Saturday, 18 November 2017

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF - 18th NOVEMBER 2017

உலக அழகியாக ஹரியானாவை சேர்ந்த மனுஷி ஷில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • மனுஷி ஷில்லார் என்ற பெண் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 1997ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 20 வயதாகிறது. 
  • இவர் டெல்லியில் உள்ள சென்.தாமஸ் பள்ளியில் படித்தவர். ஹாரியானா மாநிலம் சோனி பேடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர். 
  • மனுஷி ஷில்லார் கடந்த ஜூன் மாதம் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார். 
  • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் மீண்டும் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கடந்த 2000ல் இந்தியாவை சேர்ந்த ப்ரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
கேரள அரசின் 'பசிபோக்கும் இலவச உணவுத் திட்டம்' - வரும் ஜன.1ந்தேதி தொடக்கம்
  • கேரளாவில் வாழும் மக்களில் பசியோடு இருப்பவர்களுக்கு ஒருவேளையாவது, தரமான உணவு அளிக்கும் இலவச உணவு வழங்கும் திட்டம் ஆழப்புழா நகரில் 2018ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • அதேசமயம், வெளியூரில் இருந்து வரும் வறுமையில் வாடும் மக்கள், பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி ரூ.10க்கும்,மதிய உணவு ரூ.20க்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
  • கேரள அரசின் இலவச உணவு அளிக்கும் திட்டம் என்பது, உண்மையில் பசியோடு இருப்பவர்களுக்கு, தரமான உணவை இலவசமாக, நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது வழங்குதல் ஆகும்.
  • இந்த திட்டம் சோதனை முயற்சியாக, முதலில் ஆழப்புழா நகரில் செயல்படுத்தப்பட உள்ளது. அதேசமயம், ஆழப்புழா நகருக்கு வரும் ஏழை மக்கள், பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவும் வழங்கப்படும்.
  • ஆழப்புழா,திருவனந்தபுரம் நகரில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆழப்புழாவில் தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.70 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. எங்கள் நோக்கம் காலை உணவு ரூ.10க்கும், மதிய உணவு ரூ.20க்கும் வழங்குவதாகும்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சுஷில் குமாரி, சாக்ஷி மாலிக், கீதா போகத் தங்கம் வென்று அசத்தல்
  • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகத் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
  • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 74 கிலோ பிரிவில் போட்டியிட்ட சுஷில் குமார், தனது முதல் சுற்றில் மிஸாரத்தின் லால்மல்சாவ்மாவை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றார். அதன்பின்னர் நடைப்பெற்ற 2-ஆவது சுற்றில் முகுல் மிஸ்ராவையும் தோற்கடித்து வெற்றி கண்டார்.
  • இந்த நிலையில் சுஷிலுடன் காலிறுதியில் மோதிய பிரவீண், அரையிறுதியில் மோதிய சச்சின் தாஹியா ஆகியோர் அடுத்தடுத்து போட்டியிலிருந்து விலக, சுஷில் குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
  • இறுதிச்சுற்றில் அவரது போட்டியாளர் விலக, மூன்று சுற்றிலும் மொத்தமாக இரண்டு நிமிடங்கள், 33 விநாடிகளே போட்டியிட்டு சுஷில் தங்கம் வென்றார்.
  • மகளிருக்கான 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் மற்றும் பூஜா தோமர் மோதினர். இதில், பூஜாவை வீழ்த்தி தங்கம் வென்று கர்ஜித்தார் சாக்ஷி மாலிக்.
  • அதேபோன்று 59 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ரவிதாவுடன் மோதினார் கீதா போகத். இருவருக்கும் இடையே நடைப்பெற்ற ஆட்டத்தில் ரவிதாவை வீழ்த்தினார் கீதா போகத். இதன்மூலம் தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கினார் கீதா.
பிளாஸ்டிக் இல்லா மாநிலம் மஹாராஷ்டிரா அதிரடி முடிவு
  • மஹாராஷ்டிராவில், அடுத்த ஆண்டு முதல், அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட, 13 மாநிலங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • இதை கண்காணிக்க, உயர்மட்ட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.இந்த மாநிலங்களை தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநிலத்திலும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. 
  • வரும், 2018 முதல், மாநிலம் முழுவதும், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், உணவகங்களில், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தடையை மீறுவோருக்கு, சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். ஓட்டல்கள், உணவகங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பது தெரிய வந்தால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
அரசுக்கு சொத்துக்களை எழுதிக்கொடுத்தால் விடுதலை: சவுதி அரேபியா
  • ஊழல் குற்றசாட்டுகளில் கைதானவர்கள் சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா நிபந்தனை விதித்து உள்ளது.
  • சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 
  • குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது.குழு அமைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இளவரசர்கள், பெரும் பணக்காரர்கள், அமைச்சர்கள் என இதுவரை 200 பேரை ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்துள்ளது சவுதி அரசு. ஊழல் குற்றங்களால் சவுதியின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதே இளவரசர் சல்மானின் நோக்கமாம்.
  • இந்நிலையில், பல்வேறு ஊழல் குற்றங்களின் கீழ் கைதாகியுள்ள பெரும் புள்ளிகள், தங்களின் 70 சதவிகித சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு நிபந்தனை வைத்துள்ளதாக சவுதி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் அனைத்து அரசு சேவைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாகிறது
  • கர்நாடகா மாநிலத்தில் இனி அனைத்து விதமான சேவைகளை பெறவும், ஆதார் அட்டை கட்டாயம் என சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி இனி சாதி சான்றிதழ் தொடங்கி வருமான வருமான சான்றிதழ் வரை அனைத்தையும் பெற ஆதார் கட்டாயம் ஆகி உள்ளது.
  • இதற்காக இ- சைனிங், இ- லாக்கர் என நிறைய புதிய தொழில்நுட்பங்கள் பல கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவிலேயே கர்நாடகாவில் மட்டும் இந்த சட்டம் முதன் முதலாக அமலுக்கு வருகிறது.
  • இந்த புதிய சட்டம் மக்களின் நேரத்தையும், செலவையும் குறைக்கும் எனப்படுகிறது. மேலும் இதன்முலம் மக்கள் பெரிய அளவில் பயன் அடைவார்கள் என்று கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.முதல்வரே கவனிப்பார் .
  • கர்நாடக மாநிலத்தில் இனி எல்லா அரசு சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை ஆன்லைனில் பெற ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாம் ஆதார் விவரங்களை அளிக்கும் பட்சத்தில் சான்றிதழ்கள் ஆன்லைனில் நமக்கு வழக்கப்படும். இந்த செயல்பாடு அனைத்தும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
  • இதன்படி கர்நாடகாவில் இருக்கும் மக்களுக்கு தனியாக 'இ- லாக்கர்' வழங்கப்படும். ஆன்லைனில் பெறும் சான்றிதழ்கள் அனைத்தும் இந்த இ- லாக்கரில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்படும். பின் அதை நாம் தேவைபடும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் என அனைத்து விதமான முக்கிய ஆவணங்களும் இனி இந்த முறையின் மூலமே அளிக்கப்படும். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனியாக இ- லாக்கர் அளிக்கப்படும்.
  • மேலும் இதற்காக 'இ- சைனிங்' எனப்படும் மின்னணு கையெழுத்து முறையை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இ- சைனிங் மூலம் மட்டுமே சான்றிதழ்கள் அடங்கி இருக்கும் இ- லாக்கரை திறக்க முடியும். அதன் மூலம் நம்முடைய சான்றிதழ்களை நாம் மட்டும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
  • மேலும் இதன் காரணமாக மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று மணிக்கணக்கில் நிற்க வேண்டாம் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதற்கான செலவு அனைத்தையும் கர்நாடக மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். ஒரு சான்றிதழ் வழங்க இந்த முறையின் மூலம் 5 ரூபாய் செலவு ஆகும் என கர்நாடக அரசு கணித்துள்ளது.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 95,131 கோடி
  • அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் 95,000 கோடி ரூபாய் என பீகார் துணை முதல்வரும், ஜி.எஸ்.டி. அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
  • ஆகஸ்ட் மாதத்தில் மாநில அரசுகளின் வருவாய் இழப்பு 28.4 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 17.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் இது 12 ஆயிரத்து 208 கோடியில் இருந்து 7 ஆயிரத்து 560 கோடியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • இது ஒரு நல்ல அறிகுறி என்று கூறியுள்ள சுஷில் மோடி, படிப்படியாக ஜிஎஸ்டி முறை தன்னை காலூன்றிக் கொள்வதை இது உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். நாட்டின் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.93,141 கோடியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு இந்திராகாந்தி அமைதி விருது
  • அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்திரா காந்தி விருது, இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கிடைத்துள்ளது.
  • தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காகவும், பருவ நிலை மாறுபாடு விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், மன்மோகன் சிங்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திரா காந்தி உயிரிழந்த பின் சர்வதேச அளவில் வழங்கப்பட்டு வரும் இந்த விருது கடைசியாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கும், ஐ.நா.வின் அகதிகள் நல அமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment