருந்தார்.
  • தவிர, ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டியில் அதிக புள்ளிகள் எடுத்த வீரர்கள் பட்டியலில், 7வது இடத்தில் கோஹ்லி உள்ளார். இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்(935 புள்ளி, 1985) முதலிடத்தில் உள்ளார்.
  • பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இரண்டு இடம் முன்னேறி 'நம்பர்-1' இடத்தை அடைந்தார். ஆப்கன் 'சுழல்' வீரர் ரஷித் கான், 8 இடம் முன்னேற்றம் அடைந்தார். தசம புள்ளி வித்தியாசத்தில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதன் மூலம், குறைந்த வயதில் (19 வயது) இந்த இலக்கை எட்டிய பவுலர் என்ற சாதனை படைத்தார்.
பள்ளிகளில் சேர தடுப்பூசி கட்டாயம்: கேரள அரசு அதிரடி
  • கேரள மாநிலத்தில் பள்ளிகளில் சேருவதற்கு தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
  • புதிய சுகாதார கொள்கையை வெளியிட்டு பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, மாநிலத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், முழு நோய் தடுப்பை உறுதி செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். 
உ.பி முதலீட்டாளர்கள் மாநாட்டினை துவங்கி வைக்கிறார் பிரதமர்
  • நாளை லக்னோவில் நடைப்பெறவுள்ள, உபி முதலீட்டாளர்கள் மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைக்கின்றார்! இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் இருதி நாளான பிப்.,22 அன்று குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
  • உத்திரபிரதேச மாநிலம் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தால் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. மாநிலத்தின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்த இந்த மாநாடு உதவும்.
வங்கி அதிகாரிகள் தேர்வு குழுவை கலைக்க மத்திய அரசு முடிவு
  • வங்கிகள் வாரியம் பணியாகக் குழு (பிபிபி) 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அரசு வங்கிகளின் ஆளுமைத் திட்டத்தை மேம்படுத்தவும், முக்கிய வங்கிகளின் தலைமை நிர்வாகி நியமனங்களில் அரசுக்கு உதவும் நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைவராக முன்னாள் சிஏஜி வினோத் ராய் நியமனம் செய்யப்பட்டார். இதில் நிதியமைச்சக நிதியக சேவைகள் துறை செயலாளர், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் மற்றும் மூத்த வங்கி நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
  • எஸ்பிஐ தலைவராக இருந்த அருந்ததி பட்டாச்சார்யா கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இவருக்கு பதிலாக இ ந்த பதவிக்கு ரஜினிஷ்குமாரை கடந்த ஜூலை மாதம் பிபிபி தேர்தவு செய்தது. ஆனால், இந்த அறிவிப்பை மத்திய அமைச்சரவையின் நியமன குழு அக்டோபர் 4ம் தேதி அறிவித்தது.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் நடந்த மோசடி இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமை ந்துள்ளது. அதோடு வினோத் ராய் இடத்தை நிரப்ப தகுதியான நபரை தேர்வு செய்ய முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. அதனால் பிபிபி அமைப்பை கலைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆதிச்சநல்லூர் மறு அகழாய்வுத் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு
  • நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் மறு அகழாய்வு செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
  • ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வு பொருட்களின் வயதை கணக்கில் எடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு அனுப்ப நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
  • கீழடியில் மறுஅகழாய்வு செய்ய மத்திய அரசு விரும்பாததால் திட்டம் கைவிடப்பட்டது போல ஆதிச்சநல்லூரிலும் நடந்துவிடக் கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி
  • அக்னி 2 ஏவுகணையாந்து அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று சுமார் 2000 கிமீ தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உடையது. 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை 17 டன் எடை உள்ளது. இதனால் 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல முடியும்.
  • இந்த ஏவுகணை இன்று மூன்றாம் கட்டமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஒரு மாதத்துக்குள் செய்யப்பட்ட இந்த மூன்றாவது கட்ட சோதனை ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் நடைபெற்றது. இந்த சோதனையிலும் இது வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த அக்னி 2 ஏவுகணை முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும்.
மார்ச் மாதத்தில் நடக்கிறது ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு
  • மார்ச் மாதத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாடு நடக்கிறது என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • வரும் மார்ச் 5,6,7 ல் தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாடு சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்கவுள்ளது.
  • முதல் நாள் கலெக்டர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டமும், மறுநாள் (6ம் தேதி ) கலெக்டர்கள் கூட்டமும், (7ம் தேதி ) போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டமும் நடக்கிறது. இத்தகவலை அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment