Saturday, 3 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 3rd FEBRUARY 2018

பஞ்சாபில் 20 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை!- மாநில அரசு அதிரடி நடவடிக்கை
  • பஞ்சாப் மாநிலத்தில், மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய 20 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்திருக்கிறது.
  • இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு உலகம் முழுவதும் அதிகரித்தபடியே இருக்கிறது. இந்தியாவிலும் இயற்கை வேளாண்மை பற்றிய புரிதல் ஏற்பட்டு வருவதால், மக்களுக்குக் கேடு விளைவிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருத்துப் பொருள்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துமாறு வேளாண் வல்லுநர்கள் விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த சில பூச்சிக்கொல்லிகளுக்கு அந்த மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்திருக்கிறது.
  • பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமும், அந்த மாநிலத்தின் விவசாயிகள் ஆணையமும் குறிப்பிட்ட சில வேளாண் மருந்துப் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக அரசுக்கு அறிக்கை அளித்தது. இதனைப் பரிசீலனை செய்த அந்த மாநில அரசு உடனடியாக 20 பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
  • கடந்த ஜனவரி 30-ம் தேதி பஞ்சாப் அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன், பிப்ரவரி 1-ம் தேதி முதல் அந்த மருந்துப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸை ரத்து செய்வதுடன், புதிய லைசென்ஸ் கொடுக்க வேண்டாம் என்றும் வேளாண்துறை இயக்குநருக்கு மாநில அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள்களின் விற்பனை நடைபெறாமல் 
  • தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பட்டியலில், போஸ்பாமிடான், டிரைகலரோஃபன், பென்ஃபுராகார்ப், டிகோஃபோல், மீத்தோமைல், தியோபனைட்மீத்தைல், எண்டோசல்ஃபான், பிஃப்பென்த்ரின், கார்போசல்ஃபான், குளோர்ஃபெனாபர், டாஸோமெட், டைஃப்ளூபென்சுரோன், ஃபெனிட்ரோத்ரின், மெட்டாடிஹைட், கசுகமைசீன், ஈதோஃபென்ப்ராக்ஸ், போரேட், ட்ரையசோபாஸ், அலச்லார், மோனோகுரோட்டபாஸ் ஆகிய மருந்துப் பொருள்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
'இ - வே பில்' நடைமுறை ஒத்திவைப்பு
  • சரக்கு போக்குவரத்து வாகனங்களில், 'இ - வே பில்' என்ற, இணைய வழி ரசீதை எடுத்துச் செல்லும் திட்டம், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • சரக்கு போக்குவரத்து வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் குறித்த விபரங்களை, வர்த்தகர்கள், கணினியில் பதிவு செய்து, அந்த ரசீதை கையோடு எடுத்துச் செல்ல, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.'இ - வே பில்' என்ற அந்த ரசீதை, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் மட்டு மின்றி, மாநிலங்களுக்குள், 10 கி.மீ.,க்கு அப்பால், சரக்குகளை கையாளும் வாகனங்களும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டது.
  • ஆனால், மாநிலங்களுக்குள் சரக்குகளை அனுப்புவோர் கேட்டுக் கொண்டதால், அவர்களுக்கு மட்டும், பல மாநிலங்கள், இதற்கான கெடுவை நீட்டித்திருந்தன. இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட, 10 மாநிலங்கள், இரண்டு நடைமுறைகளையும், பிப்., 1ல், அமல்படுத்தின.
  • இதன்படி, அன்றைய தினம் சரக்குகளை அனுப்ப, ஒரே நேரத்தில், லட்சக்கணக்கான வர்த்தகர்கள் முயன்றதால், 'இ - வே பில்' கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது; சரக்குகளை அனுப்ப முடியவில்லை.இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும், அந்த திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது. 
  • இது குறித்து, தமிழக வணிகவரித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால், உள்மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இடையிலான, இ - வே பில் திட்டம், காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரச்னை சீரடைந்ததும், அது நடைமுறைக்கு வரும்' என்றனர்.
ஜப்பான் சாதனை !உலகின் மிகச்சிறிய ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது
  • ஜப்பான் உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
  • 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எஸ்எஸ்520என்கிற ராக்கெட்டை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை விண்ணில் ஏவியது. தகவல் தொடர்பில் உள்ள கோளாறு காரணமாக அந்த ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பி வந்தது. இதனால் 10மீட்டர் நீளம், 50செண்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த ராக்கெட்டை மீண்டும் மேம்படுத்தி அதில் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளைப் பொருத்தினர்.
  • இந்த ராக்கெட் இன்று உச்சினூரா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் படக்கருவி மூலம் புவிப் பரப்பைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பும் திறன்பெற்றதாகும்.
நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற இந்திய அணி! ஜூனியர் உலகக் கோப்பையில் அசத்தல்
  • ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றது.
  • இந்தத் தொடரில், இந்திய அணி, பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. முன்னதாக, லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில், டிராவிட்டின் பயிற்சியின் கீழ், இறுதிப் போட்டியில் இந்திய அணி,வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருந்தது. தவறுகளைச் சரிசெய்து, இந்த முறை டிராவிட்டின் இளம் படை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment