Friday, 27 October 2017

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS OCTOBER 2017 TAMIL PDF - 28th OCTOBER 2017


'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்
  • தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 
  • மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.
  • தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.
  • முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு ரூ.10 கோடி நிதி
  • அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக பத்து கோடி ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
  • தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியும். 
  • தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வதற்கும், அமெரிக்க நூலகங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்திய வீரர் அமன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்
  • உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அமன்பிரீத் சிங் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். 50 மீட்டர் ஆண்கள் பிரிவுக்கான இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. 
  • இந்த போட்டியில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். செர்பியாவை சேர்ந்த டாமிர் மிகெக் தங்கமும், உக்ரைனை சேர்ந்த ஒலே உமுல்சுக் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment