Sunday, 21 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 20th & 21th JANUARY 2018

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை நீக்க ஜனாதிபதி ஒப்புதல்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி
  • ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
  • 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இரட்டை பதவி விவகாரத்தில் சிக்கியதால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியதை அடுத்து சில நிமிடங்களுக்கு முன் இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். 
  • இதனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்போது டெல்லியில் 20 இடங்கள் காலியாகவுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
  • தேர்தல் கமிஷனராக உள்ள ஓம் பிரகாஷ் ராவத், தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள, ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம், நாளையுடன் முடிவுக்கு வருகிறது. 
  • இதையடுத்து, தேர்தல் கமிஷனராக உள்ள, ஓம்பிரகாஷ் ராவத், தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.ம.பி., மாநில, ஐ.ஏ.எஸ்., கேடர் அதிகாரியாக பணியாற்றிய, ராவத், மத்திய அரசின், கனரக தொழில் துறை செயலராக பணியாற்றி, 2013ல் ஓய்வு பெற்றார். பின், தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 
  • இதற்கிடையே, தேர்தல் கமிஷனராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மத்திய அரசின், முன்னாள் நிதித் துறை செயலருமான, அசோக் லாவசா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், ஹரியானா, ஐ.ஏ.எஸ்., கேடர் அதிகாரியாக பணியாற்றியவர். நாளை, இருவரும், தங்கள் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.
சென்னை போலீசுக்கு மத்திய அரசு விருது
  • மற்ற மாநிலங்களை காட்டிலும், சென்னை போக்குவரத்து போலீசார், வாகன சட்டம் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில், முதலிடத்தில் இருப்பதாக, மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.
  • இந்திய சாலை பாதுகாப்பு கழகம், நம் நாட்டில், 10 பெரு நகரங்களில், போக்குவரத்து மேலாண்மை, பொது மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்தை கட்டுப் படுத்துதல்...கனரக வாகன போக்குவரத்தை கையாளுதல்உள்ளிட்ட பணிகளில், சிறந்து விளங்கும் போலீசார் பற்றி ஆய்வு நடத்தியது.அதில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், முதல் இடத்தை பிடித்தனர். ஆமதாபாத் மற்றும் கோல்கட்டா, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பார்வையற்றோர் கிரிக்கெட்டில் இந்தியா 'உலக சாம்பியன்'
  • பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில், சுனில் ரமேஷ், கேப்டன் அஜய் அரைசதம் கடந்து கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
  • இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 2014ல் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்த பைனலில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
  • இதனையடுத்து, பார்வையற்றோருக்கான உலக கோப்பை அரங்கில், அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில், முதலிடத்தை பாகிஸ்தானுடன் (2002, 2006) பகிர்ந்து கொண்டது இந்தியா (2014, 2018). 
  • இவ்விரு அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றன. தவிர இந்திய அணி, பாகிஸ்தானுக்கு பின், தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பை வென்ற அணி என்ற பெருமை பெற்றது. ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி (1998, எதிர்: பாகிஸ்தான், இடம்: டில்லி, இந்தியா) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய புத்தகம் வெளியீடு
  • 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய 'தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' என்ற புத்தகம் டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா புத்தகத்தை வெளியிட ஆ.ராசா பெற்றுக் கொண்டார். 
  • ஆ.ராசாவின் புத்தக வெளியீட்டின்போது ஹர்-ஆனந்த் பதிப்பகத்தின் உரிமையாளர் நரேந்திரா உடனிருந்தாது குறிப்பிடத்தக்கது. 
செனட்டில் பட்ஜெட் தோல்வி: அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
  • அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக்கொள்வது தோல்வியடைந்ததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.கடைசி நிமிடம் வரை இருகட்சி கூட்டம் நடந்தபோதிலும், அரசுக்கு பிப்ரவரி 16-ம் தேதி வரை நிதியளிக்கும் இந்த மசோதா, தேவையான 60 ஓட்டுகளைப் பெறவில்லை.
  • கடந்த முறை இது போல அரசுப் பணிகள் நிறுத்தப்பட்ட நிகழ்வு 2013ல் 16 நாள்கள் நடந்தது.
  • நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால், அரசு நிறுவனங்களை மூட வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தின்படி பல அரசு அலுவலகங்கள் மூடப்படும்.
  • ஆனாலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். தேசியப் பாதுகாப்பு, தபால் சேவைகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சார உற்பத்தி போன்ற சேவைகள் தொடர்ந்து இயங்கும்.
ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றப்படும்
  • இனிமேல் ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.நேற்று (ஜன.,19) அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (ஜன.,20) வெளியிட்டது. 
  • அதில், இனிமேல் ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-க்கு அப்துல் கலாம் விருது
  • கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-க்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
  • அதில், 10- க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அப்துல் கலாம் விருது இன்று வழங்கப்பட்டது. இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனுக்கும் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
  • விஜய கார்த்திகேயன், கடந்த 2011-ம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சிபெற்று, பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். அங்கு, கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தார். தனது 28-வது வயதில், கோவை மாநகராட்சி ஆணையாளராகக் கடந்த 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர்.
  • அதேபோல, கோவையில் கழிப்பறைகள் கட்டியது, சிவில் இன்ஜினீயரிங் மாணவர்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக, விஜய கார்த்திகேயனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. 
தேசியப் பாதுகாப்பு படைக்கு புதிய தலைவர் நியமனம்
  • தேசிய பாதுகாப்பு படையின் புதிய தலைவராக சுதீப் லக்தாகியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் எஸ்.பி.சிங் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • தற்போது இந்த படைக்கு தலைவராக எஸ்.பி.சிங் இருந்து வருகிறார்.இவரது பணிக்காலம் வரும் 31-ம் தேதி முடிவடைகிறது.
  • அதையடுத்து, புதிய தலைவராக, தற்போதைய மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சிறப்பு இயக்குனராக பணியாற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுதீப் லக்தாகியாவை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு நியமனம் செய்துள்ளது.
  • பிப்ரவரி 1ந்தேதி பதவி ஏற்கும் லக்தாகியா, அடுத்த ஆண்டு ஜூலை வரை இந்த பணியில் நீடிப்பார்.
இந்தியாவின் நேரடி முதலீடு செய்யும் வெளிநாடுகளின் மொரீசியஸ் முதல் இடம்: ரிசர்வ் வங்கி
  • இந்தியாவில் நேரடி முதலீடு செய்யும் வெளிநாடுகளின் பட்டியலில் மொரீசியஸ் முதலிடத்தில் உள்ளது. 2016-2017 நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி முதலீடு குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் மொரீசியஸ் 5லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளது. 
  • அமெரிக்கா 3 லட்சத்து 85ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இரண்டாமிடத்தில் உள்ளது. பிரிட்டன் 3லட்சத்து 38ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து மூன்றாமிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 2லட்சத்து 37ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து நான்காம் இடத்தில் உள்ளது. 
  • ஜப்பான் 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஐந்தாமிடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் வெளிநாட்டு துணை நிறுவனங்களின் ஏற்றுமதி உட்பட மொத்த விற்பனை 2016-17-ம் ஆண்டில் 18.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அதே நேரத்தில் இறக்குமதி 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment