Friday, 12 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 12th JANUARY 2018

தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய அறிஞர்களை கவுரவிக்கும் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு
  • தமிழக அரசின் 2017-2018-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கும், திருவிக விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும் வழங்கப்படவுள்ளது. 
  • தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய உயர்வு ஆகியவற்றுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 9 விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜன.12) வெளியிட்டுள்ளார். 
விருது பெறுவோர் பட்டியல்
1. திருவள்ளுவர் விருது (2018) - முனைவர் கோ.பெரியண்ணன், தலைவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம். 
2. தந்தை பெரியார் விருது - பா.வளர்மதி, தலைவர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.
3. அண்ணல் அம்பேத்கர் விருது - டாக்டர் ஜார்ஜ் கே.ஜே, முன்னாள் இயக்குநர், மான்ஃபோர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி.
4. பேரறிஞர் அண்ணா விருது - அ. சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்.
5. பெருந்தலைவர் காமராஜர் விருது - தா.ரா தினகரன், அருப்புக்கோட்டை ஸ்ரீ ராமலிங்கா மில்ஸ், ஜெயவிலாஸ் குழுமத்தின் தலைவர்.
6. மகாகவி பாரதியார் விருது - முனைவர் சு பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன், தமிழியல் துறைத் தலைவர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது - கே. ஜீவபாரதி, எழுத்தாளர்- கவிஞர்
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது - எழுத்தாளர் பாலகுமாரன், 
9. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - தமிழறிஞர் மருதநாயகம்.
நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்
  • இந்தியாவிலே முதல்முறையாக வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. 
  • இந்நிலையில், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த நீதிபதிகள்
  • இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் சுப்ரீம் கோர்ட்டில் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இன்று மதியம் 12.15 மணிக்கு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். 
100வது செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி
  • கடந்த ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ் 1-எச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியை தழுவியது. இந்நிலையில் கார்ட்டோசாட்-2 உள்பட 31 செயற்கைக்கோள்களை 
  • அதன்படி இன்று இந்தியா தனது 100வது செயற்கைகோள் மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதல் செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 
  • இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு துவங்கியது. இந்த ராக்கெட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
  • 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது, ஏவப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment