Friday, 5 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 5th JANUARY 2018

மேற்கு வங்காளத்தின் பிரத்யேக சின்னம்: மம்தா பானர்ஜி அறிமுகம்
 • மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி வடிவமைத்த பிரத்யேக மாநில சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து புதிய சின்னம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 • அசோகத் தூண் அடங்கிய பிஸ்வா பங்ளா சின்னம் கடந்த மே மாதம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அரசு சின்னத்திற்கு மத்திய அரசு ஜனவரி மூன்றாம் தேதி அனுமதி அளித்து உள்ளது. 
10 ரூபாய் நோட்டு வெளியீடு
 • மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம், 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகள வெளியீட்டு வருகிறது. இந்நிலையில், இன்று புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 
 • இந்த ரூபாய் வழக்கமான நிறத்தை விட, சாக்லேட் கலந்த விதமாக உள்ளது. இந்த ரூபாய் விரைவில் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு புழக்கத்தில் வரும். பழைய 10 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருக்கும்.
நீதிபதிகளின் சம்பளம் - மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு
 • உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் இருமடங்காக உயர உள்ளது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 • நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 
 • அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.
 • 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஓய்வு பெற்ற 2,500 நீதிபதிகளும் சம்பள உயர்வால் பலனடைவார்கள்.
 • 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு தேவை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளுக்குப் பதிலாக 25 பேரே பணியில் உள்ளனர். 24 உயர் நீதிமன்றங்களில் 1,095 நீதிபதிகள் தேவை. மாறாக 682 நீதிபதிகள்தான் பணியில் உள்ளனர்.
திருவாடானை அருகே வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு
 • ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா சூரம்புலி அருகே செம்பிலான்குடியில் தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுக்கும் வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 • வீரர்கள், போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும், தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும், காளி, கொற்றவை உள்ளிட்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு, அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களேஅரிந்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை, கல்வெட்டுகள் 'தூங்குதலை குடுத்தல்' என்கின்றன. இந்த முரட்டு வழிபாடு தலைப்பலி, நவகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. 
 • அன்பின் மிகுதியால் தனக்கென வாழாது, ஊரின், நாட்டின் நலனுக்காக தன் தலையையோ அல்லது உடல் உறுப்புகளையோ காணிக்கையாகத் தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. அவ்வாறு உயிர்நீத்த வீரர்களின் வம்சாவளியினருக்கு நிலம் தானமாக வழங்குவர். இதை உதிரப்பட்டி என்பர். இவ்வாறு இறந்தவர்களை சாவான்சாமி என தெய்வமாகவும் வணங்குகிறார்கள். 
 • அமர்ந்த, நின்ற அல்லது முழங்காலிட்ட நிலையில் இருக்கும் வீரன், தனது ஒரு கையால் தலைமுடியை பற்றிக்கொண்டும், மறுகையிலுள்ள வாளால் தன் தலையை வெட்டுவது போன்ற அமைப்பில்தான் பெரும்பாலான நவகண்ட சிற்பங்கள் இருக்கும். சிலவற்றில் வீரனின் ஒரு கையிலுள்ள வாள் கழுத்திலும், மற்றொரு கையிலுள்ள வாள் நிலத்தில் குத்தி இருப்பது போன்றும் இருக்கும். வாளை வளைத்து பின்கழுத்தில் இரு கைகளாலும் வெட்டுவது போன்ற சிற்பங்களும் கிடைத்துள்ளன.
 • நாட்டுக்காக உயிர் துறத்தலை அவிபலி என தொல்காப்பியம் கூறுகிறது. நவகண்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. 
 • பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மல்லல், குன்றக்குடி, விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை, மதுரை மாவட்டம் தென்கரை, திண்டுக்கல் மாவட்டம் பழனி, அம்மையநாயக்கனூர்ஆகிய இடங்களில் ஏற்கெனவே நவகண்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக தற்போது செம்பிலான்குடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • செம்பிலான்குடியில் உள்ள நவகண்ட சிற்பத்தில் மேலே கல்வெட்டும், கீழே பீடமும், நடுவில் வீரனின் புடைப்புச் சிற்பமும் உள்ளன. வீரனின் வலது கையில் உள்ள வாள் கழுத்தை அறுப்பது போலவும், இடது கையில் உள்ள குறுவாள் வயிற்றுப் பகுதியில் இருப்பது போலவும் சிற்பம் அமைந்துள்ளது.
 • வீரனின் சிற்பம் 2.5 அடி உயரம் உள்ளது. அவர் காலில் செருப்பு அணிந்துள்ளார். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் சிற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முகம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
 • தூங்குதலை குடுத்தல் பெரும்பாலும் காளி கோயில் முன்புதான் நடக்கும் என்பதால், சிலையையும் கோயில் முன்பு அமைப்பது வழக்கம். இவ்வூரில் ஏற்கெனவே காளி கோயில் இருந்து அழிந்துபோன பின், இச் சிலையை சிவன் கோயில் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம்.
 • இவ்வூர் சிவன் கோயில் சோழர்கால கலை அமைப்பில் உள்ளது. செம்பிலான்குடி, சூரம்புலி ஆகிய ஊர்ப் பெயர்களும் சோழர்களை நினைவுபடுத்துகின்றன. சிற்பத்தின் மேலுள்ள கல்வெட்டு தேய்ந்து அழிந்துள்ளது. இதில் உள்ள சில எழுத்துகளை மட்டும் படிக்க முடிகிறது. இதன் எழுத்தமைதி கொண்டு பாண்டியநாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இச்சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம்.
 • நவகண்டம் கொடுக்கும் வழக்கம் சோழ நாட்டுப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment