Sunday, 25 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 24th FEBRUARY 2018

70 ஆண்டுகளுக்கு பின் எலிபண்டா தீவுக்கு மின்சார இணைப்பு கிடைத்துள்ளது
  • இருளில் 70 ஆண்டுகள் செலவிட்ட பிறகு, எலிபண்டா தீவுகளில் உள்ள மூன்று கிராமங்கள் இறுதியாக மின்சார இணைப்புகளை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் அறிமுகம்
  • 'ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும்' என மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
  • ஜிஎஸ்டியின் படி ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லும்போது, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இ-வே பில் இருக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டது. 
  • இத்திட்டம் பிப்ரவரி முதல் அமலாகும் என அறிவிக்கப் பட்டது. இதற்கான முன்னோட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இப்போது இந்த முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், மாநில நிதியமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று அதன் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான சுஷில் மோடி தலைமையில் நடைபெற்றது. 
  • அதில், 'ரூ.50,000க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல படிப்படியாக அனுமதிக்க வேண்டும் என முடிவானது. இதை மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து குறித்து மதிப்பீடு செய்த பிறகு அமல்படுத்த வேண்டும். 
  • ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மின்னணு இ-வே பில் முறை அமல்படுத்தப்பட வேண்டும்' என இக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும் என சுஷில் மோடி தெரிவித்தார். 
  • இ-வே நடைமுறைக்கு வந்தால்,வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டு அரசின் வருவாய் 15-20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றார். சரக்குகளை கொண்டு செல்லஇ-வே பில் இணைய தளத்தில் இருந்து இ-வே பில்லை பெறலாம். ரூ.50,000க்கு அதிகமான பொருட்களை இ-வே பில் இல்லாமல் பதிவு செய்தவர்கள் கொண்டு செல்ல முடியாது. 
  • இ-வே பில்லை எஸ்எம்எஸ் மூலமும் பெற முடியும்; ரத்து செய்யவும் முடியும். இ-வே உருவாக்கப்படும் போது, பிரத்யேக எண் ஒதுக்கப்படும். இது பொருட்களை விற்பவர், வாங்குபவர் மற்றும் சரக்கு கையாளும் முகமைக்கு தரப்படும்.
ஜிம்னாஸ்டிக் துறையில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை
  • இன்றைய ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை படைத்துள்ளார்!
  • ஜிம்னாஸ்டிக் போட்டியில் தனிநபர் பதக்கத்தை வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்ட் வீராங்கனை என்ற வரலாற்று பெருமை படைத்துள்ளார் அவர்.
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த 22 வயதான ரெட்டி, 13.649 சராசரி புள்ளிகள் பெற்று வெண்கல பதகத்தினை வென்றார்.
  • ஸ்லோவானியாவின் டிஜாஸ் க்ச்செல்ஃப் 13.800 புள்ளிகளுடன் தங்கம் தட்டிச் சென்றார். அதே வேலையில் ஆஸ்திரேலியாவின் எமிலி வொய்ட்ஹெட் 13.699 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் பெற்றார்.
  • இறுதி சுற்றுவரை முன்னேறிய மற்றொரு இந்திய வீரங்கனை பிரணதி நாயக், 13.416 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்தார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment