Wednesday, 21 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 21st FEBRUARY 2018

மகளிர் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் முதல் ரயில்வே ஸ்டேசன்
  • ஜெய்ப்பூரில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம், இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் நிர்வாகம் செய்யும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது காந்திநகர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திற்கு ஆண்டுதோரும் ஒரு பெண் ஊழியர் வீதம் புதிதாக நியமிக்கப்பட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த ரயில் நிலையத்தில் பணி புரிபவர்கள் அனைவருமே பெண்களாக உள்ளனர்.
  • தற்போது, அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர், ரயில் நிலைய பெண் கான்ஸ்டபிள், ரயில் நிலைய தலைவர் (ஸ்டேசன் மாஸ்டர்), டிக்கெட் முன்பதிவு கிளெர்க் உள்பட 32 பதவிகளிலுமே பெண் ஊழியர்களே பணி புரிந்து வருகின்றனர்.
  • தினந்தோறும் சுமார் 50 ரயில்கள் வரும் இந்த ரயில் நிலையத்திற்கு சராசரியாக 7000 பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
  • மும்பையில் உள்ள மடுங்கா ரயில் நிலையமும் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் தான். ஆனாலும் அது புறநகர் ரயில் நிலையம் என்பதால் காந்திநகர் இந்தியாவின் முதல் பெண்கள் மட்டும் பணிபுரியும் ரயில்நிலையம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
'நிடி ஆயோக்' அமைப்பு திட்டம் பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தனி பிரிவு
  • நாட்­டில் உள்ள, பெண் தொழில் முனை­வோரை ஒருங்­கி­ணைத்து, அவர்­களின் வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு, தனி பிரிவு துவக்­கப்­பட உள்­ளது.பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­கான இத்­திட்­டம் குறித்த, அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, மத்­திய அர­சின் கொள்கை திட்­டங்­களை வகுக்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, விரை­வில் வெளி­யிட உள்­ளது.
பிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு
  • 2017-18ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்தில் இருந்து 8.55 சதவிகிதமாக இபிஎஃப் ஆணையம் குறைத்துள்ளது.
  • மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் தங்களின் 60 வயதுக்கு பின்பு, முதுமைக் காலத்தை எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவே இபிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதியில் பணத்தை சேமித்து வைக்க விரும்புகின்றனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment