Saturday, 3 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 2nd FEBRUARY 2018

ரூ.36.54 கோடியில் 9 அடுக்கு வாகன நிறுத்துமிடம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
  • சென்னை பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ், தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில், ரூ.36.54 கோடி மதிப்பீட்டில் 9 அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 
  • இத்திட்டம், பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு ரூ.36.54 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணி ஆணை கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது. 

இ - சேவை' திட்டத்தில்15 சான்றுகள் வழங்கல்
  • வருவாய் துறையில் புதிதாக, குடிபெயர்ப்பு, விதவை சான்று உட்பட, 15 சான்றுகள், 'இ - கவர்னன்ஸ்' திட்டத்தில் வழங்கப்பட உள்ளன. 'அனைத்து துறைகளிலும், 300க்கும் மேற்பட்ட சேவைகள், இ - கவர்னன்ஸ் திட்டத்தில் இணைக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. 
  • விவசாய வருமானம் : அதன்படி, வருவாய் துறையில், ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றுகள், இ - கவர்னன்ஸ் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. தற்போது, இந்த சேவைகள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், வறுமை ஒழிப்பு சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் செயல்படும், இ - சேவை மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. 
  • மேலும், வருவாய் துறையில், குடிபெயர்ப்பு, விதவை, ஆண் குழந்தை இல்லா சான்று, திருமணமாகாதோர், கலப்பு திருமணம், வாரிசு, விவசாய வருமானம், வேலையில்லாதோர் சான்று. சால்வன்சி, அடகு கடை, இதர பிற்பட்டோர், சிறு, குறு விவசாயிகள் சான்று உள்ளிட்ட, 15 சான்றுகள் 

பட்ஜெட்: விமானப் போக்குவரத்துக்கு ரூ.6,602 கோடி ஒதுக்கீடு
  • பட்ஜெட்டில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.6,602.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டை விட இது 3 மடங்கு அதிகமாகும். இதில் ரூ.4,469.50 கோடி செலவில் விவிஐபி.க்கள் பயணிக்க போயிங் ரக விமானங்கள் 2 வாங்கப்படும்.
  • பிராந்திய விமான இணைப்பு திட்டங்களுக்கு ஆயிரத்து 14 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏர்-இந்தியாவுக்கு உதவிட கடந்தாண்டு ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இது ரூ.650 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வாய்ப்பு இல்லை- மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 2006ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • ''சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை கிடைக்கப்பெற்று, அது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • தலைமை நீதிபதியிடம் இருந்து 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி கடிதம் வரப்பெற்றது. இதில் 11.10.2012ம் தேதி அனைத்து நீதிபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இந்த கோரிக்கை ஏற்க முடியாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று அந்த பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை : சுகாதார பாதுகாப்பு திட்டம் ஆக்.2-ஆம் தேதி அமல்
  • மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேரி கோம்
  • இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவினருக்கான இறுதி ஆட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவாவை எதிர்கொண்ட இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனை மேரிக்கோம், அவரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். 
  • இவர் எற்கனவே இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ளார், மேலும் இவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், அர்ஜுனா ஆகிய விருதுகள் வழங்கபட்டுள்ளது. 
  • 35 வயதான மேரி கோம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடையில்லை என நிருபித்துள்ளார், இந்நிலையில் இவரின் தங்க பதக்க பட்டியலில் மேலும் ஒரு தங்க பதக்கம் இந்தியாவிற்காக சேர்ந்துள்ளது.

உலகில் அதிக பெண் பைலட்டுகள் உள்ள நாடு எது தெரியுமா?
  • இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது.
தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்பாதை
  • நாட்டில் இரண்டு ராணுவ தளவாட தொழிற்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும். இத்துடன் ராணுவ தளவாட தொழிற்சாலைகளுடன் நட்புறவு பேணும் வகையில், ராணுவ தளவாட உற்பத்தி கொள்கை - 2018 விரைவில் அறிவிக்கப்படும்.
  • இது, உள்நாட்டில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூலம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய உறுதுணையாக இருக்கும்' என்றார்.
  • பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நாட்டின் முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை தமிழகத்தில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment