Tuesday, 20 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 19th FEBRUARY 2018

ரூ.60 ஆயிரம் கோடியில், 'டிஜிட்டல் தொழில் நகரம்'
  • முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரிஸ் நிறு­வ­னம், சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, மஹா­ராஷ்­டி­ரா­வில், ‘ஒருங்­கி­ணைந்த டிஜிட்­டல் தொழில் நக­ரம்’ ஒன்றை அமைக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
  • ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­து­டன், சர்­வ­தேச நிறு­வ­னங்­கள் இணைந்து, மஹா­ராஷ்­டி­ரா­வில், அதி­ந­வீன வச­தி­கள் கொண்ட, ‘ஒருங்­கி­ணைந்த டிஜிட்­டல் தொழில் நக­ரம்’ ஒன்றை அமைக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. 
  • இது, நாட்­டின் முதல்,‘ஒருங்­கி­ணைந்த டிஜிட்­டல் தொழில் நக­ரம்’ ஆக இருக்­கும்.இதற்­காக அடுத்த, 10 ஆண்­டு­களில், 60 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. இத்­திட்­டத்­தில் சேர, ஒரு வாரத்­தில், சிஸ்கோ, எச்.பி., டெல், நோக்­கியா உள்­ளிட்ட, 20க்கும் மேற்­பட்ட, சர்­வ­தேச நிறு­வ­னங்­கள் ஒப்­பு­தல் தெரி­வித்து உள்ளன. 
  • மஹா­ராஷ்­டி­ரா­வில், ‘ஒருங்­கி­ணைந்த டிஜிட்­டல் நகரம்’ திட்­டம், எந்த பகு­தி­யில் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது என்ற தக­வல், இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ரிலை­யன்ஸ் குழு­மத்­தின், ‘ஆர்­ஜியோ’ வர­வால், மொபைல் போன் சார்ந்த, இணைய வழி தரவு பரி­வர்த்­த­னை­யில், 155வது இடத்­தில் இருந்த இந்­தியா, முத­லி­டத்­திற்கு வந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
பட்ஜெட்டில் உபரி: குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு
  • சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிரித்து போனஸாக வழங்கப்படும் அந்நாட்டு நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் உரையின் போது இதை அவர் அறிவித்தார். சிறப்பு நிகழ்வுகளின் போது வழங்கப்படும் போனஸ் பரிசாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • சிங்கப்பூரின் வளர்ச்சியில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பங்கு அளிக்கப்படும் என்ற அரசின் நீண்ட நாள் உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ன.
  • மக்கள் வருமானத்தின் அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படவுள்ளது. 20.7 லட்சம் பேர் இந்த போனஸ் பெறவுள்ளனர். மேலும் இந்த உபரி தொகையில் 500 கோடி சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரெயில் கட்டமைப்பு பணிகளுக்கும், 200 கோடி சிங்கப்பூர் டார் முதியவர்கள் பாதுகாப்பு, இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செசல்ஸ் தீவில் ராணுவ தளம்: இந்தியா திட்டம்
  • இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க, செசல்ஸ் தீவில் ராணுவ தளம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா கடும் முயற்சி எடுத்து வருகிறது. 
  • அதன் ஒரு கட்டமாக பழைய பட்டு பாதையை மேம்படுத்த துவங்கி உள்ளது. இதுதவிர, இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, செங்கடலை ஒட்டி உள்ள திஜிபவுட்டி நாட்டில் தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளது. 
  • இது சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைகடலுக்கும் ஏமன் வளைகுடா மூலம் செங்கடலுக்கும், இந்திய பெருங்கடலுக்கும் ஒரு இணைப்பாக உள்ள இடம். அடுத்த கட்டமாக, இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகம், குத்தகை என்ற பெயரில் சீனா வசம் வந்துள்ளது. இதுதவிர, மாலத்தீவு நாட்டிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. 
  • இதையடுத்து, இந்திய பெருங்கடல் பகுதியில், மடகாஸ்கர் நாட்டுக்கு அருகே உள்ள செசல்ஸ் தீவில், இந்தியா சார்பில் ராணுவ தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
  • இத்துடன் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து, சீனாவின் பட்டு பாதைக்கு போட்டியாக ஒரு பொருளாதார மேம்பாட்டு பாதையை, குறிப்பாக விமான நிலையங்கள், துறைமுகங்களை இணைக்கும் சாலை வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பிப்.21ல் உலகத்தாய்மொழி நாள் கருத்தரங்கு கூட்டம்
  • சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பிப்.21ல் உலகத்தாய்மொழி நாள் கருத்தரங்கு கூட்டம் அண்ணா கருத்தரங்கக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது. 
  • பிப்.21ம் தேதி காலை 11 மணிக்கு அம்மாவும் அன்னைத் தமிழும் என்ற தலைப்பில் கவியரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை அமல்படுத்த தமிழகம் வரும் மோடி
  • தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்தை வரும் 24-ம் தேதி அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். 
  • மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்டமாக மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும், 2018-19-ம் நிதியாண்டில் முதற்கட்டமாக ஒரு லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப்பில் டெல்லி வீராங்கனைக்கு தங்கம் தேசிய சாதனையும் படைத்தார்
  • தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் டெல்லி வீராங்கனை செளம்யா பேபி தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
  • தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் டெல்லி வீரங்கனையான சௌம்யா பேபி பந்தய இலக்கான 20 கி.மீட்டரை ஒரு மணி 31 நிமிடம் 28.72 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தேசிய சாதனை படைத்தார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment