Wednesday, 14 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 14th FEBRUARY 2018

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி தொடக்கம்
  • அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ கண்காட்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி மோசடி
  • பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், ரூ. 11 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதை அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசெய்துளளது. 
  • இதையடுத்து, வங்கி அளித்த புகாரின்படி, டயமண்ட் ஆர் யு.எஸ்., சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்களான, நிரவ் மோடி, நிஷால் மோடி, அமிவ் நிரவ் மோடி, மெகுல் சின்னுபாய் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
  • இந்நிலையில், சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, 'மெகா' மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி, நேற்று, மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதையடுத்து அமலாக்கத்தறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.
மும்பையில் வரும் 18ம் தேதி தொழில் முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர்
  • மும்பையில் வரும் 18ம் தேதி தொடங்க இருக்கும் தொழில் முதலீட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.'மேக்னெட்டிக் மகாராஷ்டிரா' என்ற பெயரில் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மும்பையில் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாடு துவங்க உள்ளது. 
  • இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. விர்ஜீன் குழுமத்தின் சேர்மன் ரிச்சர்ட் பிரான்சன், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
  • இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் மொத்தம் 4,500 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நவி மும்பையில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
அழகப்பா பல்கலைக்கு கவுரவம் : யு.ஜி.சி., முதல் தர வரிசையில் இடம்
  • பல்கலை மானியக்குழு எனும், யு.ஜி.சி., தர வரிசை பட்டியலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை முதலிடம் பெற்றுள்ளது.
  • மொத்தம் உள்ள, 819 பல்கலைகளை, கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம், செயல்பாட்டு திறன் அடிப்படையில் மூன்று வகையாக, யு.ஜி.சி., தரப்படுத்தியுள்ளது. இந்த பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. 
  • முதல் தர வகையில், 32 பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலையும் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து, துணைவேந்தர், சுப்பையா கூறியது: தேசிய தர மதிப்பீட்டு குழுமத்தின் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பீட்டு புள்ளி அடிப்படையில் பல்கலைகள் தேர்வு செய்யப்பட்டன. 
  • இதில், 3.5-க்கு மேல் எடுத்த பல்கலைகள் முதல் தர வகைக்கு தகுதி பெற்றுள்ளன. அழகப்பா பல்கலை 3.64 புள்ளி எடுத்துள்ளது.இந்த அங்கீகாரம் மூலம் புதிய துறை, மையங்கள், பாடப்பிரிவுகளை பல்கலை தானாகவே தொடங்க முடியும். 
  • புதிய ஆராய்ச்சி பூங்காக்கள், இன்குபேஷன் மையங்கள், தனியாருடன் இணைந்து புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு, யு.ஜி.சி.,யின் அனுமதி தேவையில்லை.20 சதவீதம் : பன்னாட்டு அறிஞர்கள், பேராசிரியர்களை பணி அமர்த்தி கொள்ளலாம். வெளிநாட்டு மாணவர்கள், 20 சதவீதம் வரை சேர்த்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உச்ச வரம்பு அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி
  • பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
  • அதன்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 44,500லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை இருக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் உதவித் தொகை பெற முடியும்.
  • அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
எஸ்.ஆர்.எம் சார்பாக நடைபெற்ற பொருள் வேதியியலில் சமீபத்திய வளர்ச்சி சர்வதேச மாநாடு
  • எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறைசார்பாக பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொருள் வேதியியலில் சமீப வளர்ச்சி என்னும் தலைப்பிலான இரண்டாவது சர்வதேச மாநாடு மாற்று சக்தி மற்றும் அணு ஆற்றல் ஆணை குழு. 
  • பிரான்ஸ் மற்றும் ஐ,ஆர்,டி இந்தியா அமைப்புகள் இணைந்து காட்டாங்குளத்தூரில் நடத்தின. இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 11 தொழில் நுட்ப அமர்வுகளின் கீழ் வழங்கப்பட்டன, இம்மாநாட்டுக்கு பிரான்ஸ், ஜெர்மனி, தென்கொரியா, தைவான், சீனா, அமொரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டன. 
  • இம்மாநாட்டின் சஞ்சிகை பங்காளராக மெட்டீரியல்ஸ் டுடே(எல்ஸ்வியர்) சஞ்சிகை உள்ளது, சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதுகள் வழங்கப்பட்டன, துவக்கவிழா பிப்ரவரி 14ம் நாள் முனைவர் டி,பி, கணேசன் அரங்கம, எஸ்,ஆர்,எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூரில் நடைபெற்றது. 
  • சிறப்பு விருந்தினர் பேராசிரியர் வீரேந்தர் சிங் சௌகான், தலைவர், தேசிய அங்கிகார மதிப்பீட்டு குழு (NAAஊ) கலந்துகொண்டு மாநாட்டைத் துவக்கிவைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார். 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment