Tuesday, 27 February 2018

சீருடைப் பணியாளர் தேர்வு: நுழைவுச் சீட்டு இன்று இணையத்தில் வெளியீடு - Hall Ticket for TNUSRB February 2018

TNPSCSHOUTERS


  • தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு வரும் மார்ச் 11-ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்த உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
  • இதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவு சீட்டு இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் http://www.tnusrbonline.org/ இணையப் பக்கத்தில் சென்று நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Monday, 26 February 2018

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (J Krishnamurti) TNPSC HISTORY NOTES IN TAMIL PDF BY TNPSCSHOUTERS

TNPSCSHOUTERS


ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 121895பெப்ரவரி 171986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;
சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும் பின்னர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவ்வியக்கத்தைத் துறந்து தன்னிச்சையான கொள்கை கொண்டார்.
அவர் யோகியோ முனிவரோ அல்ல. குருவோ மடாதிபதியோ அல்ல. எந்தத் தத்துவத்தையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், 20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார்.
எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர் கிருஷ்ணமூர்த்தி. உண்மையைத் தேடும் யாத்திரையை ஒவ்வொருவருக் குள்ளும் சாத்தியப்படுத்தும் வழிமுறை அவருடையது. கவித்துவமான சொற்களில் தன் எண்ணங்களை இயல்பாக வெளிப்படுத்தியவர்.
முக்கியமான அறிவியலாளர்களும் தத்துவச் சிந்தனை கொண்டோரும் படைப்பாளிகளும் அவரை மதிக்கிறார்கள். அவர் உயிரோடு இருந்தபோது சாமானிய மனிதர்களிலிருந்து அறிவுஜீவிகள், அறிவியலாளர்கள்வரை பலரும் அவரோடு தொடர்ந்து உரையாடிவந்தனர். அவர் மறைந்த பின்பும் அவரது உரையாடல்களின், உரைகளின் பதிவுகள் ஆழ்ந்த அக்கறையோடு கேட்கவும் படிக்கவும்படுகின்றன.
அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.
வாழ்க்கை வரலாறு
மெட்ராஸ் மாகாணம் மதனப்பள்ளியில் (தற்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ளது) 1895-ல் பிறந்தார். இவரது தந்தை பிரிட்டிஷ் காலனி நிர்வாகத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவருக்கு 10 வயது இருந்தபோது தாய் இறந்துவிட்டார்.குடும்பம் 1903-ல் கடப்பாவில் குடியேறியது. பலவீனமானவன், கற்பனை உலகில் சஞ்சரிப்பவன், அறிவுக்கூர்மை இல்லாதவன் என்று உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் சிறு வயது முதலே இவரை விமர்சித்தனர்.
1907-ல் ஓய்வு பெற்ற அப்பாவுக்கு சென்னை அடையாறில் உள்ள தியசாபிகல் சொசைட்டியில் கிளார்க் வேலை கிடைத்தது. அதன் தலைவராக இருந்த அன்னிபெசன்ட் அம்மையார் சிறுவனிடம் மிளிர்ந்த ஆன்மிகத் தேடல் அறிகுறிகளையும் திறனையும் உணர்ந்தார். அவனை தத்தெடுத்துக்கொண்டார்.அமைப்பின் சார்பில் கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்பு பயிற்சிகளும் பெற்றார். அனைத்துலக ஆசான்என்று அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தியசாபிகல் அமைப்பின் எதிர்காலத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார்.18 வயதில் வினோதமான அனுபவங்கள் ஏற்படத் தொடங்கின.
மொழிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தத்துவம், ஆன்மிகம் குறித்துப் பேசவும் எழுதத் தொடங்கினார். வாழ்வியல், தியானம், தேடல், மனித உறவுகள், சமூக மாற்றம், மனம், சிந்தனை, விடுதலை ஆகியவை குறித்து உலகம் முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசினார்.தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம், தி ஒன்லி ரெவல்யூஷன், கிருஷ்ணமூர்த்தீஸ் நோட்புக் உள்ளிட்ட அவரது நூல்கள் மிகவும் பிரசித்தம். இவரது உரைகள், உரையாடல்களில் பெரும்பாலானவை புத்தகங்களாக வந்துள்ளன.
வெளி உலகில் தோன்றவேண்டிய மலர்ச்சியைவிட மனிதனின் மனத்தில் மலர்ச்சி தோன்றுவதே முக்கியம் என்றார். புரட்சி என்பது மத, அரசியல், சமூக ரீதியான வெளிமுக மாற்றம் அல்ல. அகத்தில் இயல்பான மறுவடிவம் பெறுதல்தான் புரட்சி என்றார்.இவர் 1922-ல் பலமுறை ஆன்மிக விழிப்புணர்வு நிலை அடைந்ததாகவும் அந்த அனுபவங்கள் இவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டதாகவும் கூறப்படுகிறது. தான் ஒரு தனிமனிதனாக மாறவேண்டும் என்ற உணர்வை இவரது அனுபவங்கள் தந்தன. எல்லாவிதமான தளைகளில் இருந்தும் விடுபட முடிவு செய்தார்.
அறக்கட்டளைகள், அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வெளியேறினார். 1929-ல் அனைத்துலக ஆசான்பட்டத்தையும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் துறந்தார். நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான் என்னால் சுதந்திரம் பற்றிப் பிறருக்குக் கூறமுடியும்என்றார். கடவுள், கோயில், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று உள்ளிட்ட அனைத்துமே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை என்றார். மத மாற்றம், கொள்கை மாற்றம் என்பதெல்லாம் மனித குலத்துக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்றும் கூறினார்.மனிதகுல மேம்பாட்டுக்காக தனது பேச்சாலும், எழுத்தாலும் முக்கியப் பங்காற்றிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 91 வயதில் (1986) மறைந்தார்.
பீடங்களைத் தவிர்த்த பயணம்
தத்துவ ஞானிகளின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் உலக குரு கிருஷ்ணமூர்த்திதான் என்று அன்னிபெசன்ட்டும் அவரது நண்பர்களும் அறிவித்தார்கள்.
அத்தகைய மகானின் வெளிப்பாட்டுக்கு உலகைத் தயார்ப்படுத்துவதற்காக உலகளாவிய ஓர் அமைப்பை (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) நிறுவி இளம் கிருஷ்ணமூர்த்தியை அதன் தலைவராக நியமித்தார்கள்.பின்னாளில், பல்வேறு படிமங்களையும் பீடங்களையும் அதிகாரக் கோட்பாடுகளையும் கலைக்கவிருந்த இளம் கிருஷ்ணமூர்த்தி, 1929-ல் அந்தப் பதவியைத் துறந்தார். பெரிய அளவில் ஆதரவாளர்களையும் ஏகப்பட்ட சொத்துகளையும் கொண்டிருந்த அந்த அமைப்பையும் கலைத்தார். அதன் பிறகு, 1986 பிப்ரவரி 17-ல் மரணம் அடைவதுவரையிலும் சுமார் 60 ஆண்டுகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மனித இனத்தில் தீவிரமான மாற்றங்கள் நிகழ வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிவந்தார்.
கிருஷ்ணமூர்த்தி என்ன சொன்னார்? அவர் எதையுமே சொல்லவில்லை என்று சொல்லலாம். எதையும் சொல்ல வில்லை. எதையும் கற்றுத்தரவில்லை. எந்தத் தத்துவத்தையும் கண்டுபிடிக்கவோ நிறுவவோ இல்லை. பிறகு எப்படி அவர் முக்கியமான தத்துவ ஞானியாகப் பார்க்கப்படுகிறார்?கிருஷ்ணமூர்த்தி தெளிவாகப் பார்க்கச் சொல்கிறார். அதையும் அவர் கற்றுத்தருவதில்லை. பார்க்க உதவுகிறார். எதைப் பார்க்க உதவுகிறார்?
எல்லா ஞானிகளையும் மார்க்கதரிசிகளையும் போலவே அவரும் மனித துக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். துயரம், அவலம், பகைமை, பொறாமை, வன்முறை, நிம்மதியின்மை, துரோகம், மதம், சேவை, கள்ளத்தனம், அதிகாரம், மோசடி, தியாகம், உன்னதம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார். அவரிடம் வருபவர்கள் தங்கள் கேள்விகளையும் குறைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர் உரைகளிலும் உரையாடல்களிலும் இவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ஆனால், எந்தத் தீர்வையும் அவர் தருவதில்லை.
இவற்றையெல்லாம் நாம் அணுகும் விதத்திலேயே பிரச்சினை இருக்கிறது என்கிறார். நமக்கு உவப்பற்ற விஷயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் அணுகுமுறையில் பிரச்சினை இருக்கிறது என்கிறார். என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் என்ன இருக்க வேண்டும் என்பதையே பார்த்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருப்பதன் விபரீதத்தை அடையாளம் காட்டுகிறார்.
மோதல்கள் பற்றிப் பேசுகிறார். வெவ்வேறு மனிதர் களுக்கிடையிலும் இனக் குழுக்களுக்கிடையிலும் சமூகங்களுக் கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் இருக்கும் மோதல்கள் பற்றி மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் பற்றியும் பேசுகிறார். நாம் எதிர்மறையானது என்று நினைக்கும் ஒன்றின் இருப்பைப் போக்குவதாலோ அதை மாற்றுவதாலோ இந்த மோதல் இல்லாமல் ஆகிவிடாது என்கிறார். மாறாக, இத்தகைய முயற்சியால் அந்த மோதல் அதிகரிக்கவே செய்யும் என்கிறார். மாற்ற வேண்டும் என்ற முயற்சியே மோதலுக்கு வழிவகுக்கும் அல்லது மோதலை அதிகரிக்கும் என்கிறார் ஜித்து.
எனில், நம்மைத் துன்புறுத்தும் விஷயங்களை என்னதான் செய்வது? பாருங்கள் என்கிறார் ஜே.கே. நன்றாகப் பாருங்கள், அதன் சகல அம்சங்களையும் அவற்றின் வேர்களோடும் கிளைகளோடும் கண்டு உணருங்கள் என்கிறார். இந்த ஆழமான அறிதல் அல்லது உணர்தலே தேவை. இந்த உணர்தல் மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார். மாற்ற வேண்டும் என்னும் முயற்சி மோதலைத்தான் கொண்டுவரும். ஆகவே, நாம் செய்ய வேண்டியது நம்மைப் பற்றியும் நமது சூழலைப் பற்றியுமான நமது புரிந்துகொள்ளலை, விழிப்புணர்வை ஆழமாக்கிக்கொண்டே போவதுதான்.
சுய படிமங்கள் அற்ற, சுயநலம் அற்ற, உரிமைகோரல்கள் அற்ற, அதிகார வேட்கை அற்ற, வசதியைக் கருத்தில் கொள்ளாத நிஜமான விழிப்புணர்வாக, புரிந்துணர்வாக இது அமைய வேண்டும். இது இயல்பான மாற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
உரையாடல் என்னும் தரிசனம்
கிருஷ்ணமூர்த்தியைப் போல உரையாடியவர்கள் அரிது. கேள்விகளை எதிர்கொண்டவர்களும் அரிது. ஆனால், கேள்விகளுக்குப் பதிலளிப்பது தன் வேலை அல்ல என்று அவர் கருதுகிறார். ஆனாலும் அவரிடம் பேசுபவர்களுக்குத் தங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவே செய்கின்றன. இது எப்படிச் சாத்தியம்?
கேட்டவரிடமிருந்தே பதில்கள் வருகின்றன. கிருஷ்ணமூர்த்தி கேள்விகளுக்குப் பதிலாகக் கேள்விகளையே முன்வைப்பார். எனக்குக் கோபம் அதிகமாக வருகிறது, இதுதான் என் பிரச்சினை என்று அவரிடம் ஒருவர் வருகிறார் என்றால், கோபம் என்பது என்ன என்று அவரைக் கேட்பார் ஜே.கே.
இது என்ன? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? இதன் வேர்கள் என்ன? கிளைகள், விழுதுகள் என்னென்ன? விளைவுகள் என்ன? இவற்றையெல்லாம் கிருஷ்ணமூர்த்தியும் அவரைச் சந்திக்க வருபவரும் சேர்ந்து ஆராயத் தொடங்குவார்கள். பதில்கள் அந்த நபரிடமிருந்து வரும். உரையாடல் தொடரத் தொடர அந்த நபர் தனக்கான விடைகளைக் கண்டுகொள்வார். ஜே.கே-வுடனான உரையாடல் என்பது அகம் காட்டும் கண்ணாடி.
இதுதான் கிருஷ்ணமூர்த்தியின் ஆகப் பெரிய பங்களிப்பு என்று சொல்லலாம். அவர் சொன்ன ஒரே ஒரு சொல்லைக்கூட நீங்கள் நினைவுவைத்திருக்க வேண்டியதில்லை. அவர் சொன்ன எதையும் நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை. உங்களை நீங்களே நிர்வாணப்படுத்திக்கொண்டு உங்களைப் பற்றிய அப்பட்டமான உண்மைகளை, பூச்சுகள் அற்ற உண்மைகளை உணரத் தலைப்பட்டீர்கள் என்றால், அந்தப் பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஜே.கே-வைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று பொருள்.
ஜே.கே-யின் சிந்தனைகளின் மூலம் வாழ்க்கையுடன் இயல்பாக உறவாடுதல் நமக்குச் சாத்தியமாகலாம். ஒரு மலையைப் பார்த்து ரசிக்கும்போது, அந்த மலையின் காட்சியில் தன்னை இழப்பது ஓர் அனுபவம். அந்த மலையின் நிலவியல் பற்றியோ அதன் கடந்த காலம், எதிர்காலம் பற்றியோ யோசிக்க ஆரம்பிக்கும்போதே அந்த மலைக்கும் நமக்குமான அனுபவம் நீர்த்துப்போகிறது.
இவ்வளவு அழகான மலையைப் பார்த்து ரசிக்க மற்றவர்களுக்குத் தெரியவில்லையே என்று நினைக்கும்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மலை உங்களை விட்டு விலகுகிறது. காலம், இடம், ஆளுமைகள், உறவுகள், சொந்தம் கொண்டாடுதல், உரிமைகோரல், அறிவு, துக்கம், அதிகாரம், படிமம், விருப்பு, வெறுப்பு, பதற்றம், மார்தட்டல் என எந்தக் குறுக்கீடும் அற்று ஒன்றும்போதுதான் உண்மையான அனுபவம் சாத்தியமாகிறது. இந்த அனுபவம் சாத்தியமாகும் இடத்தில் மோதலுக்கோ வன்முறைக்கோ துயரங்களுக்கோ இடமில்லை.
உலகில் நமக்கான பாத்திரத்தை ஏற்றுச் செயல்படுவது ஒரு தளம். நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையானது இது. நம் சூழலோடு இசைவிணக்கத்துடன் உறவாடுவது இன்னொரு தளம். இந்த இரு தளங்களுக்கிடையிலும் சமநிலை காண்பதே நாம் செய்யக்கூடிய ஆகப் பெரிய சாதனை. இந்தச் சமநிலை நிலவும் சூழலில் வன்முறைக்கும் மோதல்களுக்கும் இடம் இருக்காது. ஜே.கே-யின் சொற் களோடு புழங்கப் புழங்க இதுபோன்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். இதை அடைவதற்கான பார்வையை ஜே.கே-யின் சிந்தனைகளிலிருந்து பெறலாம்.
திறந்த சிந்தனையின் வீச்சு
கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் பல்வேறு நூல் களிலும் ஒலிப் பேழைகளிலும் கிடைக்கின்றன. கல்வி, வன்முறை, சமாதானம், கடவுள், போர்கள், அறிவு எனப் பல விஷயங்களைப் பற்றியும் ஜே.கே. பேசுகிறார். இவை முன்கூட்டியே யோசிக்கப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடு கள் அல்ல. அடிவாரத்திலிருந்து படிப்படியாக மலை ஏறும் அனுபவம் போன்றது. அந்தக் கணத்தில் நிகழும் பயணம். பயணத்தினூடே உருவாகும் பாதைகள்.
மனக் கட்டுப்பாடு, புலனடக்கம் ஆகியவற்றை ஜே.கே. ஏற்கவில்லை. கட்டுப்பாடு, நீக்குதல், களைதல் என்பவை எல்லாமே எதிர்மறையான அணுகுமுறைகள் என்கிறார் ஜே.கே. விழிப்புதான் தீர்வு என்கிறார். அன்பு செலுத்து என்று அவர் சொல்லவில்லை. தேர்வுகள் அற்ற மெய்யான விழிப்பு இருந்தால் அன்பு செலுத்தும் மனமும் பொறாமை அம்சங்கள் தவிர்த்த மனமும் இயல்பாக மலரும் என்பதே ஜே.கே-யின் அணுகுமுறை.
தேர்வுகள் அற்ற விழிப்புணர்வு, வாழ்வெனும் நீரோட்டத்தில் முடங்கிவிடாமல், மூழ்கிவிடாமல் மிதந்தபடி இருத்தல், படிமங்களின் சுமைகளிலிருந்து விடுதலை, அறிவின் சுமையிலிருந்து விடுதலை, அனுபவத்துக்கும் அனுபவிப்பவருக்கும் இடையேயான இடைவெளி தவிர்த்தல், தற்கணத்தில் வாழுதல் எனப் பல சொற்றொடர்களைக் கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளாகச் சொல்லலாம்.
இவற்றைப் பின்பற்ற முயற்சிசெய்யலாம். பிரச்சாரம்கூடச் செய்யலாம். ஆனால், தன்னை உள்ளது உள்ளபடியே அறிதல் என்னும் முயற்சியில் ஒரு சில எட்டுக்களேனும் எடுத்து வைக்க இயலாதவர்களுக்கு இந்தச் சொற்களால் எந்தப் பலனும் இல்லை.
இந்த இடத்துக்கு வந்து சேரப் பாதை இல்லை. ஜே.கே. சொல்வதுபோல, உண்மை என்பது பாதைகள் அற்ற நிலம். உண்மையான அறிதலை, விழிப்பை, விழையும் மன இயக்கம் கொண்டவர் ஜித்து கிருஷ்ணமூர்த்தியைத் தன் சக பயணியாகக் கண்டு உணர்வார்.

நெருக்கடி நிலையை இந்தியாவில் அறிவித்திருந்த இந்திராகாந்தி, ஆலோசனைக்காக தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் வந்திருந்தார்.

Sunday, 25 February 2018

கங்குபாய் ஹங்கல் (GANGUBHAI HANGAL) - TNPSC HISTORY NOTES IN TAMIL PDF BY TNPSCSHOUTERS

TNPSCSHOUTERS
‘கங்குபாய் ஹங்கல்’ என்பவர் இந்துஸ்தானி இசை உலகின் மிக பிரபலமானவர்களுள் ஒருவராவார். கர்நாடக இசை வல்லுனரான ஒரு தாய்க்கு பிறந்த கங்குபாய் ஹங்கல் அவர்களின் பாடும் திறன், அவரது மரபணுக்களில் ஏற்கனவே இருந்தது எனலாம். ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டு, கங்குபாய் ஹங்கல் அவர்களின் குரலை அடையாளம் காணலாம். அவர் ‘கிரானா காரனா’ என்னும் கரானாவை சேர்ந்தவர் மற்றும் 1930 களின் ஆரம்பத்தில், சிறந்த படைப்பாற்றல் மிக்க இந்துஸ்தானி காயல் கரானாக்களில் ஒன்றான காயல் வகையில் பயிற்சி மேற்கொண்டார். மிகச் சிறிய வயதிலேயே அவர் பள்ளியை விட்டு விலகினாலும், பாரம்பரிய இசையில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களிடமிருந்து இசைக் கற்று, இசை கல்வியில் புலமைப் பெற்று விளங்கினார். இசைத்துறையில் அவருக்குள்ள திறமைகளையும், சாதனைகளையும் கௌரவிக்கும் ‘இசை பேராசிரியர்’ பதவியையும் கர்நாடகா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார். இத்தகைய சிறப்புமிக்க இந்துஸ்தானி இசைப் பாடகரான கங்குபாய் ஹங்கல் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: மார்ச் 5, 1913
பிறந்த இடம்: தர்வத், கர்நாடகா, இந்தியா
இறப்பு: ஜூலை 21, 2009
தொழில்: இந்துஸ்தானி இசை பாடகி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
கங்குபாய் ஹங்கல் அவர்கள், இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்வத் நகரில் மார்ச் 5, 1913 அன்று பிறந்தார். அவரது தந்தை, சிக்குராவ் நாடிகர் தொழில்ரீதியாக ஒரு விவசாயி ஆவார், மேலும் அவரது தாயார் அம்பாபாய் ஒரு  கர்நாடக இசைப் பாடகியாக இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
தனது பள்ளிப்படிப்பை சிறு வயதிலேயே முடித்துக்கொண்ட கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஆரம்ப கல்வி மட்டுமே கற்றிருந்தார். 1928ல், அவரது தொடக்கக் கல்வியை முடித்த பின்னர், அவரது குடும்பம் ஹூப்ளி நகருக்கு குடிபெயர்ந்தது, மேலும் அங்கு அவர் தீவிரமாக ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை பாடங்களைக் கற்கத் தொடங்கினார்.
இசைப் பயிற்சி
ஹங்கல் அவர்களுக்கு பதிமூன்று வயதிருக்கும் போது, அவரது முதலாவது, முறையான இந்துஸ்தானி பாரம்பரிய இசைப் பாடத்தை ‘கிருஷ்ணா ஆச்சார்யா இசை அகாடமியில்’ மேற்கொண்டார். அவர் ஹூப்ளி வந்த பிறகு, தத்தோபன்ட் தேசாய் அவரது இசை ஆசிரியர்களுள் ஒருவராக இருந்தாலும், இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் அவரது உண்மையான குருவாக கருதியது ‘சவாய் கந்தர்வா’ என்பவரைத் தான். ஹங்கல் அவர்களின் குடும்பம் ஹூப்ளிக்கு வந்த போது, சவாய் கந்தர்வா அவர்கள் அங்கு வசிக்கவிட்டாலும், அவர் ஹூப்ளிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர், சவாய் கந்தர்வா ஹூப்ளி நகருக்குக் குடிபெயர்ந்ததால்,  கங்குபாய் ஹங்கல் அவரது குருவான அவரிடம், மூன்று ஆண்டுகளுக்கான ஒரு இசைப் பயிற்சியை மேற்கொண்டார். ஹங்கல் அவர்களின் குழந்தைப் பருவம் இனிமையானதாகவும், பாரம்பரியமிக்கதாகவும் இல்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன. அவர் ஒரு வேசி குடும்பத்தில் இருந்து வந்ததால், சமுதாயத்தில் மற்ற குழந்தைகள் அவரை பெரும்பாலும் அவமானப்படுத்தினார்கள். இதே எண்ணம், அவர் வளர்ந்து, இசைத்துறையை தனது தொழிலாக தேர்ந்தெடுத்த போதும் கூட, பலரது மனதிலும் நீடித்திருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஹங்கல் அவர்கள் ஹூப்ளிக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து, ஹூப்ளிவாசியான குருராவ் கால்கி என்ற ஒரு பிராமண வழக்கறிஞரைத் திருமணம் செய்தார். குழந்தைத் திருமணங்கள், சமுதாயத்தில் பொதுவானதாக மட்டுமல்லாமல், கட்டாயமானதாகவும் இருந்து வந்ததன் விளைவாக, அவருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடந்தது எனலாம். திருமண வாழ்க்கை அவரது இசைத்துறைக்கு முற்றுப்புள்ளி வைக்காததால், அவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, பல விருதுகளும், அங்கீகாரங்களும் பெற்றார்.
இசைப் பயணம்
கங்குபாய் ஹங்கல் அவர்கள், கர்நாடகாவின் சிறிய நகரங்களில் வாழ்ந்ததால், அவர் பல மோசமான விளைவுகளை சந்தித்தார். அந்த காலக்கட்டத்தில் சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கத்தால், பெண்கள் அவர்களுடைய விருப்பப்படி எதையும் செய்வதற்கு உரிமை இல்லை, மீறி அவர்களது எண்ணப்படி நடந்து கொண்டால், அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள். அதே நேரத்தில், கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைக் கொண்டு அதில் உறுதியாகவும் இருந்தாலும், சமூகம் அவருக்குத் தடைகளை அளித்து, அவரது எண்ணத்தைத் தடுக்க எண்ணியது. எனினும், ஹங்கல் அவர்கள், எந்தவொரு அடக்குமுறைக்கும் அடங்கிவிடாமல், இந்துஸ்தானி இசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்த மிகக் கடுமையாகப் போராடினார். 1945 ஆம் ஆண்டு வரை, கங்குபாய் ஹங்கல் அவர்கள், இந்தியா முழுவதும் பல நகரங்களில் காயல், பஜனைகள் மற்றும் தும்ரிக்களைப் பொதுமக்கள் முன் பாடினார். அவரது குரல், வானொலி வலையமைப்பான ‘ஆல் இந்தியா ரேடியோவில்’ வழக்கமாக ஒளிபரப்பாகின. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் கலந்து கொள்ள வழக்கமாக அவருக்கு அழைப்பு வந்தால், பாட வேண்டுமென்ற எண்ணம் ஹங்கல் அவர்களுக்கு எப்போதும் இருந்தது, அதிலும் குறிப்பாக மும்பையில் நடத்தப்படும் கணேஷுதவாஸ்  கொண்டாட்டங்களில் பாடுவதற்கு, அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கங்குபாய் ஹங்கல் அவர்கள் படிப்படியாக தனது விருப்பத்தை ராகங்களுக்கு மாற்றினார். 1945க்கு பிறகு, அவர் ராகங்களில் மட்டுமே நிகழ்ச்சிகள் அரங்கேற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். அவர் கர்நாடக பல்கலைக்கழகத்தின் ‘கெளரவ இசைப் பேராசிரியராக’ நியமிக்கப்பட்ட பிறகும் கூட, பொது கச்சேரிகளிலும் தோன்றினார். அவரது மரணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான், அவர் பாடுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார்.
இல்லற வாழ்க்கை
1929ல், தனது பதினாறாவது வயதில், கங்குபாய் ஹங்கல் அவர்கள், திருமணம் செய்து கொண்டார். அவரது கணவரான குருராவ் கால்கிக்கும், அவருக்கும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அவரது 20வது வயதில், அவரை அதிர்ச்சி நிலையில் விட்டு, அவரது கணவர் இறைவனடி சேர்ந்தார். தனது குழந்தைகளை வளர்க்க பணம் திரட்டும் விதமாக, கங்குபாய் அவர்கள், தனது நகைகள் மற்றும் பிற வீட்டுப் பொருள்களை விற்றார். அவரது மகளான கிருஷ்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,  2004 ஆம் ஆண்டில் இறந்தார். கங்குபாய் ஹங்கல் அவர்களும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நோயாளியாக இருந்ததால், சிகிச்சை மேற்கொண்டு, வெற்றிகரமாக 2003 ஆம் ஆண்டில், அந்நோயிலிருந்து மீண்டு வந்தார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
இந்துஸ்தானி இசையில், கங்குபாய் ஹங்கல் அவர்களின் பங்களிப்பையும், சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, இந்திய அரசும், கர்நாடக மாநில அரசும் பல்வேறு விருதுகளை அவரது நீண்ட இசைப் பயணத்தில் வாரி வழங்கின. கீழ் வருவன, அவர் வாங்கிய விருது பட்டியல்:
  1962: கர்நாடக சங்கீத நிருத்யா அகாடமி விருது
  1971: பத்ம பூஷன் விருது.
  1973: சங்கீத நாடக அகாடமி விருது
  1996: சங்கீத் நாடக அகாடமி விருது
  1997: தீனநாத் பிரதிஷ்டான்
  1998: மாணிக் ரத்தன்
  2002: பத்ம விபூஷன் விருது
இறப்பு
கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு கடுமையான மாரடைப்பால் ஜூலை 21, 2009 ஆம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி நகரில் அவரது வீட்டில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 96. ஒரு சில ஆண்டுகள் நோயால் அவதியுற்றார். ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளை கர்நாடக மாநில அரசாங்கம், துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களாக அறிவித்தது. அவருடைய சாதனைகளைக் கொண்டாடும் விதமாகவும், திறமைகளை மதிக்கும் விதமாகவும் தர்வத் ஆணையர், ஒரு மாநில இறுதி ஊர்வலத்தை ஹூப்ளியில் ஜூலை 22 ஆம் தேதி ஒருங்கிணைத்தார். தான் வாழ்ந்த சமூகத்தில் தனக்குண்டான முக்கிய கடமைகளையும், தனது வாழ்வில் முக்கிய பங்காற்றிய மனிதர்களையும், கங்குபாய் ஹங்கல் அவர்கள், ஒரு போதும் மறந்ததில்லை. உறுப்பு நன்கொடை முக்கியத்துவத்தை, சமுதாயத்திற்கு கற்பிக்கும் விதமாக, அவரது மரணத்திற்கு முன்பு, அவர் தனது கண்களை தானம் செய்தார்.
காலவரிசை
1913 கங்குபாய் ஹங்கல் அவர்கள், மார்ச் 5 ம் தேதி பிறந்தார்.
1926: கிருஷ்ணா ஆச்சார்யா இசை அகாடமியில், இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் அவரது முதல் பாடத்திற்கான பயிற்சி மேற்கொண்டார்.
1928: அவரது குடும்பம் தர்வத்திலிருந்து ஹூப்ளி நகருக்கு இடம்பெயர்ந்தனர் .
1929: அவர் குருராவ் கால்கி என்ற வழக்கறிஞரை மணமுடித்தார்.
1933: அவரது கணவர், திருமணமான நான்கு ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டார்.
1945: காயல், பஜனைகள் மற்றும் தும்ரிக்களை பாடுவது தவிர்த்து, ராகங்களை மட்டுமே பாடத் தொடங்கினார்.
1962: ‘கர்நாடக சங்கீத நிருத்யா அகாடமி விருது’ பெற்றார்.
1971: இந்திய அரசாங்கம் ‘பத்ம பூஷண் விருதினை’ அவருக்கு அள்ளிக் கொடுத்தது.
1973: ‘சங்கீத நாடக அகாடமி விருது’ பெற்றார்.
1996: ‘சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப்’ வென்றார்.
1997: ‘தீனநாத் பிரதிஷ்டான்’ வழங்கப்பட்டது.
1998: ‘மாணிக் ரத்தன்’ பெற்றார்.
2002: ‘பத்ம விபூஷன் விருது’ பெற்றார்.
2006: பொது நிகழ்ச்சிகளில் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.
2009: கடுமையான மாரடைப்பால் ஜூலை 21 ஆம் தேதி இறந்தார்.

Saturday, 24 February 2018

உருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) - TNPSC TAMIL NOTES PDF BY TNPSCSHOUTERS

TNPSCSHOUTERS
உருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 291904  பெப்ரவரி 241986) மதுரையில்பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்குபரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டுமொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர்பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.
வாழ்க்கை வரலாறு
உருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோஃபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணிரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.
1920 ஆம் ஆண்டில்ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காகஅன்னி பெஸண்ட் அழைத்தார். அன்னி பெஸண்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமணம் அக்காலக் கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசைசிற்பம்ஆப்பராபாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும்கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை உருக்மிணி கண்டதில்லை.
தமது கணவர் அருண்டேலைப் பற்றி கூறும் போது, அவரை இந்தியர்களை விடச் சிறந்த இந்தியர் என்றும் இந்திய நாட்டின் மேன்மையில், இந்திய நாட்டில் பிறந்த மகரிஷிகளின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் என்றும் பாரதப் பண்பாட்டைப் புரிந்து அதை நேசித்தவர் என்றும் உருக்மிணி தேவி குறிப்பிடுவார்.
1933 ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியானமயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று1935 ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.
சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார்.
உருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.
1977 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, உருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.
கலைகளில் பங்கு
நாட்டியம்
உருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது.
அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு உருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார்.
தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக உருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங்அலெக்ஸ் எல்மோர்மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார்.
வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்.
நெசவு
உருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார்.
மரபுக்கொடை
2016ல், கூகிள் நிறுவனம், உருக்மணி தேவியின் 112 வது அகவையை தமது முதற்பக்கக் கிறுக்கல் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது.
பெற்ற விருதுகள்
·         பத்ம பூசண் விருது
·         காளிதாஸ் சம்மன் விருது
·         சங்கீத நாடக அகாதமி விருது

Free Download Model Question Paper of TNPSC Group - 2A Exam in PDF 2018

TNPSCSHOUTERS
Hey TNPSC Shouters,

We are happy to provide Free Model Question Paper  TNPSC Group - 1, Group 2, Group 2A, Group 4 & VAO Exam including General Tamil, Current Affairs, General Science, Economics, Geography, Indian History, Indian Politics, Indian National Movement & Aptitude in PDF.


Any Problem on Download : Call @ 9698694597 or 
Mail at tnpscshouters@gmail.com

GROUP - 2A EXAMINATION


S.NO
NAME OF THE TEST
MEDIUM
LINK
TNPSC POTHU TAMIL FOR ALL EXAMS
1.
GENERAL TAMIL / POTHU TAMIL
Tamil
TNPSC GENERAL STUDIES FOR ALL EXAMS
1.
GENERAL SCIENCE
(PHYSICS, CHEMISTRY,
BOTANY & ZOOLOGY )
Tamil
2.
CURRENT AFFAIRS / GENERAL KNOWLEDGE
Tamil
3.
GEOGRAPHY
Tamil
4.
HISTORY AND CULTURE OF
INDIA, TAMIL NADU
Tamil
5.
INDIAN POLITY
Tamil
6.
INDIAN ECONOMY
Tamil
7.
INDIAN NATIONAL MOVEMENT
Tamil
8.
APTITUDE & MENTAL ABILITY TEST
Tamil
TNPSC GROUP – 2 PRELIMINARY EXAMINATIONS
FULL TEST
1.
GROUP 2 PRELIMINARY FULL TEST - 1
Tamil
2.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 2
Tamil
3.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 3
Tamil
4.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 4
Tamil
5.
GROUP 2 PRELIMINARY FULL TEST - 5
Tamil
6.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 6
Tamil
7.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 7
Tamil
8.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 8
Tamil
9.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 9
Tamil
10.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 10
Tamil
11.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 11
Tamil
12.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 12
Tamil
13.
GROUP 2 PRELIMINARY FULL TEST – 13
Tamil
14.
GROUP 2 PRELIMINARY FULL TEST - 14
Tamil
OTHER TESTS
1.
TET MODEL QUESTION PAPER
Tamil
2.
SAIDAI DURAI SAMY TNPSC MODEL QUESTION PAPER
Tamil
3,
TNPSC FULL TEST FOR GENERAL STUDIES
ENGLISH