Monday, 26 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 26th FEBRUARY 2018

சென்னை - பெங்களூரு இடையே ஹைப்பர்லூப்
  • ஆந்திராவின் புதிய தலைநகரான, அமராவதியில், 'ஹைப்பர்லுாப்' போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டப்படி, விஜயவாடா, புதிய தலைநகர் அமராவதி ஆகியவை, ஹைப்பர்லுாப் போக்குவரத்து வசதி மூலம் இணைக்கப்படும்.
  • இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து விடலாம். ஹைப்பர்லுாப் தொழில் நுட்ப முறைப்படி, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நவீன வாகனம், காற்று புகாத டியூப்பில், மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லும்.'பாட்' எனப்படும் இவ்வகை வாகனம், காந்த விசையை பயன்படுத்தி, காற்று புகாத டியூப்புக்குள் அசுர வேகத்தில் கடந்து செல்லும். 
  • இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, அமெரிக்காவின், 'ஹைப்பர்லுாப் ஒன்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
  • இந்த நிறுவனம், பெங்களூரு - சென்னை, பெங்களூரு வழியாக, மும்பை - சென்னை, பெங்களூரு - திருவனந்தபுரம், மும்பை - டில்லி, மும்பை - கோல்கட்டா ஆகிய ஐந்து மார்க்கங்களில், ஹைப்பர்லுாப் தொழில்நுட்ப பாதைகளை அமைக்கும் திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
  • சென்னை - பெங்களூரு இடையே, ஹைப்பர்லுாப் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 20 நிமிடத்தில் இலக்கை அடைந்து விட முடியும் என கூறப்படுகிறது.
சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி
  • சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.
  • இந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அறிவித்தார். அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுக்க பெண்களுக்கு அனுமதி, கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.
  • தற்போது அந்நாட்டு ராணுவத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. ரியாத், மக்கா, அல்-குசைம், அல் மதினா மாகாண பெண்கள் ராணுவத்தில் வீராங்கனையாக சேர விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து கட்டாய உடல் உறுப்பு தான சட்டம் இயற்றம்
  • ஐரோப்பாவில் ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற ஒரு சில நாடுகளில் மக்கள் அனைவரும் தங்கள் மரணத்துக்கு பின் உடல் உறுப்புக்கள் தானம் செய்ய வேண்டும் என சட்டம் உள்ளது. 
  • தற்போது அதே போல ஒரு சட்டம் நெதர்லாந்து நாட்டிலும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் அந்நாட்டின் பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்த சட்டத்தின் படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரிடமும் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதக் கடிதம் கோரப்படும். 
மூன்று ஆண்டுகளில் முதல் சர்வதேச பட்டம் வென்றார் இந்தியாவின் காஷ்யப்
  • ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்றது. இதில், இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த இந்தியாவின் காஷ்யப், மலேசியாவின் ஜூன் வெய் சீமுடன் மோதினார்.
  • இதில், 23-21, 21-14 என்ற செட்களில் ஜூன் வெய் சீமை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
  • இந்த வெற்றியின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் வெல்லும் முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்
  • சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெற்றது. இதில், மகளிருக்கான 48 கிலோ பிரிவில் போட்டியிட்டார் இந்தியாவின் மேரி கோம்.
  • அவர், இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் செவ்தா அசினோவாவிடம் வீழ்ந்தார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • இதேபோல மகளிருக்கான 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சீமா பூனியா, ரஷியாவின் அன்னா இவானோவாவிடம் தோற்று வெள்ளியுடன் வெளியேறினார்.
  • இதனையடுத்து இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் வென்ற பதக்கத்தின் எண்ணிக்கை 6 ஆனது.
  • மற்ற வீராங்கனைகளான மீனா குமாரி தேவி (54 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சவீதி பூரா (75 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றிருந்தனர். 
பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது
  • தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வந்த 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தன.
  • கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் நார்வே 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
  • ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
  • னடா 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.
  • போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-வது இடம் பிடித்தது.
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவின் அமித் பாங்கல், விகாஸ் கிருஷன் தங்கம் வென்று அசத்தல்
  • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பாங்கல் மற்றும் விகாஸ் கிருஷன் தங்களது பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
  • மற்றொரு பிரிவான 52 கிலோ பிரிவில் இந்தியரான கெளரவ் சோலங்கி, உக்ரைனின் டிமைட்ரோ ஜமோடேவிடம் தோற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
  • மகளிர் பிரிவில் மேரி கோம், சீமா பூனியா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 48 கிலோ பிரிவில் போட்டியிட்ட மேரி கோம், இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் செவ்தா அசினோவாவிடம் வீழ்ந்தார்.
  • அதேபோன்று 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சீமா பூனியா, ரஷியாவின் அன்னா இவானோவாவிடம் தோற்று வெள்ளியுடன் வெளியேறினார்.
  • இந்தியா மொத்தமாக 2 தங்கங்கள், 3 வெள்ளிகள், 6 வெண்கலங்கள் என மொத்தம் 11 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் - மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இடையே சாகர்மாலா ஒப்பந்தம் கையெழுத்து
  • ஐஐடி மெட்ராஸ் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இடையே சாகர்மாலா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, துறைமுகம், நீர்வழி தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment