Friday, 23 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 23rd FEBRUARY 2018

பிரதமரின் 'கிருஷி கர்மான்' விருதுக்குத் தேர்வான 2 தமிழக விவசாயிகள்
 • விவசாயத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் மற்றும் அம்மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக விருது வழங்கி பாராட்டுத் தெரிவிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், 2015-16-ம் ஆண்டுக்கான கிருஷி கர்மான் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 
 • அகில இந்திய அளவில் இந்தச் சிறப்பு மிகுந்த பரிசுக்கான வாய்ப்புப் பெற்றவர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டி சாமிநாதன். அவர் பயிரிட்ட வம்பன்-5 ரக உளுந்து, ஹெக்டருக்கு 1,700 கிலோ கிடைத்தது. 
 • அதன் மூலமாக நாட்டின் பயறு வகை முன்னோடி விவசாயியாகத் தேர்வானார். அதே போன்று கோ-43 ரக நெல் பயிரிட்ட அரியலூர் மாவட்டம் கயரலாபாத் எனும் ஊரைச் சேர்ந்த பெண் விவசாயியான ராசாத்தி, ஒரு ஹெக்டேரில் 9,563 கிலோ மகசூல் எடுத்து சாதனை படைத்தார்.
தமிழகத்தில் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அசத்திய மைக்கேரா சாஃப்ட் நிறுவனம்
 • தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும், பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழக மரக்களஞ்சியம் 'செயலி' அறிமுகம்
 • தமிழக வனத்துறை சார்பில், தமிழ்நாடு மரக்களஞ்சியம்' என்ற பிரத்யேக மொபைல்-போன் ஆப் (செயலி)- அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் பயன்படும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 
 • மண்ணுக்கேற்ப மரம் வளர்ப்பு, மரங்களின் வகைகளும் பயன்பாடும், வனத்துறை திட்டங்கள், பயிரிடும் முறை, தகுந்த ஊடுபயிர், பராமரிப்பு, வேளாண் வனவியல், பண்ணை கணக்கீடு, வன அலுவலக விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், இச்செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏர்டெல்-ஹுவே நிறுவனங்கள் இந்தியாவில் முதல் 5ஜி சோதனை
 • தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் மற்றும் கைபேசி கருவிகளை தயாரித்து வரும் ஹுவே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் 5ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன.
 • சிறியதுதான் என்றாலும் 5ஜி அனுபவத்தை நோக்கிய நமது பயணத்துக்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானதாகும். ஹரியாணா மாநிலம் மானேசரில் உள்ள ஏர்டெல் நெட்வொர்க் மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 
 • இந்த சோதனையின்போது, விநாடிக்கு டேட்டா வேகத்தின் அளவு 3 ஜிகாபைட் வரை எட்டப்பட்டது. தற்போதுள்ள 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்-100 மெகாஹெர்ட்ஸ் மொபைல் நெட்வொர்க்கில் இது அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் மிகச்சிறிய பென்சில்: உத்தரகண்ட் கலைஞர் சாதனை
 • உத்தரகண்ட் மாநிலம் ஹால்டுனி பகுதியை சேர்ந்த பிரகாஷ் சந்திர உபாத்யா என்ற கலைஞர் உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். 
 • இந்த பென்சில் ஒரு மரத்தால் ஆனது என்றும், சுமார் 5 மிமீ நீளமும், 0.5 மி.மீ அகலமும் உடையது. இந்த பென்சிலை உருவாக்க 3 முதல் 4 நாட்கள் வரை எடுத்துக்கொண்டதாக பிரகாஷ் கூறியுள்ளார். 
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் புதிய சாதனை
 • தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்குகளைக் கையாள்வதில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. அத்துடன், துறைமுக வரலாற்றிலேயே முதன்முறையாக கந்தக அமிலம் இறக்குமதி செய்தும் புதிய சாதனை புரிந்துள்ளது.
 • தற்போது, நிலக்கரியைக் கையாள்கையிலும், கந்தக அமிலம் இறக்குமதியிலும் புதிய சாதனை படைத்துள்ளது.
 • 24 மணி நேரத்திற்குள் சீ டிரான்ஸ் ஷிப் மேனேஜ்மென்ட் சர்வீஸ் மற்றும் ஸ்டிவிடோர் ஏஜென்ட் சீ போர்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற கப்பல் ஏஜென்டுக்கு உட்பட்ட 'எம்.வி.சி.கோப்' என்ற இந்தக் கப்பலிலிருந்து 45,396 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு, துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. இது, முந்தைய சாதனை அளவான 41,376 மெட்ரிக் டன் நிலக்கரியைவிட 4,020 மெட்ரிக் டன் அதிகமாகும்.
 • இதேபோல, சில நாள்களுக்கு முன்பு 18,965 மெட்ரிக் டன் கந்தக அமிலத்துடன் 9.7 மீட்டர் ஆழமுடைய ''எம்.பி.அமி" என்ற கப்பல் முதன்முதலாக துறைமுகத்திற்கு வந்தது. கந்தக அமிலம் இறக்குமதி செய்யப்பட்டதும் துறைமுக வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். 
தேர்தல் பத்திரங்கள் எஸ்.பி.ஐ., வங்கியில் 1ம் தேதி விற்பனை
 • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை வெளிப்படையாக கொண்டு வரும் விதமாக எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். 
கிரெடாயின் பிரமாண்ட பிராப்பர்டி எக்ஸ்போ 'ஃபேர்ப்ரோ 2018- முதல்வர் எடப்பாடியார் தொடங்கி வைத்தார்
 • கிரெடாயின் பிரமாண்ட பிராப்பர்டி எக்ஸ்போவான ஃபேர்ப்ரோ 2018-ஐ சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.
 • ஃபேர்ப்ரோ 2018-ல் பங்கேற்றுள்ள செயல்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்றவை. இன்று முதல் 3 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.
மத்திய அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை வடிவமைக்கப் போவது யார் தெரியுமா?
 • மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய திட்டம் மக்கள் மருத்துவக் காப்பீடு திட்டமாகும். மோடிகேர் எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் நாடெங்கும் உள்ள பல கோடி மக்கள் பயன் பெற உள்ளனர். 
 • இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சுமார் ரூ.5 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இதற்கான ஐடி இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் என அழைக்கப்படும் தொழில்நுட்ப உள் கட்டமைப்பை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.
 • இதை நந்தன் நிலெகனி அமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே மத்திய அரசின் ஆதார் மற்றும் ஜி எஸ் டி திட்டத்துக்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பு உட்பட பல அரசுப் பணிகளை திறம்பட செய்துள்ளார்.
கறுப்பு பட்டியலில் பாகிஸ்தானை வைக்க உலக நிதி நடவடிக்கை கூட்டமைப்பு முடிவு
 • கறுப்பு பட்டியலில் பாகிஸ்தானை வைக்க உலக நிதி நடவடிக்கை கூட்டமைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாததால், நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. 
கனடா-இந்தியா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து
 • கனடா-இந்தியா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
 • ஒப்பந்தம் கெயெழுத்தான் பின், இந்தியா, கனடா பிரதமர்களின் கூட்டறிக்கை டெல்லியில் வெளியிடப்பட்டது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment