Tuesday, 7 November 2017

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF - 7th NOVEMBER 2017

 • ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சவூதி அரேபியா இளவரசர் உயிரிழந்தார். ஏமன் நாட்டு எல்லை அருகே நடந்த விபத்தில் இளவரசர் முகமது பின் சல்மான் உயிரிழந்தார். இந்த தகவலை அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
 • தொலைத்தொடர்பு துறையின் தமிழ்நாடு பிரிவின் முதல் பெண் முதுநிலை கூடுதல் இயக்குநராக( Deputy Director General) "என்.பூங்குழலி" (N Poonguzhali) நியமிக்கப்பட்டுள்ளார்
 • ஒடிசா மாநிலத்தில் வருடந்தோறும் கொண்டாடப்படும் "பலி ஜாத்ரா" திருவிழா மகாநாதி நதியில் தொடங்கியுள்ளது
 • சீனாவில் நடைபெற்ற ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டை பிரிவில் இந்தியாவின் "விஷ்ணுவர்தன்- ஸ்ரீராம் பாலாஜி" ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
 • சீனாவில் நடைபெற்ற எலைட் டிராபி டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் "ஜீலியா ஜியார்ஜஸ்" (JULIA GOERGES) பட்டம் வென்றுள்ளார்
 • பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நகரங்களில் பொதுப் போக்குவரத்துக்காக பேட்டரியில் பேருந்து, மினி பேருந்து உள்ளிட்டவற்றை வாங்கினால் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 • பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க FAME india திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது
 • FAME india திட்டத்தின் ஒரு பகுதியாக 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் பொதுப் போக்குவரத்துக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது
 • இத்திட்டத்தில் சேரும் நகரங்களுக்கு 105 கோடி ரூபாய் அரசு நிதி கிடைக்கும். சார்ஜ் மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதலாக 15கோடி ரூபாய் வழங்கப்படும்
 • "தெலுங்கானா" மாநிலத்தில் விவசாயத்துக்கு தரமான மற்றும் இடைநில்லாத மின்சாரத்தை பரிசோதனை முயற்சியாக 24 மணி நேரமும் இன்று முதல்(Nov 7,2017) முதல் விநியோகம் செய்வதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது
 • ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், காட்டுக்குள்ளேயே சென்று விலங்குகளைப் பார்க்கும் வகையில் ★ வண்ணப் பூரணி ★ என்ற புதிய சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • 117 ஆண்டுகளுக்கு முன்னர் 1900ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் பள்ளியில் சேர்க்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ம் தேதியை “மாணவர் தினம்” ஆக கடைப்பிடிக்கும்படி மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் அமைதி தீர்வுக்கான வரைவு ஒப்பந்தம் - 'ஷியா வக்பு வாரியம்' தகவல்
 • அயோத்தி பிரச்சினைக்கு அமைதி தீர்வுக்கான வரைவு ஒப்பந்தத்தை ‘ஷியா மத்திய வக்பு வாரியம்’ தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
 • உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
 • இந்த வழக்கில் 2010–-ம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
 • உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகளாக இது தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றை விசாரணை மேற்கொள்வதற்காக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், எஸ்.ஏ. நசீர் ஆகியோரை கொண்ட 3 பேர் அமர்வை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் அமைத்து உத்தரவிட்டார்.
 • இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 30 பக்க பிரமாண பத்திரம் ஒன்றை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷியா மத்திய வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்தது.
 • அதில், பாபர் மசூதியை இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்கு மாற்றலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி பிரிவு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 • இதற்கிடையில் உத்தர பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம் அயோத்தியா விவகாரத்தில் அமைதி தீர்வு எட்டுவதற்காக டிசம்பர் 6-ந்தேதிக்குள் வரைவு ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 • அந்த வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி இந்து துறவிகள் மற்றும் தலைமை மதகுரு ஆகியோரை சந்திப்பதற்காக அயோத்தியாவிற்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
 • இந்த விவகாரத்தில் பரஸ்பரம் தீர்வு ஏற்படுவதற்காக வரைவு ஒப்புதல் ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றி முன்பே ஆலோசனை மேற்கொண்டதாகவும் ரிஸ்வி கூறியுள்ளார்.
டாப்-10க்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி
 • தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தற்போது நல்ல காலம் பிறந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆசியக் கோப்பை வென்றதுடன், அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது, மகளிர் அணி உலகத் தரவரிசையில் முன்னேறியுள்ளது
 • சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கியில் ஆடவர் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் கோப்பையை வென்று இந்திய ஹாக்கி அணிகள் அசத்தின. கடந்த, 2004ல் சென்னையில் கோப்பையை வென்ற பிறகு, இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று மகளிர் அணி அசத்தியது.
 • இந்த அசாத்திய சாதனையுடன், உலகத் தரவரிசையில் 12வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இந்திய ஆடவர் அணி, தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளது.
பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் பிரிட்டன் ராணி
 • பனாமா பேப்பர்ஸை தொடர்ந்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளிநாடுகளில் உலக விவிஐபிக்களின் சட்டவிரோத முதலீடு பட்டியல் வெளியாகியுள்ளது.
 • இதில், சிறிய தீவு நாடுகளில் பிரிட்டன் ராணி எலிசபெத் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் பெயரும் உள்ளது.
 • கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகின. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியது அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு பனாமா பேப்பர்¬ஸ் வெளியிட்டது.
 • இதைத் தொடர்ந்து, அதே அமைப்பு தற்போது பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடு ஆலோசனைகளை அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் இரு நிறுவனங்கள் வழியாக 19 வரியில்லா சொர்க்கங்களில் முதலீடு செய்துள்ளவர்கள், அங்குள்ள வங்கிகளில் பெரும் தொகை வைத்துள்ளவர்கள் குறித்து 1.34 கோடி ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 • இதில் பிரிட்டன் ராணி எலிசபெத், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜீஸ், அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ், இந்திய மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 • எலிசபெத் ராணியின் சார்பில் கேமென் தீவுகள், பெர்முடா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். பெர்முடாவில் உள்ள நிறுவனத்தில் 50 லட்சம் பவுண்ட் தொகையை கடந்த 2004-ம் ஆண்டில் முதலீடு செய்துள்ளார். அதனை 2010-ம் ஆண்டில் திரும்பப் பெற்றார்.
 • கேமென் தீவுகளில் அமைந்த ஒரு நிதி நிறுவனத்தில் 75 லட்சம் பவுண்டை 2005ம் ஆண்டில் முதலீடு செய்துள்ளார். பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் ராணி பெயர் இடம் பெற்றது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 • அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் ரஷிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள விவரமும் பாரடைஸ் ஆவணம் மூலம் தெரிய வந்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிர்பாய்
 • இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நிர்பாய் ஏவுகணை இன்று பகல் 11.20 மணிக்கு ஒடிசா மாநில கடற்கரை அருகே உள்ள சந்திப்பூரிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 300 கிலோ வெடிப் பொருள்கள் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்த நிர்பாய் ஏவுகணைச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
 • முதன்முறையாக நிர்பாய் ஏவுகணைச் சோதனை 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி நடத்தப்பட்டது. பாதுகாப்பு அபாய காரணங்களால் பாதியிலேயே அந்தச் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி நான்காவது ஓட்டம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், 700 விநாடிகளிலேயே அந்த ஏவுகணை செயல் இழந்தது.
 • ஆனால் இப்போது, சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தன்னுடைய ஐந்தாவது முயற்சியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment