Thursday, 15 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 15th FEBRUARY 2018

தேசிய சாம்பியனாகி வரலாறு படைத்தது தமிழக மகளிர் கால்பந்து அணி
  • மகளிர் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக சாம்பியனாகி அசத்தியுள்ளது தமிழக மகளிர் கால்பந்து அணி.
  • ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் 23வது சீனியர் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த, இறுதி ஆட்டத்தில் 18 முறை சாம்பியனான மணிப்பூர் அணியை தமிழக அணி சந்தித்தது. 
  • முடிவில், தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக தேசிய சாம்பியன் ஆனது. தொடரில் சிறந்த வீராங்கனையாக தமிழக அணி வீராங்கனை இந்துமதி பெற்றார். 
சர்வதேச யோகா போட்டியில் தங்கம் குவித்த தமிழக மாணவர்கள்
  • 'சர்வதேச சவுத் ஆசியன் கோல்டன் கப் - யூத் ரூரல் கேம்ஸ்' போட்டி பூடான் நாட்டில் பிப்ரவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கபடி, கராத்தே, யோகா, அத்லடிக் என 8 வகையான விளையாட்டுகள் இதில் இடம்பெற்றன. இப்போடியில் இந்தியா, பூடான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
  • இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஹரினிஷா 9 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், பிரதிக்ஷா 10 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவி வேதவி 13 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவி சம்யுக்தா 16 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவர் கவின்ராஜ் 20 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும், மாணவர் அரவிந்த் ஓப்பன் கேட்டகிரியிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 
  • மேலும், இப்போட்டியில் இந்திய யோகா அணி ஒட்டுமொத்த பிரிவிலும் கலந்துகொண்டு பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளனர்.
சங்க கால மக்கள் வாழ்விடம் ரிஷிவந்தியத்தில் கண்டுபிடிப்பு
  • விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • ரிஷிவந்தியம் விவசாயிகள், வயல்களை உழுதபோது, கறுப்பு மற்றும் சிவப்பு நிற மண்பானை ஓடுகளை கண்டெடுத்து, வரப்பு பகுதிகளில் குவித்திருந்தனர். அவை, சங்க காலத்தை சேர்ந்தவை.அவற்றை ஆய்வு செய்தபோது, இரண்டு ஓடுகளில், மேல்நோக்கிய இரண்டு அம்புக்குறிகள் இருப்பதை கண்டறிந்தோம். 
  • இந்த குறிகள், வெவ்வேறு இனக்குழுக்கள் கலந்ததற்கான அடையாளமாக இருக்கலாம்.மேலும், அப்பகுதியில், இரும்பு உருக்கு ஆலைக்கு பயன்படுத்தும், ஊது குழலும் கிடைத்தது. அந்த மக்கள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிந்திருந்தனர் என்பதை காட்டுகிறது. 
  • ரிஷிவந்தியம், பாசார் பகுதியில், பெருங்கற்கால மக்களுக்கான, எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டுபிடித்தோம். அங்கு, முதுமக்கள் தாழிகள் வைக்கப்பட்ட ஈமக்காட்டையும், அதன் எதிரில், இறந்தோரைப் புதைத்து, அதைச் சுற்றி, சிறிதும், பெரிதுமான எட்டு கல்வட்டங்கள் இருந்ததையும் கண்டுபிடித்தோம்.
காஷ்மீர்: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க அரசு முடிவு
  • பெங்களூருவில் இருப்பது போல் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை இந்த ஆண்டு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 1995ம் ஆண்டு நடந்த அனைத்து சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பெங்களூருவில் உள்ளது போல் இந்தியாவின் தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரும்பு மனிதரின் சிலை அக்.31ம் தேதி திறப்பு
  • இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை வரும் அக்.31ல் திறக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக நர்மதை நதியோரத்தில் உயரமான சிலை அமைக்க, குஜராத் அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த, 2013ல் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • குஜராத்தின் கேவாடியா பகுதியில், சர்தார் சரோவர் அணைக்கு அருகே 182 அடி உயரமுள்ள இந்த சிலை, 3,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது இறுதிக் கட்டப் பணி நடந்து வருகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment