Monday, 12 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 10th, 11th & 12th FEBRUARY 2018

2019-இல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு
 • இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ஜனவரி 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மத்திய அரசு ஒப்பந்தம்
 • வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் எண்ணெய் துரப்பனப் பணியில், 10 சதவீதம் பங்கு கிடைக்கும் வகையிலான முதலீடு செய்யும் ஒப்பந்தம் உட்பட, ஐந்து ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது கையெழுத்தாகின.
 • பேச்சசன்வாஸி ஸ்ரீ அக் ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா' என்ற சமூக, ஆன்மிக ஹிந்து அமைப்பு சார்பில் இந்தக் கோவில் அமைக்கப்பட உள்ளது.
 • இந்த அமைப்பின் சார்பில், டில்லியில் உள்ள சுவாமி நாராயண் கோவில் உட்பட, உலகெங்கும், 1,௦௦௦க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.துபாய் - அபுதாபி நெடுஞ்சாலையில், அமைய உள்ள இந்தக் கோவில், வரும், 2020க்குள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கான நிலம் இலவசமாக தரப்பட்டுள்ளது.
உலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு
 • தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும். வரும் சில வாரங்களில் இங்கு வாழும் மக்களுக்கு, குடிநீரே கிடைக்காமல் போகலாம்.
 • பிரேசிலின் பொருளாதார தலைநகரமாக அழைக்கப்படும் ஸா பாலோ, உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஒன்று. கேப் டவுனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை, 2015-ம் ஆண்டு ஸா பாலோ நகரத்திலும் ஏற்பட்டது. அப்போது இங்கிருந்த முக்கிய ஏரியும் 4% தண்ணீர் மட்டுமே இருந்தது.
 • பெங்களூரு நகரத்தின் வளர்ச்சி, அங்குள்ள நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமான இங்கு, வடிகால் வசதி மற்றும் குடிநீர் வசதியை சிறப்பானதாக மாற்ற பல மாற்றங்களை செய்து வருகின்றனர்.
 • இந்தியாவில் உள்ள தண்ணீர் மாசு பிரச்சனைக்கு பெங்களூரு மட்டும் விதிவிலக்கல்ல. இங்குள்ள 85% ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றவை அல்ல என்றும், இதனைப் பாசனத்திற்கும், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
 • ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டருக்கு குறைவாகச் சென்றால், அங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என உலக வங்கி நம்புகிறது.
 • எகிப்துக்கு தேவையான 97% தண்ணீர் நைல் நதி மூலமே கிடைக்கிறது. ஆனால், தற்போது மாசடைந்த நைல் நதி தண்ணீரே விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கிடைக்கிறது.
 • கடற்கரையில் உள்ள மற்ற நகரங்கள் சந்திக்கும் பிரச்சனையைப் போலவே, கடல் நீர்மட்டம் உயர்ந்து வரும் சவாலை ஜகார்த்தாவும் எதிர்கொண்டுள்ளது.
 • இந்த நகரத்தில் வாழும், ஐந்து பேரில் ஒருவருக்கு சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. வெறும் 20% மக்களுக்கு மட்டுமே நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது. குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் 40% தண்ணீர் வீணாகிறது.
அபுதாபியில் மோடி : இந்தியா - அரபு அமீரகம் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
 • ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபிக்கு சென்றுள்ள மோடி அந்நாட்டுடன் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
 • ஆலோசனைக்கு பிறகு ரெயில்வே, எரிசக்தி, நிதி உதவி உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த ஒப்பந்தங்கள் கருதப் படுகின்றன.
``பிரதமர் மோடிக்கு கிராண்ட் காலர் விருது!'' - பாலஸ்தீனம் கௌரவம்
 • முதலாவதாக ஜோர்டன் சென்ற பிரதமர் மோடி மன்னர் அப்துல்லாவைச் சந்தித்து இருநாடுகள் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கிருந்து இன்று (10.2.2018) பாலஸ்தீனம் சென்றடைந்தார் மோடி. இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல்முறை ஆகும். 
 • அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
 • அப்போது, வெளிநாட்டினருக்கு தரப்படும் உயரிய விருதான கிராண்ட் காலர் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி பாலஸ்தீன அரசு கௌரவப்படுத்தியது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment