Wednesday, 17 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 17th JANUARY 2018

மாநில பாடத்திட்ட அடிப்படையில் நீட்தேர்வு கேள்விகள்: மத்திய அரசு
  • மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து, நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 
  • ஆனால் பல்வேறு பாடத்திட்டங்களை வைத்து கேள்விகள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.தற்போது வரை நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. 
  • இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் பல மாநிலங்களில் வித்தியாசப்படுகின்றன. 
  • இதில், மாநில பாடத்திட்டங்களையும் பரிசீலித்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்பது பின்னடைவாக இருக்காது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், எந்த மாநில மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க முடியும்.
வாகனங்களில் "ஜிபிஎஸ்" கருவி கட்டாயம் - ஏப்ரில் 1 முதல் அமல்
  • அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.அதன்படி,இருப்பிடம் காட்டுகிற கருவியான ‘ஜி.பி.எஸ்.’ என்ற கருவி,நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் கட்டாயம் பொறுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
  • இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது கூடுதல் தகவல்.
வங்க கடலில் இரு நாட்டு வீரர்கள் கூட்டு பயிற்சி : இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை ஒத்திகை
  • சென்னைக்கு அருகே கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலை, இந்திய - ஜப்பான் கடலோர காவல் படையினர் போராடி மீட்டு, பயணியரை விடுவித்தனர்.சென்னை துறைமுகத்திற்கு, 'சான்டா மரியா' என்ற பயணியர் கப்பல் வந்து கொண்டு இருந்தது. 
  • இந்திய - ஜப்பான் நாடுகளுக்கு இடையே, 2006ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடலோர காவல் படைகளின் கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னைக்கு அருகே வங்க கடலில், தேடுதல் மற்றும் மீட்பு தொடர்பான ஒத்திகை, நேற்று நடந்தது. இதற்கு, 'சாரக்ஸ் - 18' என, பெயரிடப்பட்டு இருந்தது.
  • இந்த ஒத்திகையில், கடலோர காவல் படையின், 'சாரங், சாகர், சவுர்யா, வைபவ், அனாக், ராணி அபக்கா, அபீக்' உள்ளிட்ட, ஒன்பது கப்பல்கள் ஈடுபட்டன. மூன்று குட்டி விமானங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஜப்பான் கடலோர காவல் படையின், 'டி - சுகாரு' கப்பல் மற்றும் ஹெலிகாப்டரும் ஒத்திகையில் ஈடுபட்டன.
  • சென்னைக்கு அருகே, கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட பயணியர் கப்பல் மீது, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குட்டி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து உயிர் காக்கும் மிதவைகள், கடலில் எறியப்பட்டன.பார்வையாளர்கள் : பயணியரை மீட்பதற்காக, துறைமுகத்தில் இருந்து, கடலோர காவல் படையின், இரண்டு சிறிய கப்பல்கள், கடலுக்குள், 40 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றன.
தேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி
  • தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. 
  • இதில் பயனாளிகள் செலுத்திய தொகைக்கு ஏற்ப பென்ஷன் தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், பென்ஷன் சந்தாதாரர்களின் வசதிக்காக விதிகளில் தளர்வு செய்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 
  • இதன்படி, மேற்கண்ட ஓய்வூதிய திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சந்தா தொகை செலுத்தியவர்கள், அந்த நிதியில் 25 சதவீதத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்துக்கொள்ளலாம். 
கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
  • கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 
  • நதி இணைப்பு திட்டத்தில் மாற்றம் என்.டபிள்யூ. டி. ஏ., என்ற தேசிய நீர் மேம்பாட்டு ஏஜென்சி துவக்கத்தில் நதி இணைப்பு திட்டத்தில் ஒன்பது இணைப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஏற்றவாறு தான் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. 
  • அதன்படி, மகாநதி - கோதாவரி இணைப்பு, இஞ்சபள்ளி - நாகார்ஜுனா சாகர் இணைப்பு, இஞ்சபள்ளி - புலிசிந்தலா இணைப்பு, போலாவரம் - விஜயவாடா இணைப்பு, அல்மாட்டி - பெண்ணாறு இணைப்பு, ஸ்ரீசைலம் - பெண்ணாறு இணைப்பு, நாகார்ஜுனா சாகர் - சோமசீலா அணை இணைப்பு, சோமசீலா அணை - கல்லணை இணைப்பு, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் மயமாகும் அரசுப் பள்ளிகள் -  மத்திய அரசின் அறிவிப்பு
  • "அனைத்து அரசுப் பள்ளிகளும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும்" என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
  • மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர், "மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து, பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும். முதல் கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும். இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்" என்றார்.
சில்லறை பணவீக்கம் 5.2% அதிகரிப்பு - மொத்த பணவீக்க விகிதம் 3.58% ஆக சரிவு
  • கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிப்பால் கடந்த டிசம்பர் மாத மொத்த பணவீக்க விகிதம் 3.58 சதவிகிமாக சரிந்ததுள்ளது.
  • கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்க புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில் சில்லறைப் பணவீக்க விகிதமானது கடந்த நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிமாக இருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவான 5.21 சதவிகிதத்தை எட்டியது

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment