Thursday, 18 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 18th JANUARY 2018

இந்திய பங்குசந்தையின் 'சென்செக்ஸ்' 35,000 புள்ளிகளை கடந்து சாதனை
 • மும்பை பங்குச் சந்தையின் வர்த்தம் சென்செக்ஸ் குறியீடு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முதன்முறையாக 35000 புள்ளிகண் தாண்டி வர்த்தம் இன்றும் தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது.
 • அதுபோல தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 19,900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தரவரிசையில் கோஹ்லி சாதனை
 • டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளி எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் கோஹ்லி.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலை ('ரேங்கிங்') சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. 
 • இதில் வீரர்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் கோஹ்லி மூன்றாவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி 'நம்பர்-2' இடத்தை பிடித்துள்ளார். சமீபத்திய, செஞ்சூரியன் டெஸ்டில் அசத்திய இவர் டெஸ்ட் அரங்கில் 21வது சதத்தை பதிவு செய்தார். 
 • இதன் மூலம், தரவரிசையில் 20 புள்ளிகள் கூடுதலாக பெற்று 900 புள்ளியை எட்டி உள்ளார். கவாஸ்கருக்குப் பின்... தவிர, 'ரேங்கிங்கில்' முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு (50 டெஸ்டில், 916 புள்ளி) அடுத்து, 900 புள்ளிகள் பெற்ற இரண்டாவது இந்திய வீரர் ஆனார் கோஹ்லி. இவர் தனது 65வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டினார்.
சிலிண்டர் போன்ற 49-பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: நிதி அமைச்சர்
 • தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர், 20 லிட்டர் குடிநீர் கேன் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வரி 18-ல் இருந்து 12% மாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க கற்களுக்கு வரி 3-ல் இருந்து 0.25% ஆக குறைக்கப்படுகிறது.
 • மிட்டாய், நீர்ப்பாசன சாதனங்கள், மெஹந்தி பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட ஜாப் ஒர்க்குகளுக்கும் வரி குறைக்கப்படுகிறது. 
 • இவை அனைத்தும் வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர். வரிக்குறைப்பு காரணமாக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 
5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
 • தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
 • 'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்'.
சீமாவுக்கு தேசிய விருது
 • தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தரம் மற்றும் சிறந்த செயல்பாடுகளுக்கு மத்திய அமைச்சகம் மற்றும் இந்திய தரக்குழுவின் துணை நிறுவனமான நாபெட் சார்பில் தேசிய அளவிலான தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. 
 • தேசியக் கல்வி மற்றும் பயிற்சிக்கு அங்கீகாரம் வழங்கும் நிறுவனம் நாபெட். இது இந்திய தரக்குழுவின் துணை நிறுவனமாகும். மத்திய அரசின் வர்த்தகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களின் துணையுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் வர்த்தகம் மற்றும் தொழில் சங்கங்களுக்கு 'சிறந்த உறுப்பினர்களை கொண்ட நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தினை அளித்து வருகிறது.
5000 கி.மீ பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி
 • ஐந்தாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கும் அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ஒடிசா மாநில கடலோரத்தில், வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
 • தற்போது இந்தியாவிடம் இருக்கும் இத்தகைய ஏவுகணைகளிலேயே அதிக தூரம் சென்று தாக்கக்கூடியதாகவும், அதிக துல்லியத்துடன் இலக்கை அடையும் திறன் உடையதாகவும் இந்த ஏவுகணை உள்ளது.
 • அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய திறன் உடைய இந்த ஏவுகணை, கடைசியாக ஓராண்டுக்கு முன்பு சோதனை செய்யப்பட்டது.
 • அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதன் மூலம், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
கோஹ்லிக்கு ஐசிசி விருது
 • ஐசிசியின் சிறந்த வீரர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி பெற்றுள்ளார். மேலும், அவர் ஐசிசியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணி கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த வீரர் விருது ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு கிடைத்துள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment