Tuesday, 13 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 13th FEBRUARY 2018

கான்பூர் 'Agriexpo 2018'-வை துவங்கி வைக்கிறார் குடியரசு தலைவர்
  • சந்திரசேகர் ஆசாத் (CSA) வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாளை(பிப்.,14) முதல் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வதேச மாநாடு - 'அக்ரிகான் 2018' மற்றும் 'அக்ரிஎக்ஸ்போ 2018' ஆகியவற்றில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக்கொள்கிறார்
ராணுவ மூலதன கையகப்படுத்தல் திட்டத்திற்காக ரூ.15 ஆயிரம் கோடி: மத்திய அரசு
  • ராணுவ மூலதன கையகப்படுத்தல் திட்டத்திற்காக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதிக்கியுள்ளது. மேலும் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் ராணுவ தளவாடப்பொருட்கள் வாங்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
அகில இந்திய அளவில் '5s' விருது பெறும் முதல் அரசுப் பள்ளி
  • ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும் மிக நேர்த்தியான வழிமுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, '5 எஸ்' விருதை QUALITY CIRCLE FORUM OF INDIA, HYDERABAD வழங்கிக் கெளரவிக்கிறது. 
  • இந்த பெருமைமிக்க விருதை, அகில இந்திய அளவில் பெறும் முதல் அரசு தொடக்கப்பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தமிழகத்தில் நான்கு தனியார் பள்ளிகள் மட்டுமே இவ்விருதைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணை தமிழக அரசு வெளியீடு
  • இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
  • அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தால் ரூ 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்தியா வீராங்கனை தங்க வென்று அசத்தல்
  • ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுஹானா சாய்னி தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுஹானா பங்கேற்று இறுதி ஆட்டம் வரை சென்றார்.இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
பூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம்! - ராஜஸ்தானுக்கு அடித்தது ஜாக்பாட்
  • ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில், பூமிக்கடியில் சுமார் 11.48 கோடி டன் தங்கம் இருப்பதை இந்தியப் புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • சிக்கர் மாவட்டத்தில் உள்ள நீம்கா தானா பகுதியிலும் சுரங்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஜெய்ப்பூரில் ஈயம், துத்தநாகம் ஆகிய கனிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ராஜஸ்தானில் இதுவரை, 80 மில்லியன் டன் செம்பு இருப்பதையும் உறுதிசெய்துள்ளோம்' என்றார். 
'மேக் இன் இந்தியாவை' தொடர்ந்து 'ஸ்டடி இன் இந்தியா'..மத்திய அரசு திட்டம்
  • 'மேக் இன் இந்தியா' திட்டத்தை தொடர்ந்து 'ஸ்டடி இன் இந்தியா' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் இந்திய கல்வி நிறுவனங்களில் பயில ஒரு லட்சம் வெளிநாட்டு மாணவர்களை வரவழைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
  • இதன் மூலம் 25 நாடுகளை மையமாக கொண்டு ரூ. 300 கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அண்டை நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா கண்டத்தை குறிவைக்கப்பட்டுள்ளது. அரச கணக்கெடுப்பின் படி தற்போது 35 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இந்திய கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
2020க்குள் 3 லட்சம் இந்திய பெண்களுக்கு சர்வதேச தொழில் வாய்ப்பு ஐ.நா., திட்டம்
  • இந்திய பெண் தொழில் முனைவோருக்கு சர்வேச வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்கிறது. 
  • இந்த திட்டத்திற்கு பெயர் 'ஷி டிரேட்ஸ்' (அவள் வர்த்தகம்) என்று ஐநா பெயரிட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பெண் தொழில் முனைவோரை கடந்த 2 ஆண்டுகளில் இணைத்துள்ளது.
  • 2020ம் ஆண்டுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இந்த வாய்ப்பை 30 லட்சம் பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க ஐநா திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய பெண்கள் 3 லட்சம் பேர் இடம்பெறுவர்.
இங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருது வாங்கிய தமிழர்
  • இங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருதை அப்துல் பாசித் என்ற தமிழர் ஒருவர் வாங்கி இருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் சர்வதேச அமைதிக்கான கூட்டமைப்பு என்ற அரசு சாரா அமைப்பு இந்த விருதை வழங்கி இருக்கிறது.
  • அப்துல் பாசித் 15 வருடங்களுக்கு முன்பே பிரிட்டிஷ் சென்று குடியேறி இருக்கிறார். அங்கு தற்போது குடியுரிமை பெற்று இருக்கும் இவர் நிறைய முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
  • இலங்கையில் போர் நடந்த சமயத்திலும், அதற்கு பின்பாகவும் இவர் பல்வேறு அமைதி நடவடிக்கைகளில் கலந்து கொண்டு உள்ளார். அதேபோல் தற்போது மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம் பிரச்சனைக்காக குரல் கொடுத்தும், களத்தில் இறங்கியும் வேலை பார்த்து வருகிறார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment