Wednesday, 15 November 2017

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF - 15th NOVEMBER 2017


கர்நாடகா மூட நம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் அமுல்!
 • கர்னாடகா சட்டசபையில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதா வெகு நாட்களாக அமுலுக்கு வராமல் இருந்து வந்தது. அந்த மசோதாவை பா ஜ க கடுமை ஆக எதிர்த்து வந்தது. அதில் குறிப்பிட்ட பல நம்பிக்கைகளில் பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருண்டால் புண்ணியம் என்பதும் ஒன்றாகும் 
 • இதில் 16 நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை
1. பேய் ஓட்டுதல், சூனியம், நரபலி, மனோவசியம், மற்றும் கெட்ட மந்திர நடவடிக்கைகள்

2. தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வேண்டுதல்கள்

3. சிறு குழந்தைகளை ஆணிப் படுக்கையில் வீசி எறிதல்

4. பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தல்

5. அனைவர் முன்னிலையில் பாலியல் செய்கைகளை செய்ய சொல்லுதல்

6. மிருகங்களை கழுத்டை அறுத்துக் கொல்லுதல்

7. அலகு குத்திக் கொள்ளுதல்

8. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதை தடுப்பது

 • மேற்கூறிய குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இதை செய்வோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சமாக ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் கூறுகிறது.
மருத்துவர்களின் ஓய்வு வயதை உயர்த்தியது கேரளா அரசு
 • மருத்துவர்களின் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது கேரளா அரசு. சுகாதாரத் துறையில் இதுவரை 56 ஆக இருந்த ஓய்வு வயது, தற்போது 60 ஆகவும், மருத்துவ கல்வித் துறையில் 60 ஆக இருந்த ஓய்வு வயது, தற்போது 62 ஆகவும் உயர்த்தப்படும். 
 • பொது சுகாதார சேவையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
 குச்சுபுடி கலைஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 • பிரபல குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்கு 'பாரதிய வித்யா பவன்' சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சென்னையில் வரும் சனிக்கிழமை (நவ.19) நடைபெறும் விழாவில் ஷைலஜாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விருதை வழங்குகிறார்.
 • சென்னையைச் சேர்ந்த ஷைலஜா பரதநாட்டியம், குச்சுபுடி போன்ற பாரம்பரிய நாட்டியக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். குச்சுபுடி நடனக் கலைக்கு கடந்த 40 ஆண்டுகளாக இவர் ஆற்றி வரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். 
 • வெளிநாட்டு மாணவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குச்சுபுடி நடனக் கலையைப் பயிற்றுவித்தவர். பாரதிய வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் குச்சுபுடி நடனக் கலைஞர் ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத பகுதிக்கு ராஜாவாக அறிவித்துக் கொண்ட இந்தியர்
 • ஆப்ரிக்க நாடுகளான எகிப்து மற்றும் சூடானுக்கு இடையே, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத நிலப் பகுதிக்கு சென்றுள்ள இந்தியரான சுயாஷ் தீட்சித், 24, அந்தப் பகுதியை தனக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். 
 • அதற்கு, தீட்சித் ராஜ்ஜியம் என்றும் பெயரிட்டு, தன்னை அதன் மன்னராகவும் அறிவித்துக் கொண்டுள்ளார். 5.10 லட்சம் ஏக்கர் ஆப்ரிக்க நாடுகளாக எகிப்து மற்றும் சூடான் எல்லையில் அமைந்துள்ளது பிர் தாவில் என்ற, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி. 
 • எகிப்து, சூடான் இடையே, 1899ல் நிலப்பரப்பு நிர்ணயிக்கப்பட்டபோது, உலகில் மக்களே வசிக்காத அந்தப் பகுதியை இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடவில்லை.அதையடுத்து, 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலப் பகுதி, எந்த நாட்டுக்கும், யாருக்கும் சொந்தமில்லை என்று வரையறுக்கப்பட்டது. 
 • மிகுந்த மோசமான வானிலை, முழுவதும் பாலைவனம், கற்கள் நிறைந்த இந்தப் பகுதியை, 'மனிதர்கள் வாழலாம். ஆனால் யாருக்கும் உரிமை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மொபைல் நம்பருடன் ஆதாரை இணைக்க ஓடிபி வசதி!
 • அதை போக்கும் வகையில், மொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • மொபைல் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம் அடுத்த வருடம் பிப்ரவரி 6ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டியதிருப்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. 
சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை
 • சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
 •  முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. 
 • இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment