Wednesday, 11 October 2017

நோபல் பரிசு 2017 (NOBEL PRIZE)

2017 ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR ECONOMICS 2017)

  • பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை, அமெரிக்காவை சேர்ந்த, பிரபல பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், 72, பெறுகிறார்.அமெரிக்காவின், சிகாகோ பல்கலையை சேர்ந்த பொருளாதார நிபுணர், ரிச்சர்ட் தாலெர், மனிதப் பண்புகள், எவ்வாறு, தனி நபரின் முடிவுகளை பாதிக்கின்றன. அதன் விளைவால், சந்தைகளில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பான விளக்கம் அளித்தவர். 
  • தாலெர், 'நடத்தை பொருளாதாரம்' என்ற துறையில், முன்னோடியாக திகழ்கிறார். இதில், உளவியல் ஆய்வின் அடிப்படையில் அறியப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு, பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், அவர், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நோபல் கமிட்டி கூறியுள்ளது. தாலெருக்கு, நோபல் பரிசுடன், ஏழு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

2017 ம் ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR PEACE 2017)
  • அணு ஆயுதத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வரும், 'ஐகேன்' எனப்படும், 'அணுஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம்' என்ற அமைப்புக்கு, 2017ம் ஆண்டுக்கான, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஐகேன்' என்றழைக்கப்படும், அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுடன், ஏழு கோடி ரூபாயும் இந்த அமைப்புக்கு கிடைக்கும்.கிழக்காசிய நாடான வடகொரியா, தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதுடன், பல்வேறு அணு ஆயுத சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. 
  • இந்த நிலையில், அணு ஆயுதத்துக்கு எதிரான அமைப்புக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ''அணு ஆயுத நாடுகளான, அமெரிக்கா, வட கொரியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு இந்த பரிசு மிகப் பெரிய செய்தியை அளித்துள்ளது. 
2017 ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR LITERATURE 2017)

  • ஜப்பானில் பிறந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் குடியேறிய எழுத்தாளர், கசுவா இஷிகுரோ, 62, இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக, அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.ஜப்பானின் நாகசாகியில் பிறந்து, 5 வயதில் பிரிட்டனுக்கு குடியேறிய, பிரபல எழுத்தாளர், கசுவா இஷிகுரோ, இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • அவருக்கு பரிசாக, 7 கோடி ரூபாய் வழங்கப்படும்.இஷிகுரோ எழுதிய,           'த ரிமைன்ஸ் ஆப் த டே' என்ற நாவல், உலகப் புகழ் பெற்றது. இதற்காக அவருக்கு, 1989ல், புக்கர் பரிசும் கிடைத்தது. எட்டு நாவல்கள், பல்வேறு சிறுகதைகள், திரைப்படம் நாடகங்களுக்கான கதைகளையும் எழுதியுள்ளார்.
2017 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு
 (NOBEL PRIZE FOR CHEMISTRY 2017)
  • இந்த ஆண்டின் வேதியல் துறைக்கான நோபல் பரிசி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
  • வேதியல் (கெமிஸ்ட்ரி) துறையில் மூவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
1. ஜேக்கஸ் டுபோசெட்
2. ஜொவசிம் ஃப்ரான்க்
3. ரிசர்ட் ஹெண்டெர்சன்
  • ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. படிக மின்னணு நுண்ணோக்கி எனப்படும் CRYO ELECTRON MICROSCOPY கண்டுபிடிப்புக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2017 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR PHYSICS 2017)
  • புவியீர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, அமெரிக்காவை சேர்ந்த, மூன்று விஞ்ஞானி களுக்கு, இந்தாண்டின், இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.ஒரு நுாற்றாண்டுக்கு முன், பிரபல விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன், சார்பியல் தேற்றத்தின் ஒரு பகுதியாக கணித்த, அண்டவெளி மற்றும் காலத்தில், புவியீர்ப்பு அலைகள் குறித்த உண்மைகள், 2015ல், கண்டுபிடிக்கப்பட்டன. 
  • இந்த அலைகள், அண்ட வெளியில் கருந்துளைகள் மோதுவது உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்படுவதாக, அமெரிக்காவை சேர்ந்த, வான் இயற்பியல் விஞ்ஞானிகள், பேரி பாரிஸ், கிப் தார்னே, ரெய்னர் வெய்ஸ் ஆகியோர் கண்டுபிடித்தனர். இது, மிகப்பிரமாண்டமான அண்டம் பற்றி அறிந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்தியது. 
  • உலக விஞ்ஞானிகள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய மூன்று விஞ்ஞானிகளும், இந்தாண்டின், இயற்பியலுக்கான, நோபல் பரிசுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவீடனை சேர்ந்த, ராயல் அகாடமி ஆப் சயின்சஸ், இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது; மூன்று விஞ்ஞானிகளுக்கும், ஏழு கோடி ரூபாய் பரிசு பகிர்ந்தளிக்கப்படும். 
2017 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 
(NOBEL PRIZE FOR MEDICAL 2017)
  • 2017 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மருத்துவத்திற்கான நோபஸ் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 3 பேருக்கு சேர்ந்து பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
  • 2017ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்துள்ளார்.
  • 'இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஜெபி சி.ஹால், மைக்கேல் ரோஷ்பஷ், மைக்கேல் டபிள்யூ.யங் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சி (உயிர் கடிகாரம்) செயல்படும் முறையை (molecular mechanisms controlling the circadian rhythm)மூலக்கூறுகளின் செயல்பாடுகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக கண்டறிந்ததற்காக மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.
  • நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் இந்திய மதிப்பில் ரூ.7 கோடி பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment