Tuesday, 27 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 27th FEBRUARY 2018



கடற்பயிற்சி இந்தியாவின் அழைப்பை நிராகரித்த மாலத்தீவு
  • இந்தியா `மிலன்' என்ற பெயரில் கடற்பயிற்சியை நடத்த இருக்கிறது. மார்ச் 6-ம் தேதி இந்தப் பயிற்சி தொடங்குகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. இந்தப் பயிற்சியில் பங்கேற்குமாறு இந்தியா, மாலத்தீவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், இந்த அழைப்பை மாலத்தீவு நிராகரித்திருக்கிறது. 
சவுதி அரேபியாவில் முதல் முறையாக முக்கியமான துறைக்கு துணை அமைச்சராக பெண் நியமனம்
  • சவுதி அரேபிய அரசர் சல்மான் அதிரடியாக ராணுவ தலைவர்களை மாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் துணை அமைச்சர் அந்தஸ்தில் பெண் ஒருவரையும் அவர் நியமித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் டாக்டர் தாமாதர் பின்ட் யூசுப் அல் ரம்மா என்பவர் துணை அமைச்சராாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதுபோன்ற முக்கிய துறையில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் முதல் முறையாகும் என்பதால் முக்கியத்துவமாக பேசப்படுகிறது.
தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முந்திய கர்நாடகா - பிந்திய தமிழகம்
  • நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்கு 3.95 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதில் 0.8 சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • இந்திய மாநிலங்களில் 1.52 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்று கர்நாடக முதலிடத்தில் இருக்கிறது. 79,068 கோடி ரூபாய் முதலீட்டை பெற்று குஜராத் 2ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. 
  • மராட்டிய மாநிலம் 2017ஆம் ஆண்டில் 48,581 கோடி ரூபாயை முதலீட்டாக பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் தமிழகமோ 3,131 கோடி ரூபாயை மட்டுமே பெற்றிருக்கிறது.


கர்நாடகாவில் இந்திரா உணவகத்தை அடுத்து சவிருச்சி உணவகம்!
  • கர்நாடக சட்டமன்ற தேர்தல் விரைவில் வருவதையொட்டி ஆளும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது! அந்த வகையில் இன்று "சவிருச்சி" மொபைல் கேண்டின் திட்டத்தினை மகளிர் சுய உதவி குழுக்களுக்காக அறிமுகம் செய்துள்ளார். 
  • முன்னதாக கர்நாடக அரசின் மூலம் "இந்திரா உணவகம்" என்னும் பெயரில் குறைந்த விலை உணவகம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வாகனங்களின் மூலம் இயக்கப்படும் மொபைல் உணவகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
மணலியில் மிகு எண்ணை மேம்படுத்தும் புதிய ஆலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • மணலியில் ரூ.3,110 கோடி செலவில் அமைக்கப்பட்ட மிகு எண்ணை மேம்படுத்தும் புதிய ஆலையை மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
நரிமணத்தில் ரூ.27 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம்
  • நாகை மாவட்டம், நரிமணத்தில் ரூ.27 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருள்களைக் கையாண்டு சுத்திகரிக்க முடியும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு 11 விருதுகள்
  • அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளில் 2016-17ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்ட 35 விருதுகளில் 11 விருதுகளை மாநகர் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களான விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் கும்பகோணம் ஆகியன பெற்றுள்ளன. 
ஜிஎஸ்டி வசூல் ரூ.86,318 கோடியாக குறைந்தது
  • மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் சென்ற ஜனவரியில் ரூ.86,318 கோடியாக குறைந்தது.
  • மொத்தம் வசூலான ரூ.86,318 கோடியில், சிஜிஎஸ்டி மூலமாக ரூ.14,233 கோடியும், எஸ்ஜிஎஸ்டி வாயிலாக ரூ.19,961 கோடியும், ஐஜிஎஸ்டி மூலமாக ரூ.43,794 கோடியும், இழப்பீடு வரி வாயிலாக ரூ.8,331 கோடியும் பெறப்பட்டுள்ளன. 
  • பிப்ரவரி 25-ஆம் தேதி வரையிலுமாக, ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.03 கோடி என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பை வென்றது கர்நாடகா
  • விஜய் ஹசாரே டிராபி தொடரில் கர்நாடகா அணி கோப்பை வென்றது. பைனலில் சவுராஷ்டிரா அணியை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கர்நாடகா அணி 3வது முறையாக கோப்பை கைப்பற்றியது. இதற்கு முன், 2013-14, 2014-15 'சீசனில்' பட்டம் வென்றிருந்தது.
  • கர்நாடகா அணி வீரர் மயங்க் அகர்வால், 27. உள்ளூர் போட்டியில் கலக்கி வருகிறார். நடப்பு 'சீசனில்' 2141 ரன் எடுத்துள்ளார். இதன் மூலம், இந்தியாவில் நடந்த உள்ளூர் தொடரில், ஒரே 'சீசனில்' அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்தார். 
  • இத்தொடரில், மயங்க் அகர்வால் 4 லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி, பைனல் என 8 போட்டிகளில் பங்கேற்றார். இதில் 3 சதம், 4 அரை சதம் உட்பட மொத்தம் 723 ரன் குவித்துள்ளார். 
  • இதன் மூலம், 'லிஸ்ட் ஏ' அரங்கில், ஒரே தொடரில், அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை எட்டினார். இதற்கு முன், ஜாம்பவான் சச்சின் 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் 673 ரன் குவித்ததே அதிகம்.
வெளிநாட்டு சிறுநீரகங்களை தானம் பெற இலங்கை அரசு தடை
  • இந்திய இளைஞர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்னி தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
  • 2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை தானம் செய்திருப்பதும் தெரியவந்தது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment