Tuesday, 16 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 14th & 15th JANUARY 2018

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
  • கடன் சுமையில் சிக்கி தவிக்கும் 'ஏர் இந்தியா'வின் பங்குகளை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
  • 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. 
  • எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிமான அளவுக்கு கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.
  • பெரும் கடன் சுமையில் திணறும் ஏர் இ்ந்தியாவின் பங்குகள் நான்கு நிறுவனங்களாக பிரித்து விற்பனை செய்யப்படும் அதற்கான பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்..மேலும் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரே நிறுவனமாக விற்கப்படும் என்றார்.
நாட்டின் ஏற்றுமதி ரூ.1.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • நாட்டின் ஏற்றுமதி சென்ற டிசம்பர் மாதத்தில் 2,703 கோடி டாலராக (ரூ.1,75,695 கோடி) அதிகரித்துள்ளது.
  • பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருள்கள் துறை நிறுவனங்களின் ஏற்றுமதி சென்ற டிசம்பரில் விறுவிறுப்பைக் கண்டுள்ளது. இதையடுத்து, அந்த மாதத்தில் ஏற்றுமதி 12.36 சதவீதம் அதிகரித்து 2,703 கோடி டாலரானது.
  • ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேசமயத்தில், இறக்குமதியும் 21.12 சதவீதம் உயர்ந்து 4,191 கோடி டாலராகியுள்ளது. இதற்கு, தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்ததே முக்கிய காரணம். ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகரித்துள்ளதையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 41 சதவீதம் உயர்ந்து 1,488 கோடி டாலரை எட்டியுள்ளது. 
ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
  • மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் எண் உள்ளிட்டவைகளும் ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு கூறி வருகிறது.
  • மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆதாரில் உள்ள கைரேகையுடன், பலரின் கைரேகை ஒத்துப் போவதில்லை என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. 
  • பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கே இந்த பிரச்னை இருந்து வருகிறது.இந்த பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய வசதியை துவக்க உள்ளதாக உதய் (UDAI) இன்று தெரிவித்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment