Sunday, 14 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 13th JANUARY 2018

'உதய்' திட்டத்தால் தமிழகத்திற்கு தாராளம் ஓராண்டில் கிடைத்தது ரூ.26,471 கோடி

  • உதய் திட்டத்தில், தமிழகம் இணைந்த ஓராண்டிற்குள், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், 26 ஆயிரத்து 471 கோடி ரூபாய் கடன் வழங்க, மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் நிதி நெருக்கடியை சரி செய்ய, 'உதய்' என்ற மின் திட்டத்தை துவக்கியது. 
  • இத்திட்டத்தில், 'மாநில அரசுகள், மின் வாரிய கடனில், 75 சதவீதம் ஏற்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணம் மாற்ற வேண்டும்; எதிர்காலத்தில், மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்புகளை, மாநில அரசு ஈடுசெய்ய வேண்டும்' என்பது உட்பட, பல நிபந்தனைகள் இருந்தன.அவற்றை தளர்த்துமாறு, தமிழகம் விடுத்த கோரிக்கையை, மத்திய மின் துறை ஏற்கவில்லை. 
இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை: பிபின் ராவத்

  • இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே விரைவில் ஹாட்லைன் சேவை துவங்கப்பட உளளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை செயல்பட்டு வருகிறது. 
  • இந்தியா மற்றும் சீனா நாடுகளின் ராணுவத்துக்கு இடையில் விரைவில் ஹாட்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நாட்டு எல்லைகளில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து உடனடியாக தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். ஹாட்லைன் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் எடுத்து வருகிறது. சீனா ராணுவமும் இதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது என்றார்.
காச நோயாளிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை - மத்திய அரசு திட்டம்

  • காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • காச நோய் முற்றிலும் குணமடையும் வரை இந்த உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 25 லட்சம் நோயாளிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மருந்து வாங்குவதற்கு, சத்தான உணவு வகைகளை சாப்பிடவும் இது உதவியாக இருக்கும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள், ஆதார் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 8.4%-ஆக அதிகரிப்பு

  • இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் சென்ற நவம்பரில் 8.4 சதவீதமாக அதிகரித்தது. இது, கடந்த 17 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
  • 2017-ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்தது. சென்ற 2016 நவம்பரில் இது 5.1 சதவீதமாக காணப்பட்டது.
  • இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூனில் தான் 8.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. அதற்கு பிறகு 17 மாதங்கள் கழித்து சென்ற ஆண்டு நவம்பரில் தான் அது இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. 
  • இந்திய தொழிலக உற்பத்தி விகிதத்தை கணக்கிடுவதில் 77.63 சதவீத பங்களிப்பைக் கொண்ட தயாரிப்பு துறையின் உற்பத்தி சென்ற நவம்பரில் 10.2 சதவீதமாக வளர்ச்சி கண்டது. 2016 நவம்பரில் இது வெறும் 4 சதவீதமாகவே காணப்பட்டது.
  • பொறியியல் பொருள்கள் உற்பத்தி 5.3 சதவீதத்திலிருந்து அதிகரித்து 9.4 சதவீதமாகவும், நுகர்வோர் சாதனங்கள் சாராத தயாரிப்புத் துறை நிறுவனங்களின் உற்பத்தி 3.3 சதவீதத்திலிருந்து பல மடங்கு உயர்ந்து 23.1 சதவீதமாகவும் இருந்தன. 
  • இதற்கு, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களின் விற்பனை வேகமெடுத்ததே முக்கிய காரணம். அதேசமயம், சுரங்கத் துறை உற்பத்தி 2017 நவம்பரில் 1.1 சதவீதமாக சரிந்தது. 2016 நவம்பரில் இது 8.1 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது.
  • இதேபோன்று, மின் துறை நிறுவனங்களின் உற்பத்தி 9.5 சதவீதத்திலிருந்து குறைந்து 3.9 சதவீதமாக இருந்தது. தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி 6.8 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்து 2.5 சதவீதமானது.
  • கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தயாரிப்புத் துறையில் மொத்தமுள்ள 23 தொழிற்பிரிவுகளில் 15 சென்ற நவம்பரில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி

  • இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூ.294 கோடி நிதி உதவியாக அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தை முழுமையான வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும், பிராந்திய கடற்பகுதி துறைமுகங்களில் காங்கேசன்துறை துறைமுகத்தை இணைக்கும் விதமாக இந்த உதவியை இந்தியா அளிக்க முன்வந்துள்ளது.
  • 'இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது' என்று கூறப்பட்டு உள்ளது.காங்கேசன்துறை துறைமுகம் மேம்படுத்தப்படும்போது, யாழ்ப்பாண தீபகற்பம் உள்ளிட்ட இலங்கையின் இதர பகுதிகளையும், இந்தியாவையும் இணைக்கும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment