Tuesday, 16 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 16th JANUARY 2018

2017 - 2018ம் ஆண்டு முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
  • 2017-2018ம் ஆண்டு முட்டை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. 
  • 2016-2017ல் 26.03 பில்லியனாக இருந்த முட்டை உற்பத்தி 2017-2018ல் 27.95 பில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் 12 தங்கம் வென்று இந்தியர்கள் அசத்தல்
  • மகளிர் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் 12 தங்கமும், இரண்டு பிரிவுகளிலும் 2 வெள்ளியும், 3 வெண்கலமும் வென்று அசத்தியது இந்தியா.
  • மகளிர் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டி செர்பியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது.
  • ஏழாவது 'நேஷன்ஸ் கப்' குத்துச்சண்டைப் போட்டியில், பல்வேறு எடைப் பிரிவுகளில் இந்திய இளையோர் மற்றும் ஜூனியர் வீராங்கனைகள் பதக்கங்களைக் வென்றனர்.
  • ஜூனியர் பிரிவில், ஏக்தா சரோஜ் 46 கிலோ எடைப்பிரிவு, பூணம் 54 கிலோ எடைப்பிரிவு, அருந்ததி சௌதரி 60 கிலோ எடைப்பிரிவு வின்கா 80 கிலோ எடைப்பிரிவு உள்பட ஒன்பது வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.
  • இதேபிரிவில், சஞ்சீதா, லிபாக்ஷி வெள்ளியும், அர்ஷி கனம், யஷி சர்மா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
  • இளையோர் பிரிவில், ஜோனி 60 கிலோ எடைப்பிரிவு, லலிதா 64 கிலோ எடைப்பிரிவு, நந்தினி 81 கிலோ எடைப்பிரிவு தங்கம் வென்றனர். ராஜ்பாலா 54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.
கலப்பு திருமணங்களைத் தடுக்க எவக்கும் அதிகாரம் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • கலப்பு திருமணங்களைத் தடுக்க எவக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கலப்பு திருமணம் செய்துகொள்வோர் மீது கொடூரத் தாக்குதல்கள் நடப்பதும், கொலை செய்யப்படுவதும் நடக்கின்றன.
  • குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய பகுதிகளில் இருக்கும் ''காப்" என்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்பினால் கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத்தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கலப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்க மத்திய அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • ஆனால் இது குறித்த சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. இந்த நிலையில், குறிப்பிட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா. நீதிபதிகள் ஏஎம்.கன்வீல்கர், சந்திராசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது நீதிபதிகள், "சாதி மாறி கலப்புத் திருமணம் செய்பவர்களை எவரும் தடுக்க கூடாது. இரு வேறு சாதியினர் காதல் திருமணம் செய்து கொள்வதை தடுக்க எவருக்கம் அதிகாரம் கிடையாது. மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்கும் விதமாக தனி சட்டம் இயற்றக்கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும் இதுவரை அதற்கனெ தனிச்சட்டம் ஏன் இயற்றவில்லை?.
  • வட இந்தியாவில் கலப்புத் திருமணம் செய்பவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் காப் என்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்பிற்கு தடை விதிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், நீதிமன்றம் அதை கையில் எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்" என்று தெரிவித்தார்கள்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் மேற்கு வங்கம் முதலிடம்
  • குறு, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் அதி­க­முள்ள மாநி­லம் என்ற சிறப்பை, மேற்கு வங்­கம் பெற்­றுள்­ளது.மேற்கு வங்க அரசு, புதிய வர்த்­த­கங்­களை உரு­வாக்கி, தொழில் முனை­வோரை ஊக்­கு­வித்து, வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிப்­ப­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. 
  • இதன் விளை­வாக, 2016 -– 17ம் நிதி­யாண்­டில், அதி­க­ள­வில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை கொண்ட, 10 மாநி­லங்­களில், மேற்கு வங்­கம், 11.62 சத­வீத பங்­க­ளிப்­பு­டன், முத­லி­டத்­திற்கு உயர்ந்­துள்­ளது. உ.பி., மஹா­ராஷ்­டிரா ஆகி­யவை, அடுத்த இடங்­களில் உள்ளன.
  • ஐந்து ஆண்­டு­களில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, அதிக வங்கி கடன் வழங்­கிய சிறப்­பும், மேற்கு வங்­கத்­திற்கு கிடைத்­துள்­ளது. இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு, 2017ல், 1,500 கோடி டாலர் வங்கி கடன் வழங்­கப்­பட்டு உள்­ளது. மாநி­லத்­தின் மொத்த உற்­பத்­தி­யில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், 6 சத­வீத பங்­க­ளிப்பை வழங்­கு­கின்றன.
  • இது, தயா­ரிப்­புத் துறை­யில், 33 சத­வீ­தம்; ஏற்­று­ம­தி­யில், 45 சத­வீ­த­மாக உள்­ளது.அனைத்து மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில், 2017ல், ‘பிராப்’ திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­படி, தொழில் கொள்கை மற்­றும் வர்த்­தக மேம்­பாட்டு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை, சிறப்­பாக மேற்­கொள்­ளும் மாநி­லங்­களில், மேற்கு வங்­கம் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. 
  • மேற்கு வங்க சர்­வ­தேச வர்த்­தக மாநாடு, கோல்­கட்­டா­வில் நேற்று துவங்­கி­யது. இரு நாட்­கள் நடை­பெ­றும் இம்­மா­நாட்­டில், முகேஷ் அம்­பானி, சுனில் மிட்­டல் உள்­ளிட்­டோ­ரு­டன், சர்­வ­தேச தொழி­ல­தி­பர்­கள் பலர் பங்­கேற்­கின்­ற­னர்.
ஹஜ் மானியம் ரத்து: இந்திய அரசு அறிவிப்பு
  • இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.
  • 'சிறுபான்மையினரை மகிழ்விக்கும் போக்கைக் கைவிட்டு, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டாலும், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து ஒன்றேமுக்கால் லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செய்வார்கள்' என செய்தியாளர்களிடம் பேசிய நக்வி தெரிவித்தார்.
  • "ஹஜ் மானியமாக அளிக்கப்பட்டுவந்த நிதி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்" என்றும் நக்வி தெரிவித்தார்.
ராணுவத்துக்கு ஆயுதங்களை ரூ.3,547 கோடியில் வாங்க ஆயுத கொள்முதல் கவுன்சில் அனுமதி
  • ராணுவத்துக்கு ஆயுதங்களை ரூ.3,547 கோடியில் வாங்க ஆயுத கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 72,400 துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் எல்லையில் உள்ள வீரர்களுக்காக வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்க்கு தண்டனை வழங்க புதிய சட்டம்: மத்திய அரசு முடிவு
  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்க்கு தண்டனை வழங்க புதிய சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய கல்வி ஆலோசனைகுழுவின் 65வது கூட்டம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவருக்கும் கல்விசட்டம் 2009ஐ திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு - மத்திய அரசு
  • இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் அதிகளவில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. தத்தெடுக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதம் பெண் குழந்தைகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..
  •  ''2017-18ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட 12 ஆயிரத்து 273 குழந்தைகளில், பெண் குழந்தைகள் மட்டும் 60 சதவீதமாகும். தத்தெடுப்புக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் தத்தெடுப்பு 20 சதவீதம் வீழ்ச்சியை ச ந்தித்துள்ளது.
  • 014-15ம் ஆண்டில் 3 ஆயிரத்து 988 என்று இருந்த எண்ணிக்கை 2016-17ம் ஆண்டில் 3 ஆயிரத்து 120 ஆக குறைந்துள்ளது. 50 ஆயிரம் அனாதை குழந்தைகள் இந்தியா வசம் உள்ளபோதும் இதில் ஆயிரத்து 600 குழந்தைகள் மட்டுமே தத்து கொடுக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் ரீதியான பிரச்னைகளும், 2 வயதை கடந்த குழந்தைகளும் இருப்பது தான் தத்தெடுப்பு குறைவுக்கு காரணம். இந்திய குழந்தைகளை தத்தெடுத்தில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
  • கடந்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 134 குழந்தைகளை இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில் 69 சதவீதம், அதாவது ஆயிரத்து 481 பேர் பெண் குழந்தைகள் ஆவர்.
  • அமெரிக்கர்கள் 776 இந்திய குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். இதில் 566 பேர் பெண் குழந்தைகள். இதை தொடர்ந்து இத்தாலி 463 பெண் குழந்தைகள், ஸ்பெயின் 247 பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை தான் வெளிநாட்டு பெற்றோர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.
  • நாடுகளுக்கு இடையிலான தத்தெடுப்பில் மகாராஷ்டிரா 549 குழந்தைகளுடன் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து டில்லி 205 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் மகாராஷ்டிரா 2 ஆயிரத்து 771 குழந்தைகளை தத்தெடுத்து முதலிடத்தில் உள்ளது. இதில் ஆயிரத்து 543 பேர் பெண் குழந்தைகள். ஆயிரத்து 228 பேர் ஆண் குழ ந்தைகள் ஆவர். இதை தொடர்ந்து ஆயிரத்து 140 குழந்தைகளுடன் கர்நாடகாவும், 786 குழந்தைகளுடன் மேற்குவங்கம் 3ம் இடத்திலும் உள்ளது.
இந்தியா - இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இந்தியா - இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
  • 15 ஆண்டுகளுக்கு பிறகு 6 நாள் பயணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய வந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • இரு தரப்பினருக்கும் இடையே ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து, இந்தியா - இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர் பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment