Sunday, 28 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 24th, 25th, 26th,27th &2 8th JANUARY 2018

பத்மவிருதுகள் 
பத்ம விபூஷன் விருதுகள்
 • இளையராஜா
 • ஸ்குலாம் முஸ்தாபா கான்
 • பரமேஸ்வரன் பரமேஸ்வரன்
பத்ம பூஷன் விருதுகள்
 • பங்கஜ் அத்வானி
 • பிலிப்போஸ் மார் கிரைஸ்டோம்
 • மகேந்திர சிங் தோனி
 • அலெக்சாண்டர் காடாகின்
 • ராமச்சந்திரன் நாகசாமி
 • வேத் பிரகாஷ் நந்தா
 • லட்சுமண் பய்
 • அரவிந்த் பரிக்
 • ஷார்தா சின்ஹா
பத்மஸ்ரீ விருதுகள்
 • அபய் பேங் மற்றும் ராணி பேங்
 • தாமோதர் கணேஷ் பாபட்
 • பிரஃபுல்லா கோவிந்த பாரூஹ்
 • மோகன் ஸ்வரூப் பாட்டியா
 • சுதன்ஷூ பிவாஸ்
 • சாய்கோம் மீராபாய் சானு
 • பண்டிட் ஷ்யாம்லால் சதுர்வேதி
 • ஜோஸ் மா ஜோய் கான்செப்சன்
 • லங்கோக்லபம் சுபதானி தேவி 
 • சோம்தேவ் தேவ்வர்மன் 
 • யேஷி தோடன் 
 • அரூப் குமார் தத்தா 
 • தோத்ராங்கே கவுடா 
 • அரவிந்த் குப்தா 
திருநங்கையின் திருமணம் முதன்முறையாக கர்நாடகாவில் பதிவு
 • திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி வருபவர் அக்கை பத்மஷாலி. திருநங்கையான இவருக்கும் - சமூக செயற்பாட்டாளர் வாசுதேவ் ஜோடிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி திருமணம் நடந்தது. 
 • திருநங்கைகள் திருமணப் பதிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும், கர்நாடக அரசவை திருநங்கைகள் திருமண உரிமைச் சட்டம் தொடர்பாக அண்மையில் திருத்தங்கள் மேற்கொண்ட நிலையில் கடந்த 23ம் தேதி அக்கை - வாசுதேவ் தம்பதியின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் வென்றது தமிழகம்
 • தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் - 68 போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 • இதனிடையே, மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய இரயில்வே அணி 100-71 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு மாநில அரசு விருது
 • பெண் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், வீர தீர செயல் புரிந்த, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினமான, ஜன., 24ல், விருது வழங்கப்படும்' என, 2017 - 18 பட்ஜெட்டில், சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
 • அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவைச் சேர்ந்த, 14 வயது சிறுமி நந்தினி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்துடன் கூடிய விருதை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.உறவினர்கள், குடும்பத்தினர், தனக்கு நடத்தவிருந்த திருமணத்தை, போராடி, சிறுமி நந்தினி தடுத்து நிறுத்தினார்.
முதன் முறையாக பென் நர்சிங் விருது பெரும் இந்திய பெண் வந்தனா
 • முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த வந்தனா கோபிகுமாருக்கு பென் நர்சிங் ரென்ஃபீல்ட் அறக்கட்டளை விருதினை பெறவுள்ளார். வந்தனா கோபிகுமார் மற்றும் வைஷ்ணவி ஜெயக்குமார் இருவரும் இணைந்து 1993-ம் ஆண்டு பான்யன் எனும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். 
 • மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவ ரீதியான தீர்வையும் வாழ்வாதாரத்தையும் பான்யன் அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 6-வது முறை சாம்பியன் ரோஜர் ஃபெடரர்
 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி 20-வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்று முத்தமிட்டார்.
 • இது ஃபெடரரின் 6-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம். டென்னிஸின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 20 பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை ஃபெடரர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை 'ஆதார்'
 • 2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக 'ஆதார்' என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. 
 • 'நோட்பந்தி', 'மித்ரன்' உள்ளிட்ட வார்த்தைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பிரபலமானது என்பதால் ஆதார் வார்த்தை சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு  செய்னா நேவல் தோல்வி
 • இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்திய வீராங்கனை செய்னா நேவல் தோல்வியடைந்து ஏமாற்றினார்.இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. 
 • இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை சீனதைபேயின் டாய் டிசூ யிங், 12வது இடத்தில் உள்ள இந்தியாவின் செய்னா நேவல் மோதினர்.
 • இதன் முதல் செட்டை 9-21 என இழந்த செய்னா, இரண்டாவது செட்டை 13-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய செய்னா நேவல், 9-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : டென்மார்க் வீராங்கனை கேரலின் சாம்பியன்
 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேரலின் வெற்றி பெற்றுள்ளார். ருமேனியா நாட்டு வீராங்கனை சிமோனாவை 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கேரலின் வென்றார்.
வீரதீரச் செயலுக்கான பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
 • வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சண்முகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் சண்முகம், கடந்தாண்டு ஜூலை மாதம் தாதர் விரைவு ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட பயணியை காப்பாற்றியதற்காக அண்ணா விருதை பெற்றுள்ளார். தங்க முலாம் பூசிய பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.
 • மதநல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர்களுக்கான கோட்டை அமீர் பதக்கம் திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் சாதிக் பாஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மதப்பிரச்னை மற்றும் 2017-ஆம் ஆண்டு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க காவல்துறைக்கு சாதிக் பாஷா உதவியுள்ளார்.
 • தமிழக காவல்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட 5 பேருக்கு 2017-ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட்டது. தஞ்சை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சேலம் மண்டல மத்திய புலனாய்வுப்பிரிவு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பாக செயல்பட்டதற்காக விருது வழங்கப்பட்டது. 
 • இதே போல், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலைய தலைமைக் காவலர் நாராயணன், விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் ஜோசப், பழவந்தாங்கல் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் நாராயணன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பதக்கத்துடன் 40,000 ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
 • திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண்மைத் துறை சிறப்பு விருது இந்தாண்டு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் நீர்மறைய நீர் பாய்ச்சுதல் முறையை கடைப்பிடித்து முனுசாமி சாகுபடி செய்துள்ளார்.
 • வறட்சி மாவட்டமான தருமபுரியிலும் திருந்திய நெல்சாகுபடியை சாத்தியப்படுத்திய விவசாயி முனுசாமிக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பதக்கத்தையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி பெருமைப்படுத்தினார்.
10 ஆசியான் நாட்டினருக்கு பத்மஸ்ரீ விருது
 • தென்கிழக்கு ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா கொண்டுள்ள 25 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
 • மருத்துவ பிரிவின் கீழ் புருனே பிரதமர் மலாய் ஹஜி அப்துல்லா பின் மலாய் ஹஜி ஓத்மனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. ஆட்டிசம் தொடர்பான நோய்கள் தொடர்பான பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • பொது விவகாரங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக கம்போடியாவின் ஹூன் மெனி, இந்தோனேசிய கட்டட கலை வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் நியோமன் நியார்டா, உலக புராதன தலங்களை புனரமைத்ததில் முக்கிய பங்காற்றி வரும் லாவோஸ் நாட்டின் பவுன்லாப் கியோகங்னா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 
 • ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசி நடத்தை பயிற்றுவித்து வருவதற்காக மலேசியாவின் டடுக் ரம்லி பின் இப்ராஹிம், மியான்மர் எழுத்தாளர் டாக்டர் தன்த் மின்ட் யூ உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அபாரம் டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.86,703 கோடி வசூல்
 • டிசம்பர் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) கடந்த 24ம் தேதி வரை ரூ.86,703 வசூல் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டியாக ரூ.92,150 கோடி வருவாய் கிடைத்தது. 
 • ஆனால் கடந்த அக்டோபரில் ரூ.83,000 கோடி, நவம்பரில் ரூ.80,808 கோடி என அடுத்தடுத்து 2 மாதங்களாக வரி வசூல் சரிவை சந்தித்தது. இந்நிலையில் டிசம்பரில் மீண்டும் அபாரமாக வசூல் ஆகியுள்ளது. கடந்த 24ம் தேதியின்படி, ஒரு கோடி பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். 
 • இவர்களில், 17.11 லட்சம் பேர் காம்போசிஷன் எனப்படும் இணக்கவரி திட்டத்தில் உள்ளவர்கள். இவர்கள் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யவேண்டும். கடந்த மாதத்தில் 56.3 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கல் செய்துள்ளனர். 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment