Tuesday, 23 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 23rd JANUARY 2018

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
  • சைபர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளையும் மீறி, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஜப்பானை விஞ்சி, 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
  • இந்தாண்டுக்கான பட்டியல், சுவிஸ் நாட்டின், டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளில், 46 சதவீதம் பேரின் ஆதரவுடன், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. 33 சதவீதம் பேர் ஆதரவுடன், சீனா இரண்டாவது இடத்தையும், ஜெர்மனி, 20 சதவீத ஆதரவுடன், மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • பிரிட்டன், 15 சதவீதம் பேரின் ஆதரவுடன், நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ள இந்தியாவுக்கு, 9 சதவீதத்தினரின் ஆதரவு கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 6வது இடத்திலும், ஜப்பான், 5வது இடத்திலும் இருந்தன.
  • உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தக் கூடிய சீர்திருத்தங்களால், ஓராண்டாக, இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டு உள்ளது. ஆய்வில் பங்கேற்ற, பெரும்பான்மையான தலைமை செயல் அதிகாரிகள், தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து, மிகுந்த நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
  • அடிப்படை கட்டமைப்பு வசதி, தயாரிப்பு மற்றும் திறன் வளர்ப்பு போன்ற பிரிவுகளில் உள்ள பிரச்னைகளுக்கு, தீர்வு காணும் நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்துள்ளது. அதே சமயம், 'சைபர் கிரைம்' எனப்படும், கணினி சார்ந்த மோசடி, பருவநிலை மாற்றம் போன்ற புதிய அச்சுறுத்தல்கள் உள்ளதாக, ஆய்வில் பங்கேற்றோரில், 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.பயங்கரவாத செயல்கள் குறித்து, 41 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர்.
  • திறமையான வல்லுனர்களின் பற்றாக்குறை மற்றும் ஜனரஞ்சக செயல் திட்டங்களின் தாக்கம் குறித்த கவலை உள்ளதாக, முறையே, 38 சதவீதம் மற்றும், 35 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதிக கட்டுப்பாடுகள் தான், 42 சதவீத தலைமை செயல் அதிகாரிகளுக்கு, பிரதான கவலையாக உள்ளது. 36 சதவீதம் பேருக்கு, வரி விகித உயர்வு பிரச்னையாக உள்ளது. 
பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உலகை அச்சுறுத்தும் சவால்கள்டே வோஸ் மாநாட்டில் பிரதமர் உரை
  • பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்தின் டேவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார். நமஸ்தே என்று கூறி தன்னுடைய உரையை மோடி தொடங்கினார்.
  • மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது : உலகத்துக்கும் இந்தியாவிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது தீவிரவாதம். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தீவிரவாதத்தை விட மோசமானது. உலகில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்பதெல்லாம் கிடையாது.
  • உலகம் இன்று 3 முக்கிய சவால்களை சந்திக்கிறது. பருவநிலை மாற்றம் என்பது அதில் முக்கியமான ஒன்று. பருவநிலை மாற்றம் என்பது உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருகி பல தீவுகள் மூழ்கிக் கொண்டும், மூழ்கும் நிலையிலும் உள்ளன.
  • இந்தியா எப்போதுமே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் நம்பிக்கை பெற்றது. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த உலகம் முழுவதுமே ஒரே குடும்பம். வேகமாக மாறி வரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இந்த உலகம் வித்திட்டுள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மை என்பது உலகம் சந்திக்கும் முக்கிய சவால்களாக உள்ளன.
  • உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என்று இந்த ஆண்டின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுமைகள் பொருளாதார மற்றும் அரசியல் பலத்தை மாற்றும் சக்திகளை சமன்படுத்துபவையாக இருக்கின்றன. இது எதிர்கால உலகிற்கு மாற்றத்தைத் தரும்.
  • நமது பொருளாதார சமூக கொள்கைகளில் புரட்சியை உருவாக்கியுள்ளோம். இதற்கு நாம் தேர்வு செய்திருக்கும் பாதை சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம். ஜனநாயம் மற்றும் பன்முகத்தன்மை குறித்து இந்தியா பெருமையடைகிறது. பல்வேறு மத, மொழி, கலாச்சாரம், பண்பாடு எங்கள் சமுதாயத்தில் உள்ளது. ஜனநாயகம் என்பது அரசியல் அமைப்பு அல்ல, எங்களின் வாழ்க்கை நிலை.
  • ந்தியாவின் தரவரிசையில் மாற்றம் வந்திருப்பது என்பது இந்திய மக்கள் கொள்கைகளில் செய்யப்படும் மாற்றங்களை மனமுவந்து ஏற்கிறார்கள் என்பதற்கான குறியீடு. இது தான் சிறந்த எதிர்காலத்திற்கான பாதையை வகுக்கும். இந்தியா ஐநாவின் அமைதிப் பேச்சுக்கான பல்வேறு அழுத்தங்களை தந்துள்ளது. ஏனெனில் இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுக்கு உதவ விரும்புகிறது என்றும் நரேந்திர மோடி பேசினார்.
அரசியல் கட்சிகளுக்கு ரூ.2000-க்கு மேல் நன்கொடை கொடுக்க கூடாது
  • அரசியல் கட்சிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக் கூடாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
  • பொதுவாக அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் நன்கொடை வசூலிப்பது வழக்கம். குறிப்பாக தேர்தல் காலங்களில் வெளிப்படையாகவே அறிவிப்புகள் வெளியிடுவார்கள். இப்படி கட்சிக்கு நிதி திரட்டுவதற்கான கணக்குகளை முறையாக பராமரிப்பதில்லை என்று பல்வேறு கட்சிகள் மீது அவ்வவ்போது புகார்கள் எழுவதுண்டு.
  • இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக் கூடாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இது பொருந்தும். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "Go cashless, Go clean" என்ற வாசகத்தை வருமான வரித்துறை தனது அறிக்கையில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டுள்ளது. அதாவது பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment