Friday, 19 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 19th JANUARY 2018

மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு: தமிழக அரசு
  • மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. பார்வைக்குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • இந்த அரசாணையால் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை பயிற்சி பெற தேவையில்லை 
விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
  • விமானம் பறக்கும்போது, பயணிகள், மொபைலில் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • விமான பயணத்தின் போது, மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. விமானத்தில், பயணம் செய்யும்போதே இன்டர்நெட் மற்றும் அலைபேசியில் பேசும் சேவைகளை பயணிகளுக்கு அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்பு துறை, முடிவு செய்தது. 
  • 'விமானத்துக்குள் அலைபேசியை பயன்படுத்தும்போது, சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய வான் எல்லையில், 3,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறக்கும்போது, பயணிகள், இன்டர்நெட் பயன்படுத்தவும், அலைபேசியில் பேசவும் அனுமதி அளிக்கலாம்' என, 'டிராய்' பரிந்துரை செய்துள்ளது.
பொலிவுறு நகரங்கள் பட்டியலில் ஈரோடு
  • இப்போது, 4-ஆவது சுற்றாக 9 நகரங்கள் பொலிவுறு நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் உத்தரப் பிரதேசத்தின் பரேலி, மொராதாபாத், சஹாரன்பூர், தமிழ்நாட்டில் ஈரோடு, பிகாரில் உள்ள பிகார் ஷெரீஃப், தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் சில்வாசா, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் டையூ நகரம், அருணாசலப் பிரதேசத்தின் இடாநகர், லட்சத்தீவுகளின் கவரத்தி ஆகியவை இடம் பிடித்துள்ளன. 
  • இதன் மூலம் பொலிவுறு நகரங்கள் பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. 
  • புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.500 கோடியை மத்திய அரசு அளிக்கும். பொலிவுறு நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் இதுவரை ரூ.1,40,000 கோடி மதிப்பிலான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
  • தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய நகரங்கள் ஏற்கெனவே பொலிவுறு நகரம் திட்டத்தில் உள்ளன.
'மருத்துவத் தமிழ் அறிஞர்' விருது அறிவிப்பு
  • 'மருத்துவத் தமிழ் அறிஞர்' விருதுக்கு குன்னூர் அருகிலுள்ள அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேஷ் கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வருபவர் ராஜேஷ் கோபால். இவர், தமிழ் மொழியில் மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
  • இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகக் கிளை சார்பில், தமிழுக்கு சேவை புரியும் மருத்துவர்கள், மருத்துவத்தில் சாதனை புரியும் மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டில், தமிழுக்குச் சேவை புரிந்த மருத்துவருக்கான 'மருத்துவத் தமிழ் அறிஞர் விருது' பெற ராஜேஷ் கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்துடன் இணைந்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகக் கிளை சார்பில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் விழாவில், இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இவர் ஏற்கெனவே, 'திருக்குறளில் மருத்துவம்' என்பது குறித்து ஆய்வு செய்து பல விருதுகளைப் பெற்றிருப்பதுடன், கடந்த ஆண்டு மாநில அரசின் 'கவிமாமணி' விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மாநில 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கப் பரிந்துரை
  • டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.
  • 'பார்லிமென்டரி செகரட்ரி' என்ற பெயரில் குறிப்பிட்ட அமைச்சரவைகளின் சார்பில் சட்டமன்றத்தில் செயல்படும் சிறப்பு பொறுப்பு அந்த எம்.எல்.ஏ.க்களுக்குத் தரப்பட்டிருந்தது. 
  • இந்தப் பதவியை ஆதாயம் தரும் பதவி என்று குறிப்பிட்ட தேர்தல் ஆணையம், எம்.எல்.ஏ. பதவியிலும், இன்னொரு ஆதாயம் தரும் பதவியிலும் பதவி வகிப்பவர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
  • டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் பார்லிமன்ட்ரி செகரட்ரி பதவியில் இருந்ததை ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு பதவி விலகிவிட்டார்.
ம.பி. கவர்னராக ஆனந்திபேன் படேல் நியமனம்
  • குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபேன் படேல் மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • குஜராத் மேற்கு மாநிலத்தை சேர்ந்த இவர் குஜராத் முதல் பெண் முதல்வராக செயல்பட்டார். 1987ம் ஆண்டு முதல் இவர் பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார்.
  • 1941ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது வயது 76. இவரை மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
வனப்பகுதியை தாரைவார்த்ததில் ஹரியானா முதலிடம்
  • ஹரியானா மாநிலத்தில் மொத்தம் இருந்த ஆயிரத்து 584 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 79.44 சதுர கி.மீ., பரப்பளவு பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டுவிட்டது. 2015-15 மற்றும் 20161-17ம் ஆண்டு காலங்களில் இந்த தாரைவார்ப்பு நடந்தது. உள்கட்டமைப்பு, தொழிற்சாலை திட்டங்களுக்காக இந்த நிலங்கள் ஒதுக்கப்பட்டது.
  • இவ்வாறு அழிக்கப்பட்ட வனப்பகுதியின் பரப்பளவு என்பது டில்லி லோதி கார்டன்ஸ் பரப்பளவை போல் 200 மடங்கும், மும்பை நரிமன் பாயின்டை போன்று 900 மடங்கு பரப்பளவையும் கொண்டதாகும். 
  • ஹரியானாவில் உள்ள நிலப்பரப்பில் 3 சதவீத (டில்லியின் மொத்த பரப்பளவு அளவு) வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் ஹரியானா முதல் மாநிலமாக உள்ளது. இவ்வாறு வனப்பகுதியை கொடுத்துவிட்டு தற்போது காடு வளர்ப்பு திட்டத்திற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டு வருகிறது.
  • 'கேம்பா' என்ற காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு காடு வளர்ப்புக்கு 10 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படுகிறது.தேசிய வன கொள்கையின் கீழ் சம நிலப்பரப்புகளில் 20 சதவீதம் வனம் மற்றும் மரங்கள் நிறைந்து இருக்க வேண்டும். இந்தியாவில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு காடுகளை உருவாக்க வேண்டும் என்று தேசிய வன கொள்கையின் காடு மேலாண்மை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஹரியானாவை தொடர்ந்து தெலங்கானா, மத்திய பிரதேஷ், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதுவரை 560.69 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியை இதர பணிகளுக்கு திருப்பிவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் 50 சதவீத வனப்பகுதியை இதர பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துவதிட்டது. கடந்த 3 நிதியாண்டுகளில் ஹரியானா 105 கோடி ரூபாய் நிதியை கேம்பாவிடம் இருந்து பெற்றுள்ளது என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.
3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு
  • சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே சூரப்பள்ளிநைனானூரில் சேலம் வரலாற்று தேடல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • பெருங்கற்காலம் என்பது சங்க இலக்கிய காலங்களுக்கு முற்பட்ட சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் பெரிய பெரிய கற்களைக் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்புவார்கள். 
  • இந்தக் காலத்தைப் பெருங்கற்காலம் என்று வரலாற்று ரீதியாக அழைக்கிறோம். அந்த வகையில் பெருங்கற்கால ஈமச் சின்னமாகத் திகழும் இந்த நடுகல் 3,000 ஆண்டு பழைமை வாய்ந்தது. தற்போது இந்த நடுகல் 10 அடி உயரத்திலும், 6 அடி அகலத்திலும் இருக்கிறது. ஆனால், இந்தக் கல் 15 முதல் 20 அடி உயரம் இருந்திருக்கலாம். காலப்போக்கில் இது உடைந்துவிட்டது. கல் உடைந்ததற்கான அடையாளங்கள் இருக்கிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment