Monday, 12 February 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF - 8th & 9th FEBRUARY 2018

வங்கதேச பெண் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
 • ஊழல் வழக்கில் வங்க தேச பெண் பிரதமர் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 • இருமுறை வங்க தேச பிரதமராக பதவி வகித்தவர் கலீதா ஜியா. மறைந்த முஜிபுர் ரகுமானின் மகளான இவர் மீது ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. அதை ஒட்டி வங்க தேச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
 • நீதிபதி முகமது அக்தருசமான் இன்று தீர்ப்பை வழங்கினார். அவர் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளார். இதனால் வங்க தேசம் பரபரப்பு அடைந்துள்ளது.

ஐ.சி.சி. இயக்குநரானார் இந்திரா நூயி
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சியின் முதல் பெண் இயக்குநராக பெப்சி நிறுவன சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ஐ.சி.சியின் தன்னாட்சி பெற்ற இயக்குநரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திரா நூயியை இயக்குநராகத் தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அவர் வரும் ஜூன் மாதம் பொறுப்பேற்பார். 
 • அவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு மேலும் 2 முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க முடியும். அந்தவகையில் அவர் மொத்தம் 6 ஆண்டுகாலம் ஐ.சி.சி இயக்குநராகப் பதவி வகிக்கலாம்.
 • ஐ.சி.சியின் இயக்குநராகப் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இயக்குநராகத் தேர்வாகியிருப்பது சந்தோஷமளிப்பதாகவும், ஐ.சி.சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் இந்திரா நூயி கூறியுள்ளார். 

நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரக் குறியீட்டில் தமிழகத்துக்கு 3-வது டம்
 • நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் மருத்துவத்தரம், சுகாதார நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்து ஒரு சுகாதாரக் குறியீட்டை வகுத்துள்ளது. அதில் அதிகப் புள்ளிகள் பெற்று கேரள மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.
 • இந்தப் பட்டியலில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுவரும் மாநிலங்களாக ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் கடந்த காலங்களில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தடுப்பூசி மருந்துகள் பரவலாக அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலின் கீழ் நிலையில் உள்ளன.
 • சிறிய மாநிலங்களில் மிசோரம், மணிப்பூர், கோவா ஆகியவை மிகச்சிறந்த தரக்குறியீட்டைப் பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை லட்சத்தீவு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கோட்டம் கண்டெடுப்பு
 • திருப்பத்தூர் அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கோட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் வேடியப்பன் நகரில் ஒரே இடத்தில் 6 நடுகல்கள் அமைந்துள்ள நடுகல் கோட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்பு
 • 2017ம் நிதியாண்டின் முதல் 10 மாத கால கட்டத்தில் நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரித்து ரூ.6.95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 • 2017-2018ம் நிதியாண்டின் ஏப்., மாதம் முதல் ஜன., வரையிலான 10 மாதங்களில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 
 • மேலும் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இது 19.3 சதவீதம் கூடுதல் எனவும், 2017 ஏப்., முதல் 2018 ஜன., வரை ரூ.1.26 லட்சம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியல்: தமிழகம் முதலிடம்
 • சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம் என்று நிதி ஆயோக் கூறியுள்ளார். சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment