Tuesday, 30 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 29th JANUARY 2018

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 - 7.5 சதவீதமாக அதிகரிக்கும்
  • 2018- 19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) 7 - 7.5 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
  • சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு இந்திய பொருளாதாரத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மறைமுகமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை அதிக எண்ணிக்கையில் ஜி.எஸ்.டி பதிவாளர்கள் கொண்ட மாநிலங்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச வர்த்தகம், உள் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார செழிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் 70 சதவீத ஏற்றுமதியை செய்கின்றன.
ராஜஸ்தான் விஞ்ஞானிக்கு நாசா பாராட்டு
  • விண்கலம் தயாரிக்கும்போது, வெப்பம் தாக்காத வகையில், எஞ்சின்களுக்கு பிளாஸ்மோ கோட்டிங் எனப்படும் புதிய வகை வெப்ப பூச்சு குறித்து கண்டு பிடித்ததற்காக ராஜஸ்தான் விஞ்ஞானிக்கு நாசா விஞ்ஞானி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
  • விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலம் தயாரிக்கும்போது, அதில் முக்கிய பங்காக, விண்வெளியில் உள்ள வெப்பத்தினால் பாதிப்பு ஏற்படாத வகையில், வெப்ப பூச்சு பூசப்படுகிறது. இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்த டைலர் என்பவர் பிளாஸ்மா கோட்டிங் என்ற பூச்சு முறையை கண்டுபிடித்துள்ளார்.
  • இதை கண்ட நாசா, ராஜஸ்தான் விஞ்ஞானி டைலரின் கண்டுபிடிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. அப்போது, டைலரின் கண்டுபிடிப்பு அபாரம் என்பது தெரிய வந்தது. இந்த பிளாஸ்மா கோட்டிங் என்ற பூச்சு விண்வெளி எஞ்சின்களுக்கு பூசப்படுவதால் வெப்பம் தடுக்கப்படுவதாகவும், மேலும், இதற்கான செலவும் மிக்குறைவு என்றும் கூறப்படுகிறது.
  • இதையடுத்து, டைலரின் ஆராய்ச்சி குறித்து கவரப்பட்ட நாசா விஞ்ஞானி ஜேம்ஸ் ஸ்மிஅலேக் (Smialek) டைலரை தொடர்பு கொண்டு அவரது ஆய்வு குறித்து கேட்டறிந்தும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளை அள்ளிய புருனோ மார்ஸ்
  • 60-வது கிராமி விருதுகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டன. அதில் அமெரிக்கா பாடகரும், பாடலாசிரியருமான புருனோ மார்ஸ் மற்றும் மற்றுமொரு அமெரிக்க ராப் பாடகரும், பாடலாசிரியருமான கென்ரிக் லாமர் ஆகிய இருவர் மட்டும் இந்தாண்டுக்கான பெரும்பாலான கிராமி விருதுகளை தட்டிச் சென்றனர்.
  • லாமரின் ராப் இசை தொகுப்பான "டூர் டி போர்ஸ்" இந்தாண்டுக்கான சிறந்த இசை தொகுப்புக்கான விருதை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ஸ் அந்த விருதை பெற்றது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
  • சிறந்த புதிய கலைஞருக்கான விருதை வென்ற அலஸ்சியா கரா மட்டும்தான் இந்தாண்டில் முக்கிய கிராமி விருதொன்றை வென்ற ஒரே பெண்ணாவார்.
  • இந்தாண்டு வழங்கப்பட்ட 86 கிராமி விருதுகளில் வெறும் 17ஐ மட்டுமே பெண்களோ அல்லது பெண்களால் முன்னிறுத்தப்பட்டு செயல்படும் குழுக்களோ பெற்றன.
  • பாலியல் வன்முறை மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் வகையில் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் வெள்ளை நிற ரோஜாவை அணிந்திருந்தனர்.
2018ம் ஆண்டுக்கான முக்கிய கிராமி விருதுகளும், அவற்றை வென்றவர்களும்
  1. சிறந்த இசை தொகுப்பு: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்
  2. சிறந்த தயாரிப்பு: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்
  3. சிறந்த பாடல்: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்
  4. சிறந்த புதுமுக கலைஞர்: அலஸ்சியா கரா
  5. சிறந்த பாப் இசை தொகுப்பு - எட் ஷீரன் - ÷ (டிவைட்)
  6. சிறந்த ராக் இசை தொகுப்பு: தி விங்ஸ் ஆன் டிரக்ஸ் - எ டீப்பர் அண்டர்ஸ்டாண்டிங்
  7. சிறந்த ஆர்&பி தொகுப்பு: புருனோ மார்ஸ் - 24K மேஜிக்
  8. சிறந்த ராப் தொகுப்பு: கென்ரிக் லாமர் - டாம்
ஏர் இந்தியாவின் 49% பங்குகளுக்கு போட்டியிடும் வெளிநாட்டு நிறுவனம்
  • வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்க தயாராக உள்ளதாக விமானப் பயணத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
  • இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 49% பங்குகளை வெளியாருக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளதாக அரசு அறிவித்தது அதையொட்டி பல ஊகங்கள் வெளியாகின. 
  • விமானப் பயணத்துறையின் அதிகாரிகளில் சிலர் அந்த நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது இண்டிகோ மற்றும் கத்தார் ஏர்லைன்ஸ் ஆகியவைகளாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே ஏர் இந்தியா விமான நிறுவனம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 28000 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அத்துடன் கடன் மற்றும் நஷ்டமாக ரூ. 50000 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுவதுமாக கணக்கு பார்க்கும் போது ரூ.70000 கோடியை அது தாண்டக் கூடும் என சொல்லப்படுகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment