Monday, 22 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 22nd JANUARY 2018

36,000, 11,000 சென்செக்ஸ், நிப்டி சாதனை
 • இந்திய பங்குச்சந்தைகள் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. முதன்முதலாக சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளையும் கடந்தது.நேற்றைய வர்த்தகம் முடியும்போதே நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது என்று சொல்லியிருந்தோம். 
 • ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், சர்வதேச பன்னாட்டு நிதியகம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-ம் ஆண்டில் 7.4 சதவீதமும், 2019-ல் 7.8 சதவீதமும் இருக்கும் என கணித்திருப்பது, நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு இருப்பது ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் அதிகளவில் ஏற்றத்துடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வளரும் நாடுகள் பட்டியல்: அண்டை நாடுகள் அனைத்தையும் விட பின் தங்கியது இந்தியா
 • வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடம் பெற்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைவிட பின்தங்கியுள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகள் பட்டியலை உலக பொருளாதார கூட்டமைப்பு தயாரித்தது.
 • இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் இந்தியாவைவிட மேலிடத்தில் இருக்கின்றன.
 • இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மத்திய அரசு விருது பெற்ற, தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர்
 • தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவராக பெங்களூரை சேரந்த செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
 • செல்வியை பற்றி கனடாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் எலிசா பலோஸ்சி என்பவர் 'டிரைவிங் வித் செல்வி' என்ற ஆவணப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: புதிய தலைமை தேர்தல் அதிகாரி 
 • ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவசியம் என கருதப்படும் நிலையில் ஆதார் அட்டையை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு அதை நிறைவேற்றியும்விட்டது. 
ரஷ்யா-இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்
 • ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்--400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது. தற்போது இந்தியா 4 எஸ்--400 அமைப்புகளை வாங்க உள்ளது. 
 • இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ்--400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி
 • 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் தாவோஸில் நகரில் நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களும் தாவோஸ் புறப்பட்டுச் சென்றார். 
 • சுவிட்சர்லாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்-ஐ சந்தித்து பேசினார். சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாடு கலந்துகொள்ளும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
 • பின்னர் தாவோஸ் நகரில் மாநாட்டு அதிகாரிகளுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்தியாவின் நிலை இதுதான் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ள 73 சதவீத பணம்: ஆய்வில் தகவல்
 • இந்தியாவில் உள்ள மொத்த செல்வ வளத்தில் 73 சதவீதம், ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கிறது. இது வருவாய் சமநிலை இல்லாததை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. 67 கோடி ஏழை இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. உலக அளவில் இது மிகவும் மோசம். 
 • அதாவது, கடந்த ஆண்டில் உலக அளவில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 82 சதவீத செல்வ வளம் குவிந்து கிடக்கிறது. 370 கோடி ஏழைகளின் வருவாயில் முன்னேற்றம் எதுவும் இல்லை. 
 • இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களின் செல்வ வளம் கடந்த ஆண்டில் 20.9 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டின் மத்திய அரசு பட்ஜெட்டுக்கு போதுமான ஒன்றாகும் என அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
11 ஆயிரம் ரயில்களில் கேமரா ரூ.3,000 கோடி ஒதுக்கீடு
 • நாடு முழுவதும், தற்போது, 395 ரயில் நிலையங்களிலும், 50 ரயில்களிலும் மட்டுமே, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் பட்ஜெட்டில், நாடு முழுவதும் இயங்கும், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, உள்ளூர் ரயில்கள் உட்பட, 11 ஆயிரம் ரயில்களிலும், 8,500 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 
 • இதற்கு, ரயில்வேக்கு ஒதுக்கப்படும் நிதியில், 3,000 கோடி ரூபாய் செலவிடப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நவீன கண்காணிப்பு கேமராக்களுடன், அனைத்து ரயில்களும் இயங்கும்.
 • விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், பயணியர் வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும், 4,943 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் உள்ளன. 2020க்குள், இதற்கு தீர்வு காணவும், பழைய ரயில்வே தண்டவாளங்களை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
யு.ஜி.சி தேசிய தகுதித் தேர்வு முறையில் புதிய மாற்றங்கள்
 • கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கான யு.ஜி.சி தேசிய தகுதித் தேர்வு (National Elegibility Test - NET) முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம் (CBSE). இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது.
 • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேசிய தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வில் பொது அறிவைச் சோதிக்கும் வகையில் முதல் தேர்வும் சம்பந்தப்பட்ட துறை பாடங்களின் அறிவைச் சோதிக்கும் வகையில் இரண்டு தேர்வும் நடைபெறும்.
 • மூன்று தாள்கள் கொண்ட தேர்வை இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக மாற்றி இருக்கிறது இடைநிலை கல்வி வாரியம். முதல் தாளில் பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த 50 கேள்விகளும் இரண்டாவது தாளில் சம்பந்தப்பட்ட பாடங்களிலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். 
 • முதல் தாளில் 60 கேள்விகள் கேட்கப்பட்டு 50 கேள்விகளுக்கு விடையளித்தால் போதும் என இருந்தது. தற்போது, 50 கேள்விகள் மட்டும் கேட்கப்படும். 50-க்கும் பதிலளிக்க வேண்டும் என மாற்றி இருக்கிறது.
குமரி - மதுரை, மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை மின் ரயில் பாதை
 • கன்னியாகுமரி: ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் நாகர்கோவில் - மதுரை & மணியாச்சி-தூத்துக்குடி இடையே இரட்டை மின் ரயில் பாதை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை,செவ்வாய்க்கிழமை (ஜன. 23) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
ரூ.43 கோடி செலவில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்
 • ரூ.43.63 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 
 • நினைவு மண்டபம் கட்டுவதற்கான டெண்டர் வரும் பிப்ரவரி 7-ல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஓராண்டிற்குள் நினைவு மண்டபத்தை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த நாளன்று நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
உலக சுகாதார நிறுவனத்தின் காலண்டரில் இடம்பிடித்த இந்தியர் கீதா வெர்மா
 • உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2018-ம் ஆண்டின் காலண்டரில், இமாசலப்பிரதேசத்தின் மன்டி மாவட்டத்தில் உள்ள சப்தோட் கிராமத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலரான கீதா வெர்மா இடம்பிடித்து, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 
 • குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் தாக்கும் கடுமையான வைரஸ் நோய்களான தட்டம்மை மற்றும் ரூபெல்லாவைக் கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் கடந்த 2017, பிப்ரவரி மாதம் இந்தியா கைகோத்தது. 
 • மன்டி மாவட்டம், இமயமலைத் தொடரில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த மாவட்டம். பள்ளத்தாக்குகளும் மலைமுகடுகளுமான நிலப்பரப்பில், குளிர்காலத்தில் பனி மூடியிருப்பதும் இங்கே சகஜம். இத்தகைய சூழலில் இதில் பயணிப்பதே சவாலான காரியம். இந்த மாவட்டத்தில் தன் விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக மிகக் கடுமையாக தனி ஒருத்தியாகப் செயல்பட்டிருக்கிறார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment