Friday, 16 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 16th FEBRUARY 2018

தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைப்பு: மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு
 • சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கோர எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 
 • தமிழகத்தில் 20 டி.எம்.சி., நிலத்தடி தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை. தமிழகத்தில் 20 சதவீத நிலத்தடி நீர் உள்ளது.
 • இதனை பயன்படுத்த வேண்டும். குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பெங்களூருவுக்கு கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்கிறோம். நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
 • தமிழகம் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.
குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் வென்று இந்தியா அசத்தல்
 • ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டி குத்துச்சண்டையில் இந்தியா 5 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றது.
 • ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டி குத்துச்சண்டை போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் மணீஷ் கெளஷிக் 60 கிலோ எடைப் பிரிவு, ஷியாம் குமார் 49 கிலோ, ஷேக் சல்மான் அன்வர் 52 கிலோ, ஆஷிஷ் 64 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். மகளிர் பிரிவில் பவித்ரா 60 கிலோ பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றார்.
 • அதேபோன்று,. 57 கிலோ பிரிவில் ஷஷி சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். முகமது எடாஷ் கான் 56 கிலோ, ரிது கிரெவால் 51 கிலோ, பவன் குமார் 69 கிலோ, ஆஷிஷ் குமார் 75 கிலோ ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
 • இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று, முதல் ஆட்டத்தில் மகளிருக்கான இறுதிச் சுற்று ஒன்றில் பவித்ரா 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் நிலாவன் டெசாசெப்பை வீழ்த்தினார்.
 • ஆடவர் பிரிவில் ஷியாம் குமார் 4-1 என இந்தோனேஷியாவின் மரியோ பிளாசியஸை வீழ்த்தினார்.சல்மான் அன்வர் 5-0 என ஃபிலிபினோ ரோஜன் லாடனையும், மணீஷ் கெளஷிக் - ஜப்பானின் ரென்டாரோ கிமுராவையும், ஆஷிஷ் - வங்கேதசத்தின் சுகர் ரேவையும் வீழ்த்தினர்.
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 • இந்திய பொறியாளருக்கு ‛சயின்டிபிக் அன்ட் டெக்னிகல் ஆஸ்கர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.புனேவை சேர்ந்த பொறியாளர் விகாஸ் சதாயி, தான் தயாரித்த ‛ஷாட் ஓவர் கே1 கேமரா சிஸ்டம்' என்ற தொழில்நுட்ப வடிவமைப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது. 
 • இத்தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளியிலிருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்கலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஜவ்வாதுமலையில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட புதைவிடம் கண்டெடுப்பு

 • திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை ஏராளமான வரலாற்றுப் பொக்கிஷங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் பண்பாட்டில் பின்பற்றப்பட்ட புதைவிடம் (சுடுகாடு) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
 • பழந்தமிழர் இறந்த முன்னோரைத் தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதற்கு முதுமக்கள் தாழி என்று பெயர். கணவன் இறந்ததால் மனைவியும் அதே ஈமத்தாழியில் கணவனோடு தன்னை சேர்த்துப் புதைத்து விடுமாறு பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
 • இதுபோன்ற கல்திட்டைகள் ஜவ்வாதுமலையில் கீழ்ச்சேப்பிளி, கோம்பை போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கல்வட்டம், கல்திட்டை, முதுமக்கள் தாழி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. 
ரூ.8,837 கோடியில் 6,411 பணிகளுக்கு அடிக்கல் அரசின் ஓராண்டு சாதனை பட்டியல்
 • தமிழகத்தில், அரசு விழாக்கள் மற்றும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கடந்த ஓராண்டில், 11 ஆயிரத்து, 827 கோடி ரூபாயில், 35 ஆயிரத்து, 819 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், 8,837 கோடி ரூபாய் மதிப்பில், 6,411 புதிய திட்டப் பணிகளை மேற்கொள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 
 • முதல்வராக பழனிசாமி, 2017 பிப்., 16ல் பொறுப்பேற்றார். நேற்றோடு அவர் பதவியேற்று, ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. 
 • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,அகில இந்திய அளவில், சிறந்த ஆலை விருதை, தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்றுள்ளதுl பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில், குறித்த காலத்திற்குள் சாலைப் பணிகளை முடித்ததற்காக, மத்திய அரசு, செயல்பாட்டு ஊக்கத் தொகையாக, 58 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
 • தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மதுரை மாவட்டத்திற்கு, 2015 - 16ம் ஆண்டிற்கான, மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
 • நடப்பு நிதியாண்டில், பேரூராட்சிகளில், 1,025 கோடி ரூபாய் மதிப்பில், 73 ஆயிரத்து, 410 அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அளவில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், சிறந்த செயல்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
 • தஞ்சாவூர் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு, தெற்காசிய தானிய அமைப்புகளின் முனைப்பு, தனிச் சிறப்பு பாராட்டு சான்று வழங்கி உள்ளது. 
 • தாட்கோ வழியாக, சுய தொழில் துவங்க, 237 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 108 கோடி ரூபாய் மானியமாகும். கல்லுாரி விடுதி மாணவர்களுக்கு, உணவுக் கட்டணம், 875 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாகவும், பள்ளி மாணவர்களுக்கு, 755 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
 • வறட்சியால் பாதிக்கப்பட்ட, ஒன்பது லட்சம் விவசாயிகளுக்கு, 3,020 கோடி ரூபாய், பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.தென்னையிலிருந்து, 'நீரா' பானம் தயாரிக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 • கால்நடைத்துறை சார்பில், 248 கோடி ரூபாய் செலவில், 8,417 பேருக்கு, இலவச பசு மாடு; 97 ஆயிரத்து, 473 பேருக்கு, இலவச ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த, 342 மீனவர்கள், இலங்கை சிறையில் இருந்தும், 30 மீனவர்கள், ஈரான் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 • இல்லம் தேடி வரும், 'ஆவின்' சேவை துவக்கப்பட்டுள்ளதுl பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்த, 330 கோடி ரூபாயில், 1.92 கோடி, 'டிஜிட்டல் ரேஷன் கார்டுகள்' வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. 
 • 'சி' தர வரிசையில் இருந்த, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், 'பி' வரிசைக்கு முன்னேறி உள்ளது. வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு, புத்துயிர் அளிக்கும் திட்டம், 24.58 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படுகிறது.
 • ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 6.51 லட்சம் பேருக்கு, 931 கோடி ரூபாயில், சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2.06 லட்சம்சுய உதவி குழுக்களுக்கு, 6,339 கோடி ரூபாய், வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 
 • அரசு விழாக்கள் மற்றும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, 11 ஆயிரத்து, 827 கோடி ரூபாய் மதிப்பில், 35 ஆயிரத்து, 819 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 8,837.29 கோடி ரூபாய் மதிப்பில், 6,411 புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.15,000 கோடி முதலீடு: ஏஏஐ
 • உள்நாட்டில் புதிய விமான நிலையத்தை கட்டமைக்கவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும் வரும் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) தெரிவித்துள்ளது. 
 • குறிப்பாக, அடுத்த நிதி ஆண்டில் 15 விமான முனைய கட்டடங்களை கூடுதல் வசதிகளுடன் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பக்யோங் என்ற இடத்தில் ரூ.650 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த புதிய விமான நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளன. 
ஆதார் அட்டைக்கு விருது வழங்கிய துபாய்
 • துபாயில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அமீரக துணை பிரதமர் இந்திய அரசின் ஆதார் திட்ட உதவி பொது இயக்குநர் கதிர் நாராயணாவிடம் வழங்கினார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment