Tuesday, 28 November 2017

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF - 28th NOVEMBER 2017

இந்திய ராணுவத்தில் முதல் முறையாக 'நாட்டு நாய்' சேர்ப்பு - ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணி
 • கர்நாடகத்தில் உள்ள ‘முதோல் ஹவுண்ட்’ என்ற நாட்டு இன நாய் முதல்முறையாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி தனது படையில் ‘முதோல் ஹவுண்ட்’ நாய்களுக்கு என தனிப்பிரிவு வைத்து இருந்துள்ளார். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் இந்த வகை நாய் ஒழிக்கப்பட்டு, வெளிநாட்டு நாய்கள் சேர்க்கப்பட்டன.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய அணி வெள்ளிப் பதக்கம்
 • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 
 • அபிஷேக், ஜோதி அடங்கிய அணி இறுதிப் போட்டி வரை சென்று கொரிய அணியிடம் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கோவா திரைப்பட விழா நிறைவு
 • 48-வது சர்வதேசத் திரைப்படத் திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா இன்றோடு நிறைவடைகிறது.
 • சர்வதேச திரைப்பட விழாவின் இறுதிநாளான இன்று சிறந்த படங்களுக்கு விருதளிக்கப்படுகிறது. 
 • ராபின் காம்பில்லோ இயக்கிய பிரெஞ்ச் திரைப்படமான '120 பிபிஎம்' கோல்டன் பீக்காக் விருது பெறுகிறது. இந்த விருதுதான் IFFI திரைப்பட விழாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
 • சிறந்த திரப்படத்திற்கான விருதை வென்ற '120 பிபிஎம்' படத்தில் நடித்த நடிகர் நேஹியல் பெரேஸ் பிஸ்கயார்ட் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.
 • சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதை 'ஏஞ்சல்ஸ் வியர் வொய்ட்' எனும் சீனப் படத்தை இயக்கிய விவியன் க்யூ எனும் பெண் இயக்குநர் பெறுகிறார்.
 • 'டேக் ஆஃப்' மலையாளப் படத்தை இயக்கிய மகேஷ் நாராயனுக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு வழங்கப்படுகிறது. ஈராக்கில் பணியாற்றும் இந்தியச் செவிலியர் அனுபவிக்கும் துயரக் காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தும் திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக ஃபஹத் பாசில் நடித்திருக்கிறார்.
 • சிறந்த நடிகைக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெறுகிறார் மலையாள நடிகை பார்வதி. 'டேக் ஆஃப்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • இந்த ஆண்டின் மதிப்புமிக்க திரையுலக ஆளுமை விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ஸ்மிருதி இராணி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் வழங்கினர்.
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் : பிரதமர் உத்தரவு
 • தேனியில் நியூட்ரினோ ஆய்வ மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 
 • இதனையடுத்து நியூட்ரினோ ஆய்வ மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 • இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
67 வயதில் பட்டம் பெற்ற செல்லத்தாய்; வக்கீலாக போகிறார் வரலாறு படைத்த மூதாட்டி
 • தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி, எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றார். கணவனை இழந்த தன்னை, மகள்கள் கைவிட்ட நிலையில், சட்டம் படிக்க உள்ளதாக, அவர் சூளுரைத்தார்.
 • திறந்தநிலை பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, சென்னையில், நேற்று நடந்தது. கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கினார். 16 ஆயிரத்து, 879 பேர், பட்டம் மற்றும் பட்டயங்கள் பெற்றனர். 
 • விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் பிறந்த செல்லத்தாய், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரை, திருமணம் செய்துள்ளார். தங்களின், மூன்று பெண் பிள்ளைகளை, முதுநிலை படிப்பு வரை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளனர்.'சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தில், கோபாலபுரம் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த செல்லத்தாய், 2009ல், ஓய்வு பெற்றார். 
ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சத்தியன் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்...
 • ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜி.சத்தியன் தங்கப் பதக்கம் வென்றார்.
 • இது, சத்தியன் வெல்லும் 2-வது முக்கியமான பட்டமாகும். முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் ஓபனில் அவர் பட்டம் வென்றிருந்தார்.
 • மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா - மெளமா தாஸ் இனை போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் ஜிஹீ ஜியோன்-ஹேன் யாங் இணையிடம் மோதியது.
 • இதில், 11-9, 6-11, 11-9, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் தென் கொரிய இணையிடம் வீழ்ந்ததால் இந்திய இணைக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.
காலாவதியான பேருந்துகள்: இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்
 • இந்தியாவிலேயே அதிக அளவில் காலாவதி பேருந்துகளை இயக்கும் நகரம் எது என்பது குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் துரதிஷ்டவசமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 
 • சென்னை நகரில் உள்ள மாநகர பேருந்துகளில் 73% காலாவதி பேருந்துகள் என்றும், இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அந்த பட்டியலுடன் கூடிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • ஒரு மாநகர பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்ற நிலையில் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் 7 ஆண்டுகளையும் கடந்து ஓடுவதால் உடனடியாக புதிய பேருந்துகளை சென்னை போக்குவரத்து கழகம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராக பிரதீப் சிங் கர்லா நியமனம்
 • ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராக பிரதீப் சிங் கர்லா நியமிக்கப்பட்டுள்ளார். 
 • ஜிஎஸ்டி அதீத லாப தடுப்பு ஆணையத்தின் தலைவராக பி.என்.ஷர்மாவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment