Wednesday, 3 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 3rd JANUARY 2018

எழுத்தாளர்கள் ராஜ் கெளதமன், சமயவேலுக்கு விளக்கு விருது
 • எழுத்தாளர்கள் ராஜ் கெளதமன், சமயவேலுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • அமெரிக்கத் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் 1996-ஆம் ஆண்டு முதல் புதுமைப்பித்தன் நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது. 
 • ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள இந்த விருது, தமிழின் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, சி.மணி, ஞானக்கூத்தன் உள்பட பலர் இவ்விருது பெற்றுள்ளனர்.
மத்திய அரசு தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம்
 • ஊழியர் தேர்வு ஆணையம் (SSC) மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆகியவற்றால் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு  தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா-மியன்மார் எல்லைப் போக்குவரத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான நில எல்லைப் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இரு நாடுகளின் எல்லையில் உள்ள சாதாரணமாக வாழும் மக்களுக்கு ஏற்கெனவே இருக்கும் சுதந்திர இயக்க உரிமைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒத்திசைத்தல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும். 
நாட்டிலேயே மாணவர்கள் தற்கொலையில் தமிழகத்திற்கு 3வது இடம்
 • நாட்டிலேயே மாணவர்கள் தற்கொலையில் தமிழகத்திற்கு 3வது இடத்தில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 • முதல் இரண்டு இடங்களில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மாநிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இளம் விஞ்ஞானி விருது பெற்ற தமிழக மாணவர் எம்.சின்னகண்ணன்
 • "மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு" என்ற தலைப்பில், ஈரோடு மாணவர் எம்.சின்னகண்ணன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவனுக்கு "இளம் விஞ்ஞானி" விருதும், பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.
தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு
 • சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது, புத்தூர் அரசுப் பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. 
 • நடுகல்: ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீரமரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி, பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும்போது இறந்தவர்கள், தன் நாடு போரில் வெற்றிபெற கொற்றவையின் முன் தன் உயிரை தானே பலி கொடுத்து கொண்டவர்கள், மக்கள் நலனுக்காக உயிரிழந்தவர்கள் இவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. 
 • புத்தூரில் காணப்படும் நடுகற்கள் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். இவை 40 செ.மீ. உயரம் 35 செ.மீ. அகலம் உடையதாக உள்ளது. இதில் ஒரு நடுகல் தலை இல்லாமல் உள்ளது. இதை தலைவெட்டி சாமி என ஊர்மக்கள் அழைக்கிறார்கள். முதல் நடுகல்லானது பின்னோக்கிய இடதுபக்கக் கொண்டையுடனும், இடது கையில் வில் பற்றி வலது கையில் நாணில் அம்பை பூட்டி தொடுக்கும் நிலையில் உள்ளது. முதுகுப் பக்கம் அம்புக்கூடு இடையில் அரையாடை இடுப்பில் குறுவாளுடன் இடது பக்கம் எதிரியைத் தாக்கும் நிலையில் உள்ளது. 
 • இரண்டாவது நடுகல்லானது தலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. கழுத்தில் சரபளியும் சவடியும் உள்ளது. மார்பில் சன்னவீரம், வலது கையில் கத்தி, இடது கையில் வில் ஏந்தியும், வயிற்றுக்கட்டும் (உதிரபந்தம்) உள்ளது. வயிற்றுக் கட்டின் சுங்கு முடிச்சு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை அரையாடையும், வலது கால் நேராகவும் இடது கால் இடப்பக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. 
 • சன்ன வீரம்: இந்த நடுகல்லில் காணப்படும் சன்னவீரம் முக்கியமான ஒன்றாகும். சன்ன வீரத்துடன் காணப்படும் நடுகற்கள் அரிதாகவே உள்ளன. சன்னவீரம் போர்க்கடவுளான முருகன் அணிவதாகும். இது வீரத்தின் சின்னம் வீரச்சங்கிலியில் அமையும் ஓர் உறுப்பாகும். கழுத்தைச் சுற்றியும் மார்பணிகளைச் சுற்றியும் ஒரு மூலையிலிருந்து எதிர்மூலைக்கு குறுக்கே சென்று முதுகிலும் அமைந்த இரு சங்கிலிகள் சன்ன வீரம் எனப்படும். 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment