Friday, 12 January 2018

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS JANUARY 2018 TAMIL PDF - 11th JANUARY 2018

சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்று அசத்தினார் ஆஞ்சல் தாக்குர்
 • சர்வதேச ஸ்கி (பனிச்சறுக்கு) போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஆஞ்சல் தாக்குர் (21) வெண்கலப் பதக்கம் வென்று சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 • துருக்கியில் நடைபெற்ற சர்வதேச ஸ்கி போட்டியின் ஸ்லாலம் பந்தயப் பிரிவில் 3-வது இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார் ஆஞ்சல்.
தமிழகத்தில் உள்ள அரசு நூலங்களில் ரூ.2.17 கோடியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி
 • பிப்ரவரி முதல் தமிழகத்தில் உள்ள அரசு நூலங்களில் ரூ.2.17 கோடியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி அளிக்கபடும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 • தமிழகத்தில் உள்ள 314 முழு நேர நூலங்கள் ரூ.2 கோடியில் கணினி மயமாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
புதிதாக அரசு ஊழியர்களை நியமிக்கத் தடை; புதுச்சேரி நிதித்துறை உத்தரவு
 • புதுச்சேரி அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதன் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்குக்கூட சம்பளம் போட முடியாத சூழல் நிலவி வருகின்றது. கடுமையான இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக 7 பக்கங்களைக் கொண்ட பல்வேறு உத்தரவுகளை புதுச்சேரி அரசுக்கு பிறப்பித்திருக்கிறது புதுச்சேரி நிதித்துறை.
ஆதாருக்கு பதிலாக "16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி" மத்திய அரசு 
 • ஆதாருக்கு பதிலாக "16 எண்கள் கொண்ட விர்ச்சுவல் ஐடி".. மத்திய அரசு அதிரடி..!
 • ஒரு முறை இந்த VIRTUAL ID பெற்று விட்டால், இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதம் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.
 • மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல்,இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வர உள்ளது. அதாவது எங்கெல்லாம் VIRTUAL எண்ணை பயன்படுத்த வேண்டுமோ...அது குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிப்பு
 • ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்துறை உதவி இயக்குநர் நடராஜன் செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார். 
 • கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையச் சுற்றி சோதனை செய்யப்பட்டது.
ஜூலியன் அசேஞ்சிற்கு ஈக்வடார் அரசு குடியுரிமை வழங்கியது
 • விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச்க்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை அளித்து உத்தரவிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜூலியன் அசேஞ்ச்,49, விக்கிலீக்ஸ் இணைய தள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 
 • 2012 -ம் ஆண்டு சுவீடனில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகும் நிலை ஏற்பட்டதால் லண்டன் தப்பியோடினார். நாடு கடத்தி செல்லப்படுவதிலிருந்து தப்பிக்க அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து வருகிறார்.
 • மேலும் பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய அசேஞ் பிரச்சனை தீர்த்து வைக்கபடுகிறது.இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசேஞ்ச் விரைவில் ஈக்வடார் செல்வார் என தெரிகிறது.
எழுத்தாளர் மாலனுக்கு 'பாரதிய பாஷா' விருது
 • நாட்டின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படும் 'பாரதிய பாஷா' விருது, தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு நிகழாண்டு வழங்கப்படவுள்ளது.
 • கடந்த ஆண்டுகளில், அசோகமித்ரன், ஜெயகாந்தன், சாண்டில்யன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, சி.ஆர்.ரவீந்தரன், லக்ஷ்மி, பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
 • 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் மாலன், இலக்கிய உலகில் பல சிறப்புகளைப் பெற்றவர். இவர் 20 -க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கதைகள் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் மட்டுமின்றி சீனம், மலாய், பிரெஞ்சு போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 
நாணயம் தயாரிப்பை நிறுத்தியது மத்திய அரசு
 • நாணயம் தயாரிக்கும் ஆலைகளில் நடைபெற்று வரும் நாணயத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஆலைகளின் பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 • மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் மத்திய அரசுக்குச் சொந்தமான நாணயத் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன. 

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment