Sunday, 25 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 25th FEBRUARY 2018



குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை
  • அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன் எண், வங்கி கணக்கிற்கும் ஆதார் அவசியம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • 'பால் ஆதார்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீள நிறத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 
  • 5 வயது வரை இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பயோமெட்ரிக் தகவல்களை இணைக்க வேண்டும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. 
  • பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.குழந்தையின் 5, 10, 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியம்.
12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
  • சிவகங்கையில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
  • சிவகங்கை மாவட்டம், திருமலை, கள்ளராதினிப்பட்டி கிராமத்தில் ஆதினிகண்மாயின் வடக்கு பகுதியில் பழமையான மடை உள்ளது. இந்த மடையின் இருபுறமும் 15 அடி உயரமுடைய 2 கற்கள் உள்ளன. அவற்றின் தெற்குபுறம் உள்ள கல்லின் கீழ்ப்பகுதியில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.

'ருஸ்டம்-2' ஆளில்லா விமானம் சோதனை வெற்றி
  • இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ருஸ்டம் என பெயரிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • ஏற்கனவே ரூஸ்டம்-1 வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முழுவதும் உள் நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட நிலையில் ரூஸ்டம்-2 தயாரிக்கப்பட்டது.
  • மேலும், இந்த விமானம் மூலம் எதிரிகளின் இடங்களை கண்காணிப்பதுடன், ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறனும் உடையது என்ற அவர், இந்த விமானம் தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது.
சென்னை-சேலம் நெடுஞ்சாலை இடையே ரூ. 10 ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம்
  • ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் நெடுஞ்சாலை இடையே பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment