Sunday, 7 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 7th JANUARY 2018

மார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை: தனி நபர் மசோதா தாக்கல்
 • அரசு மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பான தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 • தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளார். மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை மட்டுமல்லாமல் அதை கண்டறியும் சோதனைகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அம்மசோதாவில் சுப்ரியா சுலே கேட்டுக்கொண்டுள்ளார்.
 • மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இம்மசோதாவை சுப்ரியா சுலே கொண்டுவந்துள்ளார்
திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நிறைவு
 • திருச்சியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
 • திராவிடர் கழகம், விஜயவாடா நாத்திகர் மையம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன், பன்னாட்டு நன்னெறி ஒன்றியத்தின் செயல் இயக்குநர் கேரி மெக்லேலண்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓகேசி, மகாராஷ்டிர அந்தஸ்ரத்தா நிர்மூலன் சமிதி செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
 • இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்றது. மாலையில், திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விஜயவாடா நாத்திக மையத்தின் செயல் இயக்குநர் சி.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 • மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம், சிறுகனூரில் உள்ள பெரியார் உலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
 • இதையடுத்து கருத்தரங்க அமர்வு கே.கே.நகர் பெரியார் மணியம்மை மருந்தியியல் கல்லூரி வளாகத்தில் ஒடிஸா பகுத்தறிவாளர் அறக்கட்டளை பேராசிரியர் தானேசுவர் சாஹோ தலைமையில் நடைபெற்றது.
 • நிறைவு விழாவில், தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் எம். நாகநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மூத்த வழக்குரைஞர் ரவிராம்குமார், பன்னாட்டு நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓகேசி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் நிறைவுரையாற்றினர்.
 • தொடர்ந்து, அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் போன்ற பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பார்வையாளர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.
 • தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்பட்ட இவ்விழாவில், பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் தலைவர் ஜெ. தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
யோகா பூங்கா அமைக்க ரூ.14 கோடி: மத்திய அமைச்சர் தகவல்
 • இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் யோகா பூங்கா அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ பட் நாயக் தெரிவித்துள்ளார்.
 • கன்னியாகுமரியில் தேசிய பாரம்பரிய சித்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் ஆயுஷ் எனப்படும் பாரம்பரிய முறை சிகிச்சைக்கான மருத்துவமனை துவங்க 14 கோடி ரூபாய் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ பட்நாயக் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய செயற்கை கோள் வடிவமைப்பு... இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த தயாரிப்பு
 • இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. நாட்டின் அதிக எடை கொண்ட செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஜிசாட் - 11 என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைகோள் இந்தியாவின் இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
 • சுமார் ரூ.500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைகோள் 6 டன் எடை கொண்டது. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பங்களிக்கும் வகையில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்த செயற்கை கோள் வாயிலாக கிராம பஞ்., தாலுகா பகுதிகளுக்கும், பாதுகாப்பு துறைக்கும் உள்ள இணையதள வசதியை மேம்படுத்த முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாற்றுத் திறனாளிகளும் 'ஹஜ்' புனிதப் பயணம் செல்லலாம் 60 ஆண்டுகால தடையை நீக்குகிறது மத்திய அரசு
 • முஸ்லிம்களின் ‘ஹஜ்’ புனிதபயணத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி கிடையாது என்ற 60 ஆண்டுகால நடைமுறைகளை ரத்து செய்து, அவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
 • மாற்றுத்திறனாளிகள் உரிமை குழு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடத்திய போராட்டம், மத்திய சிறுபான்மை நலத்துறைக்கு விடுத்த கோரிக்கையையடுத்து இந்த முடிவு அரசு அறிவிக்க உள்ளது.
 • ஹஜ் குழுவின் விதிமுறைகளில் கடந்த 60 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகளில், “போலியோ, காசநோய், இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ’’ ஆகியோர் ஹஜ் புனிதப் பயணத்துக்கு அரசிடம் விண்ணப்பிக்க முடியாது.
தூய்மை இந்தியா திட்ட தூதர் ஆனார் சசிகுமார்
 • மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 • மாநகராட்சி, நகராட்சிகள் தூய்மை இந்தியா திட்டத்திற்கு செலிபிரிட்டிகளை தூதர்களாக நியமித்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டின் தூய்மை இந்தியா திட்ட தூதராக கமல்ஹாசனை மத்திய அரசு நியமித்தது.
 • இதே போல திண்டுக்கல் மாநகராட்சி திண்டுக்கல் பகுதி தூய்மை இந்தியா திட்ட தூதராக நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான சசிகுமாரை நியமித்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment