Friday, 23 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 22nd FEBRUARY 2018



டிஜிட்டல் பரிவர்த்தனை : அதிகாரிகளுக்கு விருது
  • 'மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான விருது வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு தோறும், ஏப். 21ம் தேதி, 'சிவில் சர்வீசஸ்' தினமாக கொண்டாடப்படுகிறது. 
  • அன்று, மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு விருதுக்கு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பு, நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிராம திறன் திட்டம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த முன்னுரிமை திட்டங்களுக்கான விருதுகள், பிரதமர் பெயரில் வழங்கப்படும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 623 மாவட்டங்களில் இருந்து, 2,010 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
  • ஏப்ரல், 20ல், பொது நிர்வாக தலைப்புகளில் நடத்தப்படும் விவாதங்களில் அதிகாரிகள் பங்கேற்பர். பொது நிறுவனங்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கவும், அதிகாரிகளை ஒருங்கிணைப்பதற்கும், பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களை வலுப்படுத்தும் பாலமாக, இந்த விருதுகள் வழங்கப்படும். 
350 கிமீ தூரம் தாக்கும் வல்லமை கொண்ட பிரித்வி 2 சோதனை வெற்றி
  • அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிஸா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி அடைந்ததாக எஸ்எப்சி(SFC) கூறியுள்ளது. 
  • பிரித்வி 2 ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏவுகணையை ஒடிஸா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்தார் முதல் இந்திய பெண் விமானி
  • இந்தியாவின் முதல் பெண் விமானியான அவானி சதுர்வேதி எம்.ஐ.ஜி., 21 ரக போர் விமானத்தைத் தனியாக ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
  • இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படையில், பெண்களைப் பணியமர்த்த மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்று பெண் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர்.
  • அவர்களில் ஒருவர் தான் அவானி சதுர்வேதி. மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், இவர்களுக்கு பிரத்யேகமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூவரும் முறைப்படி போர் விமானிகளாகப் பொறுப்பேற்றனர்.
  • இந்நிலையில், இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
  • குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படைத்தளத்தில் எம்.ஐ.ஜி.,-21 ரக போர் விமானத்தை அவர் தனியாக ஓட்டிச் சென்று இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
  • மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்தவரான அவானி, இதன் மூலம் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின்முதல் பெண் விமானி என்ற பெருமையைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். சாதாரண போர் விமானங்களைவிட மிக் ரக போர் விமானங்களை இயக்குவது மிகவும் கடினம் ஆகும்.
  • இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே போர் விமானிகளாக பெண்களை பயிற்றுவித்து வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
  • இவர்கள் மூவரைத் தொடர்ந்து, ஜாம்நகர் விமானபடை தளத்தில் மேலும் மூன்று பெண்களுக்கு அடுத்தகட்ட போர் விமானப்பயிற்சி விமானப்படை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய விரத சாஹு: ஆணையம் ஒப்புதல்
  • தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய விரத சாஹூ வை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படக்கூ டிய அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியது. சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சத்ய விரத சாஹூ உட்பட 3 அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே அனுப்பி வைத்தது. 
  • ஒடிஸாவைச் சேர்ந்தவர்: ஒடிஸா மாநிலம் நயாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்ய விரத சாஹூ. இவர் 1969 -ஆம் ஆண்டு பிறந்தார். 1997 -ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றார். மாநில போக்குவரத்து ஆணையாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment